கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா

கோவில்பட்டி அருகே அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.இதனையொட்டி நேற்று இரவு 8.15மணிக்கு கணபதி பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.
பூமாதேவி ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா நடந்தபோது எடுத்த படம்
பூமாதேவி ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா நடந்தபோது எடுத்த படம்
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதனையொட்டி நேற்று இரவு 8.15மணிக்கு கணபதி பூஜை, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், குரு மூல மந்திர ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தட்சிணாமூர்த்தியான குரு பகவானுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் சுப்பிரமணியன் அய்யர், ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் ஆகியோர் செய்தனர். விழாவில் மகாராஜா, மாரியப்பன், பிரேம், மாரிஸ்வரன், கதிர்காமன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, செல்வராணி, முத்துலட்சுமி, மாரியம்மாள், சந்திரா, மாரித்தாய் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாததரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com