search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INLD"

    • பா.ஜனதாவுக்கு மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
    • பா.ஜனதா வெற்றி பெற முனைப்புடன் செயல்படுகிறது.

    சண்டிகர்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதுவரை 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    அரியானாவில் வருகிற 25-ந் தேதி தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்து களத்தில் இறங்கியுள்ளது. குரு ஷேத்ரா தொகுதியில் மட்டும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது மற்ற 9 தொகுதியிலும் காங்கிரஸ் நிற்கிறது.

    பா.ஜனதா 10 தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிறது. கடந்த முறை பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஜனநாயக ஜனதா காட்சி மற்றும் இந்திய தேசிய லோக்தளமும் களத்தில் உள்ளது.

    தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் பா.ஜனதா, காங்கிரசார் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக உள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 10 தொகுதிகளையும் பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியது. அதேபோல் இந்த தேர்தலிலும் அங்குள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்ற பா.ஜனதா புதிய வியூகம் அமைத்துள்ளது.

    பிரதமர் மோடி நேற்று அரியானாவின் அம்பாலா, சோனிபட்டில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அரியானாவின் மறுபெயர் துணிச்சல், நான் அரியானா கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை சாப்பிடுகிறேன். அதனால்தான் நான் வலுவாக இருக்கிறேன்.

    கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தனர். மத்தியில் வலுவான அரசு பதவியேற்றது. அதேபோல் இந்த முறையும் பா.ஜனதாவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

    பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு பின்னர் அங்கு பா.ஜனதாவுக்கு மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

    இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நயாப் சிங் சைனியை முதல்-அமைச்சராக நியமித்ததன் மூலம் மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் இருக்கும். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் மத்தியில் பா.ஜனதா மிகுந்த ஆதரவை பெற்றுள்ளது.

    பா.ஜனதாவினர் ராமர் கோவில் கட்டியது, 370-வது சட்டபிரிவு நீக்கப்பட்டு காஷ்மீர் தற்போது வளர்ச்சி பாதையில் செல்வது, நாட்டின் பொருளாதார நிலையை வலுப்படுத்தியது, மத்தியில் வலுவான அரசு அமைவது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர்.

    விவசாயிகளுக்கு எதிரான நிலைபாட்டை பா.ஜனதா கடைபிடிப்பதாகவும் பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்துள்ளது.

    விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், இளைஞர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் என சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினர்களையும் காயப்படுத்தும் கொள்கை களை பா.ஜனதா பின்பற்றுவதாக காங்கிரஸ் மற்றும் ஐ.என்.எல்.டி. உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    ஐ.என்.எல்.டி. மற்றும் ஜே.ஜே.பி. ஜாட் இன மக்கள் வாக்குகளை பிரிப்பதால் காங்கிரசுக்கு சில தொகுதிகளில் இது சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 58 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 28 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது.

    மே 25-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுடன் கர்னால் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு முதல்-மந்திரியாக பதவியேற்ற சைனி போட்டியிடுகிறார். அங்கு பா.ஜனதா வெற்றி பெற முனைப்புடன் செயல்படுகிறது.

    வருகிற அக்டோபர் மாதம் அரியானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறுமோ அந்த கட்சியின் ஆதிக்கமே சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது.

    ×