என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆந்திர எல்லையில் 15 காட்டு யானைகள் முகாம்
- விவசாயிகள் அச்சம்
- தமிழக வனப் பகுதிக்குள் வராதவாறு தடுக்க வலியுறுத்தல்
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமம் அருகே தமிழக எல்லையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆந்திரா மாநில பகுதியில் 15 யானைகள் கொண்ட கூட்டம் சாலையின் குறுக்கே இப்பகுதியில் இருந்து அப்பகுதிக்கு கடந்து சென்றுள்ளது.
இதனால் குடியாத்தம் பலமநேர் சாலையில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் நின்று ஒலி எழுப்பி யானைகள் வனப்பகுதிக்கு சென்ற பின்னரே வாகனங்களை இயக்கினர்.
குறிப்பாக முசலமடுகு காலவபல்லி பகுதியில் நெடுஞ்சாலையில் யானைகள் கூட்டம் கடந்து வந்து சென்றுள்ளது.
தமிழக வனப் பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த யானைகள் முகாமிட்டு இருப்பதால் ஆந்திர மாநிலம் எல்லையோரம் உள்ள தமிழக கிராமங்களான சைனகுண்டா, மோர்தானா கொட்டமிட்டா, தனகொண்டபல்லி, கொல்லப்பல்லி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் யானைகள் கூட்டம் மீண்டும் விலை நிலங்களுக்குள் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
வனத்துறையினர் அந்த யானைகள் கூட்டத்தை தமிழக வனப் பகுதிக்குள் வராதவாறு தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.