என் மலர்

  நீங்கள் தேடியது "Guru Peyarchi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் மொத்தம் 22 லட்சத்து 80 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
  தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றின் தீர்த்தக்கட்டங்கள், படித்துறைகளில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். இது தொடர்பாக போலீசார் எடுத்த கணக்கெடுப்பு விவரம் வருமாறு:-

  நெல்லை புறநகர் மாவட்டத்தில் உள்ள 25 தீர்த்தக்கட்டம் மற்றும் படித்துறைகளில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 693 ஆண்களும், 6 லட்சத்து 9 ஆயிரத்து 800 பெண்களும் என 10 லட்சத்து 95 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். இதேபோல் நெல்லை மாநகரில் உள்ள 4 படித்துறைகளில் மட்டும் 2¼ லட்சம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 27 படித்துறைகளில் மொத்தம் 9 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.

  நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் மொத்தம் 22 லட்சத்து 80 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லையில் நடைபெற்ற மகா புஷ்கர நிறைவு விழாவில் தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சிறப்பு வாய்ந்த தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி நெல்லை கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் மகா புஷ்கர நிறைவு விழா நடைபெற்றது.

  இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் 7 சிவாச்சாரியார்கள் நின்று வேத மந்திரங்கள் முழங்க தாமிரபரணி ஆற்றுக்கு தீப ஆரத்தி காண்பித்தனர். பின்னர் தாமிரபரணி ஆற்றில் மலர்களை தூவி விழா நிறைவு செய்யப்பட்டது. அப்போது தாமிரபரணி அன்னையை போற்றி எழுதப்பட்ட பாடல், இசையுடன் பாடப்பட்டது. மேலும் பக்தர்கள் மீது தாமிரபரணி புனிதநீரும் தெளிக்கப்பட்டது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. நேற்று தீப ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினார்கள்.
  144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளிலும் இந்த விழா நடந்து வருகிறது.

  தினமும் காலையில் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடும் நிகழ்ச்சியும், மாலையில் ஆரத்தி எடுத்து வழிபடும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இந்த புஷ்கர விழாவில் வெளி மாவட்டம் மட்டும் அல்லாமல், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கலந்துகொண்டு புனித நீராடி வருகிறார்கள்.

  குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் படித்துறையில் தாமிரபரணிக்கு தீப ஆரத்தி நடந்தபோது எடுத்தபடம்.

  12-வது நாளான நேற்றும் புஷ்கர விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர். நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சியம்மன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், கைலாசபுரம் தைப்பூச மண்டபம், நெல்லை மணிமூர்த்தீசுவரம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் ஜடாயு படித்துறைகளிலும், சீவலப்பேரி துர்காம்பிகை கோவில் படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

  அதேபோல் பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, திருப்புடைமருதூர், கோடகநல்லூர், அத்தாளநல்லூர் உள்ளிட்ட படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.


  சேரன்மாதேவி பக்தவச்சலபெருமாள் கோவில் வியாச தீர்த்தக்கட்டத்தில் நேற்று மாலை தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி நடந்தபோது எடுத்தபடம்.

  மேலும், பாபநாசத்தில் அகில பாரத துறவியர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட புஷ்கர விழா நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அதேபோல் நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் ஜடாயு படித்துறையிலும் நேற்று மாலையுடன் புஷ்கர விழா நிறைவடைந்தது.

  நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவிலில் நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை யாகசாலை பூஜை, மாலை 5.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனத்தின் புஷ்பாஞ்சலி, 6 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

  நெல்லை மாவட்டத்தில் 12 நாட்கள் நடைபெற்ற மகா புஷ்கர விழா இன்று மாலையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புஷ்கர விழா தொடங்கிய கடந்த 11-ந்தேதியில் இருந்து இன்று வரை சுமார் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளமாக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிர பரணியில் கடந்த 11-ந்தேதி முதல் மகா புஷ்கர விழா நடைபெற்று வருகிறது.

  குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணிக்கு மகா புஷ்கரம் நடத்தப்பட்டு வருகிறது.

  தாமிரபரணிக்கு நன்றி கூறும் விழாவாக இந்த விழா அமைந்துள்ளது. தாமிரபரணி யில் உள்ள 64 தீர்த்தகட்டங்கள், 149 படித்துறைகளில் இந்த விழா கோலாகலமாக நடந் தது. ஆன்மீக அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து நடத்திய இந்த விழாவில் தினமும் காலையில் தாமிர பரணிக்கு சிறப்பு வழிபாடு கள், வேள்விகள், யாகங்கள், கலை நிகழ்ச்சிகள், மாலையில் மகா ஆரத்தி நடைபெற்று வருகின்றன. 3 வேளை அன்ன தானமும் வழங்கப் பட்டு வருகிறது.

  புஷ்கர விழாவில் பங்கேற்று தாமிரபரணியில் புனித நீராட தினமும் ஏராளமான பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தின் பிற மாவட்டங் கள் மற்றும் புதுவை, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற‌ மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் தாமிரபரணியில் புனித நீராடி வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

  இதனால் தாமிரபரணி கரையோரங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது. படித்துறைகள் நிரம்பி வழிகின்றன. கடந்த 4 நாட்களாக ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை நாட்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

  விழாவில் உச்சக்கட்டமாக நேற்று தாமிரபரணியில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஒரே நாளில் 7 லட்சம் பக்தர்கள் புனித நீராடி தாமிரபரணியை வழிபட்டனர். மாலையில் நடந்த மகா ஆரத்தியையும் கண்டு தரிசித்தனர்.


  தைப்பூச மண்டபம் படித்துறையில் தண்ணீர் அதிகரித்ததால் பக்தர்கள் ஓரமாக நின்று நீராடிய காட்சி.

  புஷ்கர விழா நடைபெற்ற பகுதிகளில் நேற்று கட்டு கடங்காத கூட்டம் கூடியதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கூடுதல் போலீசார் வர வழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். பாபநாசத்தில் இரு இடங்களில் புஷ்கர விழா நடைபெற்றதால் அங்குள்ள பாபநாசநாதர் கோவில், அகஸ்தியர் அருவிக்கு அதிகளவில் பக்தர்கள் வந்ததாலும் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

  ஏற்கனவே புஷ்கர விழாவிற்காக பல்வேறு இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அகஸ்தியர் பட்டியிலேயே நிறுத்தப்பட்டன. அங்கிருந்து அரசு பஸ்களில் பாபநாசம் செல்ல ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அதே போல வடக்கில் இருந்து வந்த வாகனங்கள் முதலியார்பட்டி அருகேயே நிறுத்தப்பட்டு அங்கிருந்து பஸ்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் மட்டுமே அந்த பாதையில் அனுமதிக்கப்பட்டன. பாபநாசம் தாமிரபரணியில் நேற்று ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். இதே போல் சிங்கை, அம்பை, சேரன் மகாதேவி, கல்லிடைக்குறிச்சி படித்துறைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

  அம்பை காசிப தீர்த்தத்தில் புனித நீராடவும், தாமிரபரணியில் நீராடவும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் அங்கு போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. முக்கூடல், அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நெல்லையில் எங்கு பார்த் தாலும் வெளிமாநில பக்தர் கள் கூட்டம் காணப்பட்டது.

  நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறை, தைப்பூச மண்டபம் படித்துறை, மேலநத்தம் அக்னி தீர்த்தம், மணிமூர்த்தீஸ்வரம் தீர்த்த கட்டம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், ஜடாயு துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் புனித நீராடினார்கள்.

  குருஸ்தலமான தூத் துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர் கோவில் படித்துறையில் தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் மகா ஆரத்தியை காணவும் அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

  முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியதையும், அங்கு பாதுகாப்பிற்காக ஆற்றில் படகு நிறுத்தப்பட்டுள்ளதையும் படத்தில் காணலாம்.

  இதே போல ஸ்ரீவை குண்டம், தென்திருப்பேரை, ஆத்தூர் பகுதிகளிலும் பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடி வழிபட்டனர்.

  சித்தர்கள் கோட்டம் மற்றும் பொதுமக்கள் சார்பாக பாபநாசம் திரிநதி சங்கம தீர்த்தத்தில் நடை பெற்ற புஷ்கர விழாவில் இன்று காலை சிறப்பு வேள்வி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றார்கள். அகில பாரத துறவியர் சங்கம் சார்பாக பாபநாசத்தில் நடந்த புஷ்கர விழாவில் இன்று காலை லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை வழிபாடு நடந்தது. புஷ்கர விழா நிறைவு நாள் என்பதால் இன்று மதியம் இங்கு மகா ஆரத்தி நடந்தது. தொடர்ந்து சாத்தயதி பூஜை நடை பெற்றது.

  தொடர்ந்து அங்குள்ள சேனை தலைவர் சமுதாய கூடத்தில் பெண் துறவியர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது.

  நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி படித்துறையில் இன்று காலை சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து தாமிரபரணிக்கு வழிபாடு நடைபெற்றது.

  நெல்லை தைப்பூச மண்டபம் அருகே இன்று காலை வேத பாராயணம் மற்றும் மகா சண்டி ஹோமமும் நடைபெற்றது. சங்கீத சபாவில் பன்னிரு திருமுறை பாராயணம் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றார்கள்.

  நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையாக சாலையில் இன்று காலை 5 மணிக்கு சுவாமிக்கு தீர்த்தவாரி, கோபூஜையும் மகா சண்டியாகமும் நடந்தது. காஞ்சி சங்கர மடம் சார்பாக திருப்புடை மருதூரில் நடந்த மகா புஷ்கர விழாவில் இன்று ருத்ர ஏகாதசி பூஜை நடைபெற்றது.

  முறப்பநாட்டில் இன்று காலை சிறப்பு வேள்வியும், தாமிரபரணிக்கு வழிபாடும் நடந்தது. ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த விழாவில் பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட வைகளை நீக்கும் சத்ருசம் ஹார ஹோமம் நடைபெற்றது. கடந்த 11-ந்தேதி புஷ்கர விழா தொடங்கப்பட்ட இடங்களில் இன்று மாலை மகா ஆரத்தியுடன் விழா நிறைவடைகிறது. இதனால் இந்த பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட அதிகளவில் திரண்டிருந்தனர்.


  நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் தாமிரபரணிக்கு தீப ஆரத்தி நடந்த போது எடுத்த படம்.

  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புஷ்கர விழா தொடங்கிய கடந்த 11-ந்தேதியில் இருந்து இன்று வரை சுமார் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

  12-ந்தேதி புஷ்கர விழா தொடங்கிய பகுதிகளில் நாளை மாலை வரை வழிபாடுகள் நடக்கின்றன. புஷ்கர விழா நிறைவை யொட்டி இன்றும், நாளையும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. இதனால் படித்துறைகள், தீர்த்த கட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. ஏற்கனவே மலை பகுதியில் பெய்த மழை காரணமாக தாமிரபரணியில் தண்ணீர் வரத்து அதிகரித் துள்ளதால் போலீசார் நீராடும் பக்தர்களை பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.

  மேலும் 24 மணி நேரமும் ஆற்றில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு படையினர் அனைத்து பகுதிகளிலும் ரப்பர் படகு மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் ஆற்றில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். ஆற்றில் பக்தர்கள் நீராடும் பகுதியில் தண்ணீர் வரத்தை பொறுத்து பக்தர்களை போலீசார் நீண்ட வரிசையில் செல்ல அனுமதித்துள்ளனர்.

  கீழாம்பூர் மற்றும் ஆழ்வார்குறிச்சி வட்டார கடனா நதி பக்த ஜன சங்கம் மற்றும் கிராம மக்கள் இணைந்து புஷ்கர விழாவை முன்னிட்டு கடனா நதியில் வழிபாடு நடத்தினர்.

  இதையொட்டி வேதவிற் பன்னர்கள் தேவி பாராயணம், கும்ப ஜெபம், விசே‌ஷ ஜெபம் மற்றும் நாம சங்கீர்த்தனம், தேவார பண்ணிசை பாடினார்கள். பின்னர் வைதீகர்கள் கடனாநதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கடனாநதிக்கு தீப ஆராதனை, உபசாரங்களுடன் மகா தீப ஆரத்தி நடத்தினர்.

  நிகழ்ச்சியில் ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், பாப்பான்குளம், கல்யாணிபுரம், கடையம் உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் வாணவேடிக்கை நடந்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காசியே நெல்லை, தூத்துக்குடிக்கு வந்தது போன்று எங்கு பார்த்தாலும் ஆற்றின் கரைகளில் வடமாநில பக்தர்களை காண முடிகிறது. பக்தர்கள் நவ திருப்பதி, நவ கைலாய கோவில்களில் அதிகளவில் குவிந்துள்ளனர்.
  குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு குரு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆனதை தொடர்ந்து அந்த ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

  இந்த விழா கடந்த 11-ந்தேதி தொடங்கியது. தாமிரபரணியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடி வருகிறா ர்கள். பல்வேறு ஆன்மீக அமைப்புகள் புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணிக்கு சிறப்பு வழிபாடுகள், யாகங்கள், வேள்விகள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன.

  விழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குவிந்துள்ளனர். இரு மாவட்டங்களிலும் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன.

  தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பாபநாசம் தொடங்கி புன்னக்காயல் வரை தாமிரபரணியின் அனைத்து படித்துறைகளிலும் விழாக் கோலமாக காட்சியளிக்கின்றன. புஷ்கர விழா நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளனர். ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

  பாபநாசம் சித்தர்கள் கோட்டம் சார்பாக அங்குள்ள திரிநதி சங்கம தீர்த்தத்தில் புஷ்கர விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி இன்று காலை சிறப்பு வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து தாமிரபரணிக்கு வழிபாடு மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


  முறப்பநாட்டில் தாமிரபரணிக்கு தீப ஆரத்தி நடைபெற்ற காட்சி.

  அகில பாரத துறவியர் சங்கம் சார்பாக பாபநாசத்தில் இன்று நடைபெற்ற விழாவில் காலை சிறப்பு வேள்வி நடந்தது. தொடர்ந்து அங்குள்ள சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் கிராம கோவில் பூஜாரிகள் மாநாடு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  காஞ்சி சங்கரமடம் சார்பாக திருப்புடைமருதூரில் நடைபெற்ற புஷ்கர விழாவில் இன்று காலை தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

  முக்கூடல் அருகே அத்தாளநல்லூர் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கஜேந்திர வரத பெருமாள் கோவிலில் இன்று காலை புஷ்கர பூஜை நடந்தது. தொடர்ந்து பெண்கள் நாராயணியம் பாடினர். இதையடுத்து பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

  இதேபோல கல் லிடைக்குறிச்சி, அம்பை, சேரன்மகாதேவி தீர்த்தக்கட்டங்களிலும் தாமிரபரணியில் சிறப்பு வழிபாடு நடந்தது. நெல்லை குறுக்குத்துறை படித்துறையில் நடந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றார்கள்.

  நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறையில் புஷ்கர விழாவை முன்னிட்டு இன்று காலை புரு‌ஷ ஸுக்த ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து திருப்புகழ் இசைவழிபாடு நடந்தது. கைலாசநாதர் கோவிலில் வேதபாராயணம், சங்கீதசபாவில் பண்ணிரு திருமுறை பாராயணம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து முருக பக்தர்கள் மாநாடு நடந்தது.

  அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் உள்ள யாகசாலையில் இன்று காலை சிறப்பு வேள்வி நடந்தது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

  முக்கூடல் அத்தாளநல்லூரில் தாமிரபரணிக்கு பெண்கள் பொங்கலிட்டு வழிபட்ட காட்சி.

  புஷ்கர விழாவையொட்டி படித்துறைகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த இடவசதிகள் செய்யப் பட்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மற்றும் சாதனங்களுடன் ஆற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  தாமிரபரணி நதிக்கு தினசரி மாலையில் காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகா ஆரத்தி நடந்து வருகிறது. இதனால் ஆரத்தியை காண பக்தர்கள் அதிகளவில் திரண்டு வருகிறார்கள். காசியே நெல்லை, தூத்துக்குடிக்கு வந்தது போன்று எங்கு பார்த்தாலும் ஆற்றின் கரைகளில் வடமாநில பக்தர்களை காண முடிகிறது. பக்தர்கள் நவ திருப்பதி, நவ கைலாய கோவில்களில் அதிகளவில் குவிந்துள்ளனர்.

  நவக்கிரகங்களில் அதிபதிகளுக்கு உரிய கோவில்களான சூரிய அம்சம் உள்ள பாபநாசம் சிவன் கோவில், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், சந்திரன் வழிபட்ட சேரன்மகாதேவி கைலாசநாதர் கோவில், நத்தம் விஹயாசன பெருமாள் கோவில், செவ்வாய் வழிபட்ட தலமான கோடகநல்லூர் சிவன் கோவில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

  இதேபோல் புதனுக்குரிய தென்திருபேரை கைலாசநாதர் கோவில், திருப்புளியங்குடி பெருமாள் கோவில், குரு பகவானுக்குரிய முறப்பநாடு கைலாசநாதர் கோவில், ஆழ்வார்திருநகரி பெருமாள் கோவில், சனி கிரகத்துக்குரிய பெருங்குளம் பெருமாள் கோவில், ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில், சுக்கிரனுக்குரிய சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோவில், தென்திருபேரை பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.

  மேலும் ராகு கேது தலங்களான இரட்டை திருப்பதி பெருமாள் கோவில், ராஜபதி கைலாசநாதர் கோவில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் இந்த கோவில்களை தேடி கார், வேன்களில் சென்று சாமி ஹ்ரிசனம் செய்தார்கள். இது தவிர நெல்லையப்பர் கோவில், யரை தெட்சணாமூர்த்தி கோவில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில், குற்றாலம் குற்றாலநாதர் கோவில், இலத்தூர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகா புஷ்கர விழாவின் 7-வது நாளான இன்று தாமிரபரணியின் படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
  குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

  அதன்படி இந்த ஆண்டு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனதையடுத்து விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த புஷ்கர விழா 144 ஆண்டுக்கு ஒருமுறை வந்துள்ளதால் மகா புஷ்கரமாகும்.

  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

  மகா புஷ்கர விழாவின் 7-வது நாளான இன்று தாமிரபரணியின் படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தீர்த்தக்கட்டங்களில் ஆன்மீக அமைப்புகள் சார்பாக சிறப்பு வேள்விகள் நடைபெற்றன. மாலையில் தாமிரபரணிக்கு மகா ஆரத்தி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.

  பாபநாசம் சித்தர்கள் கோட்டம் சார்பாக அங்குள்ள திரிநதி சங்கம தீர்த்தத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவில் இன்று காலை சிறப்பு வேள்வி நடந்தது. மாலையில் பஞ்சபூத மேடையில் 16 வகையான தீபங்கள், 5 வகை உபச்சாரங்களுடன் தமிழ் ஆகம விதிப்படி சிவனடியார்களால் மகா ஆராத்தி நடத்தப்படுகிறது.

  அகில பாரதிய துறவியர்கள் சங்கம் சார்பாக பாபநாசத்தில் நடந்துவரும் புஷ்கர விழாவில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து அங்குள்ள சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் கைவல்ய நவநீத சிறப்பு மாநாடு நடைபெற்றது.  காஞ்சி சங்கர மடம் சார்பாக திருப்புடைமருதூரில் நடந்துவரும் புஷ்கர விழாவில் இன்று காலை துர்கா ஹோமம் நடந்தது. நெல்லை குறுக்குத்துறையில் புஷ்கரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் இன்று காலை நிருசிம்ஹ ஹோமம் நடந்தது.

  அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் உள்ள யாகசாலையில் இன்றும் பல்வேறு யாகங்கள் நடைபெற்றன. வண்ணார்பேட்டை குட்டத்துறை படித்துறையில் தீர்த்தவாரி பெருவிழாவை முன்னிட்டு தாமிரபரணிக்கு வழிபாடுகள் நடந்தன.

  முறப்பநாடு கைலாசநாதர் கோவில் முன்புள்ள தாமிரபரணிக்கு இன்று காலை சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திரளான பக்தர்கள் ஆற்றில் நீராடி வழிபட்டார்கள்.

