வேலூர் ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி திடீர் மரணம்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்பு இருந்தது.
வேலூர் ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி திடீர் மரணம்
Published on

வேலூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் கீழமங்கலத்தைச் சேர்ந்தவர் தசராஜ் (வயது 96). அந்த பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்பு இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு தசராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தசராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com