search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Keshav Maharaj"

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    • கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முஜீப் உர் ரஹ்மானும் காயம் காரணமாக விலகியுள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 9 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 2-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா தொடை பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளரான கேஷவ் மகராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். 

    ராஜஸ்தான் அணி ஏற்கனவே பலம் வாய்ந்த அணியாக இருந்து வரும் நிலையில் கேஷவ் மகராஜ் இணைந்துள்ள மேலும்

    இதேபோல கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முஜீப் உர் ரஹ்மானும் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அல்லா கசன்ஃபரை கொல்கத்தா அணி நியமித்துள்ளது.



     


    • சென்னையில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
    • இதில் தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.

    சென்னை:

    உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டி நேற்று நடந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. அந்த அணி 46.4 ஓவரில் 270 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷகீல், பாபர் அசாம் ஆகியோர் அரை சதமடித்தனர்.

    தென் ஆப்பிரிக்காவின் ஷம்சி 4 விக்கெட்டும், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 47.2 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்து போராடி வென்றது. மார்க்ரம் 91 ரன்கள் எடுத்தார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின், பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் `ஜெய் ஸ்ரீ ஹனுமான்' என பதிவிட்டார். இந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    • தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் வந்தடைந்தனர்.
    • ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் இன்று பயிற்சியை தொடங்குகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    இதையொட்டி தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் வந்தடைந்தனர். அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று மாலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    ஆஸ்திரேலிய தொடரை வென்ற கையோடு திருவனந்தபுரம் வருகை தந்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் இன்று பயிற்சியை தொடங்குகிறார்கள்.

    ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாரம்பரிய உடையுடன் வருகை வந்த தென் ஆப்பிரிக்க வீரர்

    ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாரம்பரிய உடையுடன் வருகை வந்த தென் ஆப்பிரிக்க வீரர்

    இதற்கிடையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்கா வீர்ர கேசவ் மகாராஜ் திருவனந்தபுரத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாரம்பரிய உடையுடன் வருகை தந்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகாராஜ் இங்கிலாந்து கவுன்ட்டி அணியான லங்காஷைரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகாராஜ். இவர் சமீபத்தில் இலங்கைக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியிருந்தார். இவரை இங்கிலாந்து கவுன்ட்டி அணியான லங்காஷைர் ஒப்பந்தம் செய்துள்ளது.



    லங்காஷைர் தற்போது டிவிசன் -1ல் 14 போட்டிகளில் 10-ல் விளையாடி கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி வொர்செஸ்டர்ஷைர், சோமர்செட், யார்க்‌ஷைர், ஹம்ப்ஷைர் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இதில் மகாராஜ் பங்கேற்பார்.

    மகாராஜ் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    கொழும்பில் இன்று தொடங்கிய தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் இன்று கொழும்பில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் குணதிலகா, கருணாரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ரபாடா, ஸ்டெயின், லுங்கி நிகிடி ஆகியோரின் வேகப்பந்து வீச்சு பெரிய அளவில எடுபடவில்லை. இதனால் இருவரும் சிறப்பாக விளைாடி அரைசதம் அடித்தனர்.



    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. குணதிலகா 57 ரன்னிலும், கருணாரத்னே 53 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தனஞ்ஜெயா டி சில்வா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து 60 ரன்கள் அடித்தார்.



    மற்ற வீரர்களை நிலைத்து நின்று விளையாட விடாமல் மகாராஜ் சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்திக் கொண்டே இருந்தார்.



    இலங்கை அணி 86 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல்நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. அகில தனஞ்ஜெயா 16 ரன்னுடனும், ஹெராத் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். மகாராஜ் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். #KeshavMaharaj #DanushkaGunathilaka #DimuthKarunaratne #DhananjayadeSilva
    ×