  ஸ்ரீவைகுண்டத்தில் உடலில் ஏற்பட்டுள்ள சகல வியாதிகளை குணப்படுத்தவும், மனநிம்மதிக்கான ஸ்ரீதன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.

  மகா புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி கரையோர கோவில்களுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக பாபநாசம் கோவில், அம்பை கோவில்கள், சேரன்மகாதேவி, அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர், கரிசூழ்ந்தமங்கலம், நெல்லையப்பர் கோவில், நவ கைலாய கோவில்கள், நவ திருப்பதி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அனைத்து இடங்களிலும் வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் குவிந்துள்ளார்கள். அவர்கள் சாமி தரிசனம் செய்து சிறிய கேன்களில் தாமிரபரணி தீர்த்தம் எடுத்து செல்கிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தாமிரபரணி ஆற்றின் புகழ், இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதே அந்த நதியின் பெருமைக்கு தக்க சான்றாக இருக்கிறது.
  வற்றாத ஜீவநதிகளில் ஒன்றான தாமிரபரணி ஆற்றின் பிறப்பிடம், மேற்குத் தொடர்ச்சி மலை மீது முண்டந்துறை காட்டுப்பகுதியில் உள்ள பூங்குளம் என்ற இடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 1,725 மீட்டர் உயரத்தில் பிறந்து, வங்கக்கடலை நோக்கி ஓடி வரும் தாமிரபரணி, வழியில் பல நதிகளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு வந்து, புன்னக்காயல் என்ற இடத்தில் வங்கக்கடலில் சங்கமம் ஆகிறது.

  அடர்ந்த காட்டுப் பகுதியான முண்டந்துறையில் பல ஆயிரம் ஆண்டுகளாக படிந்து இருக்கும் செடி, கொடிகளின் எச்சங்களும், மண்ணும் பஞ்சு மெத்தை போன்ற அமைப்பைப் பெற்று இருப்பதால், தென் மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அங்கு பெய்யும் மழை நீர் முழுவதையும் அந்த இடம் அப்படியே உள்வாங்கிக் கொண்டு, மழை அல்லாத காலங்களில் சிறுகச் சிறுக வெளிவிடும் போது அது, தாமிரபரணி ஆறாக உருவாகி, ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடி வருகிறது. தமிழ் நாட்டிலேயே உருவாகி, தமிழ் நாட்டிலேயே கடலில் கலக்கிறது என்ற பெருமை பெற்ற ஒரே நதி தாமிரபரணி.

  மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கும் இந்த நதி, திருநெல்வேலி மாவட்டத்தில் 60 சதவீதம் அளவிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 சதவீதம் அளவிலுமாக மொத்தம் 125 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, தனது ஓட்டத்தை அந்த இரு மாவட்டங்களுக்குள் அடக்கிக் கொள்கிறது. தாமிரபரணியின் புகழ் வரலாறு, பல பக்கங்களைக் கொண்டது. ‘தாமிரபரணி மகாத்மியம்’ என்று தனியாக ஒரு நூல் உருவாகும் அளவுக்கு அதன் பெருமைகள் ஏராளமாக நிரம்பிக் கிடக்கின்றன. தாமிரபரணியின் பிறப்பிடம், அமைந்துள்ள மலை மீது அமர்ந்துதான் அகஸ்திய முனிவர் தமிழ் மொழியை உருவாக்கினார் என்று புராணங் கள் கூறுகின்றன.

  இப்போது உள்ளது போன்ற தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தாமிரபரணி ஆற்றின் புகழ், இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதே அந்த நதியின் பெருமைக்கு தக்க சான்றாக இருக்கிறது. மகாபாரத இதிகாசம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்த மகாபாரதத்திலேயே தாமிரபரணியின் புகழ் பாடப்பட்டு இருக்கிறது. அந்தக் காலத்திலேயே தாமிரபரணி நதியின் புகழ், இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதைத்தெரிந்து கொள்ளலாம்.

  மகாபாரத இதிகாசம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பதிலும், அந்தக் காலத்திலேயே தாமிரபரணி ஆறு புகழ் பெற்று விளங்கியதால் தான் மகாபாரதத்தில் அது பற்றி பேசப்பட்டு இருக்கிறது என்பதிலும் சிறிதும் சந்தேகம் இல்லை. பழங்கால தமிழ் இலக்கியங்களில் ‘பொருநை’ என்ற பெயரில், தாமிரபரணி ஆற்றின் புகழ் பல இடங்களில் பாடப்பட்டு இருக்கிறது. மாமன்னர் அசோகரின் பாறைக் கல்வெட்டுக் களிலும் தாமிரபரணி ஆறு இடம்பிடித்து இருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டினர் பலர், இந்தியாவின் புகழ் மிக்க வரலாறு பற்றிக் கேள்விப்பட்டு, அதனை நேரில் பார்க்க இங்கே வந்து சுற்றுப்பயணம் செய்து, தாங்கள் கண்டவற்றை ஆவணமாகப் பதிவு செய்து இருக்கிறார்கள்.

  அவ்வாறு வந்தவர்களில் கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹொரோட்டஸ், பிளினி ஆகியோரின் குறிப்புகளிலும் தாமிரபரணி கூறப்படுகிறது. கி.பி. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிளாடியஸ் தாலமி, தனது ‘ஜியாக்ரபி’ என்ற புத்தகத்தின் 7-ம் பாகம் முதல் அத்தியாயத்தில் தாமிரபரணி ஆறு பற்றியும், கொற்கை நகர் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார். தாமிரபரணி ஆறும், அந்த நதிக்கரையில் இருந்த புகழ்மிக்க நாகரிகமும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இவைபோல ஏராளம் இருக்கின்றன.

  பாண தீர்த்த மகிமை

  சிவபெருமான் திரி புராசுரர்களை சம்ஹாரம் செய்தபோது, விஷ்ணு பாணமாக இருந்தார். அசுரர்களை சம்ஹாரம் செய்தபிறகும் பாணத் தின் வெம்மை தணியாமல் தகித்தபடியே இருந்தது. எனவே, சிவமூர்த்தி அந்த பாணத்தை கலம்பகர்த்த தடாகத்தில் வைத்துவிட்டார். அகத்தியர் திருவுள்ளமுவந்து விடையளிக்கத் தோன்றிய தாமிரபரணி கலம்பகர்த்த தடாகத்தில் வெள்ளமெனப் பாய்ந்து பாணத்தின் வெம் மையைத் தணிவித்தாள். எனவே, இந்த பாணதீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு விஷ்ணு மூர்த்தியின் அனுக்கிரஹம் கிடைக்கும் என்று ஹயக்கிரீவர் திருவாய்மொழியாக தாமிரபரணி மஹாத்மியத்தில் கூறப்பட்டு இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமர் தனது பாணத்தினை விட்டு ஒரு கிணறு தோண்டினார். அந்த தீர்த்தம் “ஜடாயு தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் செய்த பாவங்கள் அழிந்து விடும் என்பது ஐதீகம்.
  தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் ராமருக்கு வழிப்பாட்டு தலங்கள் அமைந்துள்ளன. ராவணன், சீதையை சிறையெடுத்து சென்ற போது பட்சிகளின் அரசன் ஜடாயு போர் செய்து இறந்த இடம் நெல்லை அருகே அருகன் குளத்தில் உள்ளது.

