search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேசவ் மகாராஜ்"

    • சென்னையில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
    • இதில் தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.

    சென்னை:

    உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டி நேற்று நடந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. அந்த அணி 46.4 ஓவரில் 270 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷகீல், பாபர் அசாம் ஆகியோர் அரை சதமடித்தனர்.

    தென் ஆப்பிரிக்காவின் ஷம்சி 4 விக்கெட்டும், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 47.2 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்து போராடி வென்றது. மார்க்ரம் 91 ரன்கள் எடுத்தார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின், பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் `ஜெய் ஸ்ரீ ஹனுமான்' என பதிவிட்டார். இந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    • தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் வந்தடைந்தனர்.
    • ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் இன்று பயிற்சியை தொடங்குகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    இதையொட்டி தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் வந்தடைந்தனர். அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று மாலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    ஆஸ்திரேலிய தொடரை வென்ற கையோடு திருவனந்தபுரம் வருகை தந்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் இன்று பயிற்சியை தொடங்குகிறார்கள்.

    ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாரம்பரிய உடையுடன் வருகை வந்த தென் ஆப்பிரிக்க வீரர்

    ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாரம்பரிய உடையுடன் வருகை வந்த தென் ஆப்பிரிக்க வீரர்

    இதற்கிடையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்கா வீர்ர கேசவ் மகாராஜ் திருவனந்தபுரத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாரம்பரிய உடையுடன் வருகை தந்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    ×