search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephant camp"

    • வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் தண்ணீர் தேடிவரும் வன விலங்குகள் அருவி பகுதியில் முகாமிட்டு வருகின்றன.
    • யானைகளை வனப்பகுதி க்குள் விரட்டிய பிறகு அனுமதி வழங்கப்படும்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பைன் பாரஸ்ட், குணாகுகை உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் இருந்தபோதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அடர்ந்த வனப்பகுதியின் நடுவே குளிர்ந்த காற்றுடன் ஏரிப்பகுதியில் பயணம் மேற்கொள்வது புத்துண ர்ச்சியை தருகிறது. பேரிஜம் ஏரிக்கு செல்ல மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்து கட்டணம் செலுத்தி செல்லவேண்டும். வனப்ப குதியை ஒட்டி யுள்ளதால் தண்ணீர் தேடிவரும் வன விலங்குகள் அருவி பகுதி யில் முகாமிட்டு வருகின்றன.

    குறிப்பாக யானைகள் கூட்டமாக சுற்றி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இன்று பேரிஜம் ஏரியில் தடை விதிக்கப்பட்டது. யானைகளை வனப்பகுதி க்குள் விரட்டிய பிறகு அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரி வித்தனர்.

    • விவசாயிகள் அச்சம்
    • தமிழக வனப் பகுதிக்குள் வராதவாறு தடுக்க வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமம் அருகே தமிழக எல்லையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆந்திரா மாநில பகுதியில் 15 யானைகள் கொண்ட கூட்டம் சாலையின் குறுக்கே இப்பகுதியில் இருந்து அப்பகுதிக்கு கடந்து சென்றுள்ளது.

    இதனால் குடியாத்தம் பலமநேர் சாலையில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் நின்று ஒலி எழுப்பி யானைகள் வனப்பகுதிக்கு சென்ற பின்னரே வாகனங்களை இயக்கினர்.

    குறிப்பாக முசலமடுகு காலவபல்லி பகுதியில் நெடுஞ்சாலையில் யானைகள் கூட்டம் கடந்து வந்து சென்றுள்ளது.

    தமிழக வனப் பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த யானைகள் முகாமிட்டு இருப்பதால் ஆந்திர மாநிலம் எல்லையோரம் உள்ள தமிழக கிராமங்களான சைனகுண்டா, மோர்தானா கொட்டமிட்டா, தனகொண்டபல்லி, கொல்லப்பல்லி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் யானைகள் கூட்டம் மீண்டும் விலை நிலங்களுக்குள் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

    வனத்துறையினர் அந்த யானைகள் கூட்டத்தை தமிழக வனப் பகுதிக்குள் வராதவாறு தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • யானைகளை ரசிக்க நிற்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்.
    • கோல்ஸ்லேண்ட், கோஞ்சால் பகுதியில் 30க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சேரம்பாடி வனச்சரகத்தில் சேரங்கோடு, காபிக்காடு, காவயல், கோல்ஸ்லேண்ட், கோஞ்சால் பகுதியில் 30க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது.

    உதவி வனப்பாதுகாவலர் ஷர்மிளி மேற்பார்வையில் வனக்குழுவினர் இப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கூடலூர்- கோழிக்கோடு சாலையில், அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் யானைகளை ரசிக்க நிற்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர். 

    தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் காட்டு யானைகள் புகுவதை தடுக்க தொங்கும் மின்வேலி அமைக்கப்பட்டது.
    மசினகுடி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம், அதன் வெளிமண்டல பகுதிகள் மற்றும் கூடலூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. அவ்வாறு வரும் காட்டு யானைகள் தொழிலாளர்களின் வீடுகளை சேதப் படுத்துவதோடு, விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி வருகிறது.