  சீதா தேவியை ராவணன் சூழ்ச்சியால் சிறை பிடித்து கடத்திச் சென்ற போது ஜடாயுணும் பறவை ராவணனை வழி மறித்து போரிட்டது. ராவணன் சிவபெருமானிடம் தவம் செய்து பெற்ற தெய்வ வாளால் ஜடாயுவின் இறக்கையை வெட்டி வீழ்த்தினார்.

  ஜடாயு தரையில் விழுந்து குற்றுயிரும் குலை உயிருமாய் நடந்த கதையை கூறினார். பின் தனக்கு மகன் ஸ்தானத்தில் இருந்து ராமர்தான் திதி செய்ய வேண்டும் என்று கேட்டு உயிர் விட்டார்.

  உடனே ராமர் தனது பாணத்தினை விட்டு ஒரு கிணறு தோண்டினார். அந்த தீர்த்தம் “ஜடாயு தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது. அந்த தீர்த்தத்தை கொண்டு ஜடாயுவுக்கு ராமர் தர்ப்பணம் செய்தார்.

  இதன் அருகே ராமன் பெயரை கொண்ட ராம தீர்த்தம், சிவபெருமான் பெயரை கொண்ட சிவதீர்த்தம் உள்ளது. இந்த மூன்று தீர்த்தத்தில் யார் நீராடல் செய்கிறார்களோ, அவர்களுக்கு நூறு பிறவிகளில் செய்த பாவங்களும் அழிந்து விடுகிறது என்பது ஐதீகம்.

  இங்கு ஒரு மண்டபம் உள்ளது. இந்த இடத்தில் இருந்து தான் ராமர் ஜடாயுவின் பிண்டத்தினை கரைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீர்த்தத்தினை எடுத்து சென்று வீட்டில் பூஜைக்கு பயன்படுத்தியும், தங்கள் தொழில் நிறுவனத்தில் தெளித்தும் மக்கள் நற்கதி பெற்று வருகின்றனர். நோய், சூனியம், தீராத வலி மற்றும் பித்ரு கடன் கழிக்க இந்த ஆலயம் வந்து வழிபடுவது பலன்களைத் தரும்.

  இந்த ஆலயம் நெல்லை சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தாழையூத்து பைபாசில் தாமிரபரணியை கடக்கும் பாலம் அருகே உள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து மினி பஸ், சேர் ஆட்டோ வசதிகள் உள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புனித நதியில் நீராடுவதற்கென்று தர்ம சாஸ்திரம் சில விதிகளை வகுத்து வைத்திருக்கிறது. அவைகளைக் கடைப் பிடித்தால் நிச்சயம் நல்ல பலன்கள் கிட்டும்.
  12 நாட்களிலும் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமம். புனித நதியில் நீராடுவதற்கென்று தர்ம சாஸ்திரம் சில விதிகளை வகுத்து வைத்திருக்கிறது. அவைகளைக் கடைப் பிடித்தால் நிச்சயம் நல்ல பலன்கள் கிட்டும். அவைகளை வரிசையாகப் பார்ப்போம்.

  1.  சூரிய உதயத்திற்கு முன் நான்கு நாழிகைகள் (96 நிமிடம்) அருணோதய காலமாகும். அப்பொழுது நீராடுவது சிறப்பானது என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது காலை 4.24 மணி முதல் 6.00 மணி வரையில் நீராடுவது சிறப்பு என்று சொல்லப்பட்டு உள்ளது.

  2.  இந்த 96 நிமிடத்திலும் காலை 4.24 முணி முதல் 5.12 மணி வரையிலான 48 நிமிட காலம் மிகச் சிறப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. 4.24 மணி முதல் 5.12 மணி வரை உள்ள இரண்டு நாழிகைகள் “பிரம்ம முகூர்த்தம்” என்று சொல்லப்படும். இதை பிரசாந்தவேளை என்பர். மனித மனம் அலைபாயாமல் பரிசுத்தமாக இருக்கும் வேளை இது. பிரகிருதியிலே இயற்கையிலேயே பகவானால் பிரத்தியேகமாக செய்து வைத்தது பிரம்ம முகூர்த்தம் ஆகும். இந்த வேளையில் 15 நிமிடம் தியானம் செய்தால், மற்ற வேளையில் இரண்டு மணி நேரம் தியானம் செய்ததற்குச் சமமாகும். இந்த பிரம்ம முகூர்த்தத்தில் நீராடுவது ஒரு தனி ஆனந்தம். ஏன்? நம் உள்ளத்தில் கடவுள் பக்தி மேலோங்கி இருக்கும் வேளை இது.

  3.  குழந்தைகள், வியாதியினால் பீடிக்கப்பட்டவர்கள், வயது ஆனவர்கள் சமயத்திற்குத் தகுந்தவாறு பகலில் நீராடலாம். ராகு காலத்தைத் தவிர்க்கவும்.

  4.  புண்ணிய நதிகளில் நீராடப் போகிறவர்கள் குடை பிடித்துக் கொண்டோ, செருப்பு அணிந்து கொண்டோ செல்லக் கூடாது. கார், வேன், இருசக்கர வாகனங்களில் போய் நதிக்கரையில் இறங்கக் கூடாது. நடந்து செல்ல வேண்டும். குடை பிடித்துக் கொண்டு சென்றால் தீர்த்தத்தில் நீராடிய பலனில் கால் பங்கும், செருப்பணிந்து சென்றால் அரைப்பங்கு பலமும், வண்டி வாகனங்களில் சென்றால் முழு பலமும் நசித்து விடுகிறது. நோயாளியாக இருந்தால் குதிரை வண்டியில் போகலாம். மாட்டு வண்டியில் போகக் கூடாது.

  5.  நதிக்கரையில் உள்ள மண்ணை எடுத்துத் தன் உடம்பில் பூசிக்கொண்டு நதியை வணங்கி மெல்ல அதனுள் இறங்க வேண்டும். புண்ணிய நதிகளில் நீச்சலடித்து குளிக்கக் கூடாது. நீச்சலடிப்பதன் மூலம் நதியைக் காலால் உதைக்க நேரிடும். நதியை உதைக்கலாமா? இது பாபச் செயல் அல்லவா?

