search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிம்கார்டு"

    • செயற்கை நுண்ணறிவு பிரிவு மற்றும் முக அங்கீகாரம் செய்யும் மென்பொருள் மூலம் சிம்கார்டு மோசடியை கண்டறிந்தனர்.
    • யார் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள் என விசாரணை நடத்தபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், சத்திய நாராயணபுரத்தை சேர்ந்தவர் நவீன். இவர் ஒரே போட்டோவை வைத்து போலி ஆவணங்கள் மூலம் 658 சிம் கார்டுகளை வாங்கி உள்ளார்.

    நவீன் ஒரே போட்டோ மூலம் 658 சிம் கார்டு வாங்கியது தொலை தொடர்பு துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

    இதுகுறித்து தொலை தொடர்பு துறை செயற்கை நுண்ணறிவு பிரிவு மற்றும் முக அங்கீகாரம் செய்யும் மென்பொருள் மூலம் சிம்கார்டு மோசடியை கண்டறிந்தனர்.

    சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் நவீன் போலி ஆவணங்களை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் சிம் கார்டுகளை வாங்கியது தெரியவந்தது.

    இதேபோல் வேறு ஒரு வாலிபர் அஜித் சிங் நகர், விஷ்னா பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் 150 சிம் கார்டுகள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகள் அடையாளம் கண்டு சிம் கார்டுகளை செயலிழக்க வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்ட சிம்கார்டுகள் சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி இருந்தால் பல்வேறு பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகள் தற்போது எங்கே யாரிடம் உள்ளது.

    யார் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள் என விசாரணை நடத்தபட உள்ளதாகவும் தெரிவித்தனர். ஒரே போட்டோ மூலம் வாலிபர் ஒருவர் 658 சிம் கார்டுகள் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திண்டுக்கல் மாவட்ட மொபைல் போன் ரீடெய்லர் அசோசியேசன் சார்பில் மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.
    • சாலை ஓரங்களில் சிம்கார்டுகளை விற்பதை தடுக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட மொபைல் போன் ரீடெய்லர் அசோசியேசன் சார்பில் மாவட்ட எஸ்.பி.யிடம் தலைவர் சேக்பரீத், செயலாளர் சேக்பரீத் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

    அவர்கள் தெரிவிக்கை யில் நாளுக்குநாள் அதி கரித்து வரும் செல்போன் உபயோகத்தில் சிம்கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த கார்டுகளை நிறுவனங்களில் திண்டுக்கல் மாவட்ட டிஸ்டிரிபியூடர்கள் விற்பனையை மட்டுமே நோக்கமாக கருதி முறை யின்றி சாலையோரங்களில் இலவசமாகவும், குறைந்த விலையிலும் குடைபோட்டு விற்பனை செய்து வரு கின்றனர்.

    இதை பொதுமக்கள் வாங்கி 1 மாதம் மட்டுமே உபயோகித்து விட்டு பாதுகாப்பற்ற முறையில் தூக்கி எறிகின்றனர். இதனை ஒருசிலர் எடுத்து தவறான செயலுக்கு பயன்படுத்துவதால் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேறு மாநில நபர்கள் குறிப்பாக வடமாநிலத்தவர் எந்தவித ஆவணங்களையும் காட்டாமல் சிம்கார்டுகளை பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.

    எனவே இதுபோன்ற விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என மனு அளித்துள்ளோம் என்றனர்.

    ×