    இதனை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனை தொடர்ந்து காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து ஊருக்குள் புகுவதை தடுக்க குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் சூரிய மின்வேலி அமைக்கப்பட்டது. அதேபோல் வனப்பகுதிகளின் எல்லையில் அகழிகளும் தோண்டப்பட்டு உள்ளன. ஆனால், காட்டு யானைகள் சூரிய மின்வேலிகளையும், அகழிகளையும் கடந்து தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இதனால் காட்டு யானைகளை கட்டுப்படுத்துவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதையடுத்து யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை முழுவதுமாக கட்டுப்படுத்த தொங்கும் மின்வேலிகளை வனத்துறையினர் அமைக்கும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு உள்ளனர். முதல் கட்டமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமை சுற்றி தொங்கும் மின்வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் வளர்ப்பு யானைகள் முகாம் பகுதிக்குள் புகுவதை தடுப்பதற்காக இந்த வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    சீரான இடைவெளியில் இரும்பு கம்பங்கள் நடப்பட்டு, அவற்றின் குறுக்கே கம்பிகள் கட்டப்பட்டு உள்ளன. அந்த இரும்பு கம்பங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி விட்டு உள்ளே நுழையாமல் இருப்பதற்காக, இரும்பு கம்பங்களின் மேல்பகுதியில் இருந்து ஏராளமான கம்பிகள் கீழ்நோக்கி தொங்க விடப்பட்டு உள்ளது. இந்த கம்பிகளில் இரவு நேரங்களில் குறைந்த திறன் கொண்ட மின்சாரம் செலுத்தப்படும். அந்த சமயங்களில் காட்டு யானைகள் வேலியை சேதப்படுத்தி விட்டு, உள்ளே வர முயன்றால் தொங்க விடப்பட்டு உள்ள கம்பிகளில் பாய்ந்து கொண்டு இருக்கும் மின்சாரம் தாக்குவதால் காட்டு யானைகள் திரும்பி வனப்பகுதிக்குள் செல்லும். வேலியில் செலுத்தப்படும் மின்சாரம் குறைந்த திறன் கொண்ட மின்சாரம் என்பதால், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த திட்டம் விரைவில் முதுமலை புலிகள் காப்பகத்தின் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. 
    முதுமலை வளர்ப்பு யானை முகாமில் கேரளாவை சேர்ந்த 3 யானைகளுக்கு கும்கி பயிற்சி தொடங்கியது.
    மசினகுடி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் பழமையான வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. தாயிடமிருந்து பிரிந்து தவிக்கும் குட்டி யானை, நோய்வாய்படும் யானைகள் பிடிக்கபட்டு இந்த முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது இந்த முகாமில் 23 வளர்ப்பு யானைகள் பராமரிக்கபட்டு வரும் நிலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த, நீலகண்டன்(வயது 22), சூரியன்(20), சுரேந்திரன்(20) ஆகிய 3 யானைகள் கும்கி பயிற்சி பெற முதுமலைக்கு கொண்டு வரப்பட்டன.

    இதனை தொடர்ந்து இந்த 3 யானைகளும் தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு கட்டப்பட்டன. பின்னர் பயிற்சிக்காக யானைகள் அங்குள்ள உணவு கூடத்திற்கு அழைத்து வரபட்டன. பின்னர் முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் சண்முகப்பிரியா, கேரள மாநில முத்தங்கா வனக்கோட்ட வன அலுவலர் சாஜன், கோவை மண்டல வனக்கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் யானைகளுக்கு கரும்பு உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை அளித்து பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த 3 யானைகளுக்கும் 90 நாட்கள் கும்கி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் யானைகளை ஆற்றில் குளிக்க வைத்தல், அத்துடன் காட்டு யானைகளை விரட்டுதல், ரோந்து செல்லுதல், மரங்களை தூக்கி செல்லுதல், பாகன்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்படுதல் என பல்வேறு வகையான கும்கி பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன என்றனர்.

    இந்த பயிற்சிகளை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள பாகன்கள், மருத்துவர்கள் அளிக்க உள்ளனர். நேற்று நடைபெற்ற பயிற்சி தொடக்க விழாவில் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை களஇயக்குனர் புஸ்பாகரன், வனச்சரகர்கள் தயானந், சிவக்குமார், காந்தன், மாரியப்பன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×