  6.  தூய்மையான வெண்ணிற ஆடை உடுத்திக் கொண்டே நீராட வேண்டும். ஒற்றை வஸ்திரத்தோடு நீராடக்கூடாது. இடுப்பில் ஒரு துண்டை கட்டிக் கொள்ள வேண்டும்.

  7.  சிகப்பு, கருப்பு, நீல நிறத் துணி, தலைப்பு இல்லாத வஸ்திரம், ஈரமான வஸ்திரம் இவைகளை ஒரு பொழுதும் உடுத்திக் கொண்டு நீராடக் கூடாது. ஓரத்தில் நீலக் கரை, கருப்புக்கரை போட்ட வஸ்திரமும் உடுத்திக் கொள்ளக் கூடாது. கைலிகள், லுங்கிகள் உடுத்தக் கூடாது.

  8.  அரைஞாண் கயிறு (இடுப்புக் கயிறு) இல்லாமல் ஆண்கள் நீராடக் கூடாது. அப்படிச் செய்பவன் நதியில் நீராடிய புண்ணிய பலனைப் பெற மாட்டான்.

  9.  அரை ஞாண் கயிற்றில் கச்சம் கட்டிக் கொண்டும் நீராடக் கூடாது. இது வஸ்திரம் தரிக்காதவருக்குச் சமம். இதனாலும் புண்ணிய பலன் கிட்டாமற் போய் விடும்.

  10.  நதியின் பிரவாகத்திற்கு (ஓட்டத்திற்கு) எதிர்முகமாக நின்றே நீராட வேண்டும். முதுகைக் காட்டக் கூடாது. இது பாபமாகும்.

  11.  புனித நீராடல் முதலிய சகல காரியங்களிலும் நாராயணனை அவசியம் தியானம் செய்ய வேண்டும். நீரில் நின்று கொண்டு மனதில் வேறு எண்ணம் இல்லாமல் “ஹரி, ஹரி” என்று சொல்லிக் கொண்டு மூன்று முறை நன்கு மூழ்கி எழ வேண்டும். லக்ஷ்மி சூக்தம் தெரிந்தவர்கள் அதைக் கூறலாம். வலது கையால் நீரை எடுத்து மூன்று முறை அருந்த வேண்டும்.

  12.  நீண்ட தலைமுடி கொண்ட ஆண்களும், பெண்களும் தலைமுடியை முன்புறம் போட்டுக் கொண்டு நீராட வேண்டும். பின்புறம் போடக் கூடாது. தலைமுடியில் உள்ள நீர் முன்புறமாக விழுந்தால் அது கங்கை தீர்த்தத்திற்குச் சமமாகும். பின்புறம் விழுந்தால் அது கள்ளுக்குச் சமமாகும். ஆகையால் முன்புறமாக குனிந்து கொண்டு தலைமுடியில் உள்ள நீரை பூமியில் விழச் செய்ய வேண்டும்.

  13.  நதியில் நீராடும் போது எச்சிலைக் காறி உமிழ்வதும், அதில் சிறுநீர் கழிப்பதும் பாபச் செயலாகும்.

  14.  நதியினுள் ஈரத்துணிகளைப் பிழியக் கூடாது. கரைக்கு வந்தே பிழிய வேண்டும்.

  15.  நீரிலிருந்து வெளியே வந்து தலைமயிரை கையால் உதறக் கூடாது. தலைமயிரில் உள்ள நீர், வஸ்திர நீர் பிறர் மேல் படக் கூடாது. இது எவர் மீது படுகிறதோ அவரிடம் உள்ள செல்வமெல்லாம் தொலைந்து தரித்திரராகி விடுவார்.

  16.  நீராடி முடித்தவுடன், காய்ந்த வஸ்திரத்தை மேலே சுற்றிக் கொண்டு ஈர வஸ்திரத்தைக் கீழாக விட வேண்டும். மேலாக எடுத்துப் போடக் கூடாது.

  17. நெற்றியில் திருநீறோ அல்லது கோபி சந்தனமோ பூசிக் கொண்டு மீண்டும் ஒரு முறை நதியை வணங்க வேண்டும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாமிரபரணியில் சிந்துபூந்துறை என்று சொல்லப்படுகின்ற தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வோர் அல்லது அதைப் பானம் செய்வோர் தடையின்றி மோட்சத்தைப் பெறுகின்றனர்.
  1. பூலோகத்திலிருக்கின்ற எவ்விதமான புண்ணியத் தீர்த்தங்களும் ஸ்ரீதாமிரபரணியின் ஒரு திவலையின் பதினாறில் ஒரு பாகத்திற்கும் இணையில்லாததே.

  2. பெரியோர்கள் மற்ற சாதாரண நதிகளைத் தீர்த்தம் என்று கூறலாம். ஆனால் அவற்றிலும் தாமிரபரணி என்ற எண்ணத்தைச் செலுத்தி தியானம் செய்தாலோ, நீராடினாலோ, இம்மகாநதியின் புண்ணியம் கிடைக்கும்.

  3. சம்சாரம் என்ற சமுத்திரத்தைத் தாண்ட விரும்புபவர்கள், அவனுடைய உயிர் நிலைகாலத்தில் ஒருமுறையாவது தாமிரபரணி மகாநதியில் ஸ்நானம் செய்ய வேண்டும்.

  4. தாமிரபரணியில் சிந்துபூந்துறை என்று சொல்லப்படுகின்ற தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வோர் அல்லது அதைப் பானம் செய்வோர் தடையின்றி மோட்சத்தைப் பெறுகின்றனர்.

  5. சூரியன் சிம்மராசியில் வரும்போதெல்லாம், அகத்திய மாமுனியானவர் சகலமான தேவர்களோடும், முனிகளோடும், சித்த சிரோமணிகளோடும் மலய பர்வதத்தின் அடிவாரத்திலிருக்கின்ற நகாரணியம் தலத்திரத்திற்கு வந்து, சிறந்த மேன்மை பெறுவதற்காக மனதை அடக்கி பூஜை செய்து வருகின்றார்.

  6. ஆத்மஞானம் பெற விரும்புவோர் ஒருமுறையாவது புண்ணியமான ஸ்ரீதாமிரபரணியில் ஸ்நானம் செய்து கோஷ்டீசுவரரைப் பூஜை செய்ய வேண்டும்.

  7. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கையும் விரும்புவோர் மகாபாவத்தைத் தொலைக்கின்ற பாபவிநாசத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும்.

  8. தாமிரபரணியில் உள்ள சாலா தீர்த்தம், தீபதீர்த்தம், கஜேந்திரமோட்ச தீர்த்தம், புடார்ச்சுன தீர்த்தம், துர்க்கா தீர்த்தம், பைரவ தீர்த்தம், சோம தீர்த்தம், வியாச தீர்த்தம், ரோமச தீர்த்தம், ஜோதிர்வன தீர்த்தம், சாயா தீர்த்தம், மந்திர தீர்த்தம், நான்கு அக்னி தீர்த்தங்கள், ஷிப்தபுஷ்ப தீர்த்தம், ராமதீர்த்தம், விஷ்ணுவன தீர்த்தம், கலச தீர்த்தம், ஸ்ரீபுர தீர்த்தம், ஸோமாரண்ய தீர்த்தம், சங்கம தீர்த்தம் ஆகிய இவை புராணங்களில் முக்கியத் தீர்த்தங்களாகக் கூறப்பட்டிருக்கின்றன.

