search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேரம்பாடி"

    • பின்னர் கவிழ்ந்த சரக்கு வாகனத்தை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
    • தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    ஊட்டி:

    கூடலூரில் இருந்து பாடந்தொரை வழியாக தேவர்சோலை நோக்கி சரக்கு வாகனம் ஒன்று நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது.

    அப்போது பாடந்தொரை அரசு பள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்தது. தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் ஊட்டியில் இருந்து காய்கறி, பழக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு பந்தலூர் தாலுகா குந்தலாடிக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. இருப்பினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    பின்னர் கவிழ்ந்த சரக்கு வாகனத்தை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • யானைகளை ரசிக்க நிற்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்.
    • கோல்ஸ்லேண்ட், கோஞ்சால் பகுதியில் 30க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சேரம்பாடி வனச்சரகத்தில் சேரங்கோடு, காபிக்காடு, காவயல், கோல்ஸ்லேண்ட், கோஞ்சால் பகுதியில் 30க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது.

    உதவி வனப்பாதுகாவலர் ஷர்மிளி மேற்பார்வையில் வனக்குழுவினர் இப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கூடலூர்- கோழிக்கோடு சாலையில், அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் யானைகளை ரசிக்க நிற்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர். 

    ×