  9. பிராணாயாமம், பஞ்சகவ்யம், சூட்சுமணை என்ற நாடியில் பிராணவாயுவை ஏற்றித் தவம் செய்தல், பிராஜாபத்யம், மலையிலிருந்து விழுதல், அக்னிப் பிரவேசம் ஆகிய பெருஞ்செயல்களால் மானிடர் பெறக்கூடிய பயனை தாமிரபரணி நதியில் ஒருமுறை ஸ்நானம் செய்வதன் மூலம் பெற முடியும்.

  10. ஸ்ரீதாமிரபரணி தேவியானவள் பூமிக்கு வாழ்வளிக்க வந்தவள். இல்லற வாழ்க்கையைச் சிறப்பித்து வழங்குபவள். முக்திக்கு முத்தானவள் என்று வீரசேன மகாராஜனுக்கு சங்கமா முனிவர் கூறியுள்ளார்.

  11. தாமிரபரணி பிறந்த நாளான வைகாசி விசாகம் அன்று குபேரன் இந்த ஆற்றில் மூழ்கிதான் குபேர பேறு பெற்றான் என்று புராணங்கள் கூறுகின்றன.

  12. கங்கை நதி தன் பாப அழுக்கை போக்க மார்கழி மாதம் தோறும் தாமிரபரணியில் வந்து அடைக்கலம் ஆகி விடுவாள். ஆகவே மார்கழி மாதம் தாமிரபரணியில் எந்த இடத்தில் நீராடினாலும் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

  13. சேர்ந்த பூ மங்கலத்தில் தாமிரபரணி நதியின் சங்கு முகத்தில் நீராடி கடலரசனும் அகத்திய பெருமானும் ரோமரிஷியும் நீராடி நற்கதியடைந்தனர்.

  14. தசரதனுக்கு ராமபிரான் தாமிரபரணியின் பாணதீர்த்தத்தில்தான் தர்ப்பணம் செய்தார். எனவே தாமிரபரணியில் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையில் லட்சக்கணக்கானவர்கள் நீராடி நலம் பெறுகிறார்கள்.

  15. தாமிரபரணி வங்க கடலில் சேரும் சங்குமுகத்தில் நீராடினால் தங்களது பாவம் போய் விடும். முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய பாணதீர்த்தம் போலவே சங்கு முகமும் ஒரு சிறந்த இடமாகும்.  16. தாமிரபரணியில் மிக முக்கிய தீர்த்தமாக கருதப்படுவது பாணதீர்த்தம், பாபநாச தீர்த்தம், ஊர்காட்டில் உள்ள கோடிஸ்வர தீர்த்தம், திருப்புடைமருதூரில் உள்ள சுரேந்திரமோட்ச தீர்த்தம், திருநெல்வேலியில் சிந்துபூந்துறை தீர்த்தம் மற்றும் சங்குமுக தீர்த்தம் போன்ற தீர்த்தமாகும்.

  17. தாமிரபரணி நதி வங்க கடலில் கலக்கும் இடத்தில் சங்கு தீர்த்தம் இருப்பதால் இந்த தீர்த்தத்தில் வந்து தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு கும்பாபிசேகம் நடத்தினால் மிகவும் நல்லது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நிறைய ஆலயங்களுக்கு திருவிழா, கொடை விழா நடக்கும் போது இந்த தீர்த்தத்தில் இருந்துதான் தீர்த்தம் எடுத்து செல்கிறார்கள்.

  18. தாமிரபரணி ஆற்றில் ஒருமுறை நீராடினால் ஒரு லட்சம் தடவை காயத்திரி மந்திரம் ஜெபித்த புண்ணியம் கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது.

  19. தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு ஸ்ரீதாமிரபரணி சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சிருங்கேரி ஐகத்குரு பாரதி தீர்த்தர் பூஜை செய்து கொடுத்துள்ள இந்த சிலைக்கு புஷ்கரம் நடக்கும் 12 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

  20. தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் தாமிரசத்தும், மூலிகைகளும் அதிகம் உள்ளன. இதனால்தான் தாமிரபரணியில் நீராடினால் நோய்கள் குணமாகிறது.

  21. தாமிரபரணி நதிக்கரையில் நவ கைலாயமும், நவ திருப்பதிகளும் உள்ளன. தமிழ்நாட்டில் வேறு எந்த நதிக்கும் இத்தகைய சிறப்பு இல்லை.

  22. ஆழ்வார் திருநகரியில் இருக்கும் நம்மாழ்வார் திருமேனி தாமிரபரணி புனித நீரால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  23. தாமிரபரணி ஆறு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயர பொதிகை மலையில் தோன்றுவது குறிப்பிடத்தக்கது.

  24. தமிழ்நாட்டில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி ஆகிய ஐந்தும் முக்கிய நதிகளாகும். இதில் தமிழ்நாட்டிலேயே தோன்றி, தமிழ் நாட்டிலேயே கடலில் சங்கமிக்கும் ஒரே நதி தாமிரபரணி நதிதான்.

  25. தாமிரபரணிக்கு பச்சையாறு, மணிமுத்தாறு, குற்றாலம் அமைந்துள்ள சித்தாறு, ராமநதி, கடனாநதி, உப்பாறு ஆகிய உபநதிகள் உள்ளன. தாமிரபரணியிலும், உப நதிகளிலும் 37 அணைக்கட்டுகள், 7 நீர்த்தேக்கங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் எந்த ஒரு நதியிலும் இந்த அளவுக்கு அணைக்கட்டுகள் கிடையாது.

  26. தாமிரபரணி நீர் பிடிப்புப் பகுதிகளில் ஆண்டுக்கு 1082 மி.மீ. மழை பெய்கிறது. இதில் 50 சதவீதம் கடலில் கலந்து வீணாகிறது.

  27. தாமிரபரணி பல இடங்களில் மிக அகலமாக உள்ளது. சீவலப் பேரியில்தான் மிக அகலமாய் உள்ளது.

  28. தாமிரபரணியில் பரிகாரம் என்ற பெயரில் உடுத்தியுள்ள துணிகளை போட்டு விடாதீர்கள். அது குடும்பத்துக்கு தேவை இல்லாத தோஷங்களை ஏற்படுத்தி விடும்.

  29. தாமிரபரணி தண்ணீர் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கடனா நதி பகுதியில் கரும்பாக இனிக்கும். சித்தாறு பகுதியில் குளிர்ச்சியாக இருக்கும். முறப்பநாடுக்கு பிறகு பளீர் வெள்ளை நிறமாக மாறி விடும்.

  30. தாமிரபரணி நதியில் காலை வைப்பதற்கு முன்பு, ‘‘தாயே உன்னைப் போற்றுகிறேன், என் பாவங்களைப் போக்கு’’ என்று கூறி வணங்கியபடி இறங்க வேண்டும். புனித நீராடும் போது குல தெய்வத்தை நினைத்து மானசீக வழிபாடு செய்து நீராட வேண்டும். காயத்ரி மந்திரம் உள்ளிட்ட மந்திரங்களை சொல்லி புனித நீராடுவது அதிக பலன்களை அள்ளித் தரும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா தொடங்கியுள்ளது. இனி தாமிரபரணி நதியின் மகிமையையும், அது பிறந்த வரலாற்றையும் காணலாம்.
  குருபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி, 11.-10-.2018 அன்று இரவு 7.17 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதாவது தாமிரபரணி நதியில் குருபகவான் பிரவேசிக்கிறார். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு புண்ணிய நதியில் நீராடக் கூடாது என்பதால், 12-10-2018 (வெள்ளி) அன்று காலை தாமிரபரணி புஷ்கர விழா நெல்லையில் தொடங்கியுள்ளது.

  கி.பி. 1874-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த ஆண்டு “மஹா புஷ்கரம்” என்ற மகோன்னத நிலையை, பெரும் மகிமையை தாமிரபரணி நதி அடையவிருக்கிறது. ‘மஹா’ என்றால் ‘பெரிய’ என்று பொருள். அகில ரூபமாக விளங்கும் இறைவனின் சொரூபமாகவே இந்நதி மாறி விடுகின்ற காலம் இது.

  இதனால் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மண்ணும் மகா பவித்திரம் (தூய்மை) ஆகிறது. அதை நெற்றியில் பூசிக் கொள்வதாலேயே கங்கையில் நீராடிய பலன் கிடைக்கிறது. தாமிரபரணியிலிருந்து வீசும் காற்று தன் தேகத்தில் படுவதாலேயே ஆத்மா புனிதமடைகிறது. இனி தாமிரபரணி நதியின் மகிமையையும், அது பிறந்த வரலாற்றையும் காணலாம்.

  சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நதி :

  சிவபெருமான், பார்வதி தேவியாரைக் கைலாய மலையில் திருமணம் செய்த பொழுது, தேவர் முதலியோர் வடதிசையில் வந்து குவிந்ததால் தென்திசை உயர்ந்தது. இதை சமப்படுத்த எண்ணிய சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்து, “தென்நாடு செல்க” எனக் கட்டளையிட்டார். அக்கட்டளைக்கு அடிபணிந்த அகத்தியர் சிவபெருமானிடம், “அது தமிழ்நாடு. தமிழ் பாஷை தமக்குத் தெரியாது. ஆகவே அதை எமக்கு சொல்லித் தருக” எனக் கேட்டனர்.

  உடனே சிவபெருமான் அகத்தியரை தம் அருகில் அமர வைத்து அவருக்கு தமிழ் மொழியைக் கற்பித்தார் என்று கந்த புராணம் கூறுகிறது. தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு பொதிகை மலையில் வந்து அமர்ந்தார் அகத்தியர். சூரியபகவான் அவர் முன் தோன்றி தமிழ் இலக்கணங்களையெல்லாம் கற்றுக் கொடுத்தார். முருகப் பெருமானும் அவ்வப்போது அகத்தியர் முன் தோன்றி தமிழ் மொழியின் பல சிறப்புக் கூறுகளை உபதேசித்ததாக கந்த புராணம் சொல்கிறது.

  முதல் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் முதல்வராய் இருந்து தமிழை வளர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார் அகத்தியர். பொதிகை மலையில் தங்கி அகத்தியரால் இயற்றப்பட்ட எழுத்துச் சொற்பொருள், யாப்பு, அணி முதலிய அடங்கிய இலக்கணத் தமிழ் நூல் “அகத்தியம்” எனப்படும். கலியுகத்திற்கு 4573 வருடங்களுக்கு முன் பிறந்தவர் அகத்தியர். கி.மு. 7673-ம் ஆண்டு கும்ப மாதத்தில் (மாசி மாதத்தில்) கும்ப ராசியில், கும்ப லக்னத்தில், ஒரு கும்பத்தில் பிறந்தவர் அகத்தியர். எனவே, இவருக்கு ‘கும்பமுனி’ என்ற பெயர் ஏற்பட்டது.

  அகத்தியரின் காலத்தை வைத்துப் பார்க்கும் போது அவரால் இயற்றப்பட்ட ‘அகத்தியம்’ என்ற தமிழ் இலக்கண நூல் 9600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிய வருகிறது. அகத்தியர் பொதிகை மலையில் தங்கி தமிழ்ப்பணி செய்யும் போது சிவபெருமான் அவர் முன் தோன்றி “உனக்கு இங்கே என்ன வேண்டும்? கேள். தருகிறேன்” என்றார்.

  “எனக்கு நீராட நதி ஒன்று வேண்டும்” என்றார் அகத்தியர். உடனே, பொதிகை மலையில் நதி ஒன்றை உருவாக்கி அதை அவருக்கே தானமாகக் கொடுத்தார் சிவபெருமான். இந்நதி உருவான போது, அது தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அதற்கு ‘தாம்பிர வர்ணி’ என்று பெயர் சூட்டினார் ஈசனார். காலப் போக்கில் அது தாமிரபரணி என்று மாற்றம் பெற்றது.

  தாமிரபரணியின் உற்பத்தி ஸ்தானம் பாண தீர்த்தம் எனப்படும். இது பொதிகை மலையில் உள்ளது. இதை அடைவது மிகக் கடினம். 1730 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக 125 கி.மீட்டர் தூரம் பயணம் செய்து தூத்துக்குடிக்கும் திருச்செந்தூருக்கும் இடையே புன்னைக்காயல் என்ற இடத்தில் வங்கக்கடலில் சங்கமமாகிறது தாமிரபரணி.

  வற்றாத ஜீவ நதியாக வருடம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் இந்நதிக்கரையில் உள்ள திருநெல்வேலியில் தான் நடராஜப் பெருமானின் நாட்டிய சபைகளுள் ஒன்றான “தாமிரசபை” அமைந்துள்ளது.இந்நதிக்கரையில் ஏராளமான திருக்கோயில்கள் உள்ளன. ‘நவகைலாயம்’ என்று புகழ் பெற்ற ஒன்பது கைலாயங்கள் இந்நதிக்கரையில் உள்ளன. நவதிருப்பதி என்று புகழ் பெற்ற ஒன்பது வைணவ தலங்களும், தாமிரபரணி நதிக்கரையின் அருகிலேயே அமைந்துள்ளன.