என் மலர்

  நீங்கள் தேடியது "Du Plessis"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒவ்வொரு அணியும் ஏலத்துக்கு முன்பு 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்யலாம்
  • 38 வயதான டூ பிளெசிஸ் சி.எஸ்.கே. அணிக்காக 100 ஆட்டத்தில் விளையாடி இருக்கிறார்.

  புதுடெல்லி:

  ஐ.பி.எல். போட்டியை போன்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 20 ஓவர் 'லீக்' போட்டியை நடத்துகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த போட்டி நடக்கிறது.

  தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள இந்த 20 ஓவர் 'லீக்' தொடரில் விளையாட உள்ள 6 அணிகளை 6 ஐ.பி.எல். உரிமையாளர்கள் வாங்கி உள்ளனர்.

  இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி நிர்வாகம் ஒரு அணியை வாங்கியுள்ளது. அந்த அணி ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் (ஜே.எஸ்.கே.) என்று அழைக்கப்படுகிறது.

  6 அணியும் 17 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ஏலத்துக்கு முன்பு 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்யலாம் என்று போட்டி அமைப்பு குழு தெரிவித்து இருந்தது. எஞ்சிய 12 வீரர்களை செப்டம்பர் மாதம் 20-ந் தேதி நடைபெறும் ஏலத்தில் தேர்ந்து எடுக்கலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது.

  இந்த நிலையில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு டூ பிளெசிஸ் கேப்டனாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டோனி ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதால் அவரால் வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாது.

  டூ பிளெசிஸ் ரூ.2.98 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டனான அவர் 2011 முதல் 2015 வரையிலும், 2018 முதல் 2021 வரை ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.

  38 வயதான டூ பிளெசிஸ் சி.எஸ்.கே. அணிக்காக 100 ஆட்டத்தில் விளையாடி இருக்கிறார். இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

  டூ பிளெசிஸ் தவிர மேலும் 4 வீரர்கள் ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகி உள்ளனர். இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொய்ன் அலி ரூ.3.18 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

  இலங்கையை சேர்ந்த தீக்சனா (ரூ.1.59 கோடி), வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரொமரியோ ஷெப்பர்டு (ரூ.1.39 கோடி), தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீரர் ஜெரால்டு கோட்சீ (ரூ.39 லட்சம்)ஆகியோரும் ஒப்பந்தமாகி உள்ளனர். இதுகுறித்து சி.எஸ்.கே. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

  இதில் மொயின் அலி, தீக்சனா ஐ.பி.எல். போட்டி யில் சி.எஸ்.கே. அணிக்கு ஆடி வருகிறார்கள்.

  மேலும் சி.எஸ்.கே. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருப்பார்.

  சிம்மன்ஸ், அல்பி மார்கல் ஆகியோரும் பயிற்சி யாளர் குழுவில் இடம் பெற்று இருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கின்றன. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் காயம் காரணமாக இலங்கைக்கு எதிராக எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். #SAvIND
  தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

  இலங்கை அணி பேட்டிங் செய்தபோது, 10-வது ஓவரில் டு பிளிசிஸ் கேட்ச் பிடிக்க முயற்சி செய்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் பீல்டிங் செய்ய வரவில்லை.

  இந்நிலையில் தோள்பட்டை காயத்திற்காக 6 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் எஞ்சிய இரண்டு ஒருநாள் மற்றம் ஒரெயொரு டி20 போட்டியில் இருந்து டு பிளிசிஸ் விலகியுள்ளார்.

  ஏற்கனவே முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. நாளை 4-வது போட்டி நடக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டுமினி, டு பிளிசிஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. #SLvSA
  இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை ரபாடா (4) மற்றும் ஷம்சி (4) ஆகியோரின் அபார பந்து வீச்சால் 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 193 ரன்னில் சுருண்டது.

  பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. அம்லா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அம்லா 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.  அடுத்து வந்த மார்கிராம் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 31 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

  அடுத்து டி காக் உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 117 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டி காக் 59 பந்தில் பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  டு பிளிசிஸ் 56 பந்தில் 10 பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டுமினி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க 31 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

  இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி ஆகஸ்ட் 1-ந்தேதி நடக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொழும்பில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா பெரேரா, தனஞ்ஜெயா சுழற்பந்து வீச்சில் சிக்கி 124 ரன்னில் சுருண்டது. #SLvSA
  இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் நேர்த்தியாக பந்து வீசி 8 விக்கெட் வீழ்த்தவும், அதேநேரத்தில் இலங்கையின் குணதிலகா (57), கருணாரத்னே (53), டி சில்வா (60) ஆகியோர் அரைசதம் அடிக்கவும் இலங்கை நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. தனஞ்ஜெயா 16 ரன்களுடனும், ஹெராத் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

  இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹெராத், தனஞ்ஜெயா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஹெராத் 35 ரன்னில் அவுட் ஆக, தனஞ்ஜெயா 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இலங்கை அணி 338 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மகாராஜ் 9 விக்கெட் வீழத்தி அசத்தினார்.  பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. தனஞ்ஜெயா, தில்ருவான் பெரேரா ஆகியோரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பிக் கொண்டே இருந்தனர். கேப்டன் டு பிளிசிஸ் மட்டும் தாக்குப்பிடித்து 48 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பர் டி காக் 32 ரன்கள் சேர்க்க 34.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென்ஆப்பிரிக்கா 124 ரன்னில் சுருண்டது. தனஞ்ஜெயா 5 விக்கெட்டும், தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

  காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 126 ரன்னிலும், 73 ரன்னிலும் தென்ஆப்பிரக்கா சுருண்டது. தற்போது 124 ரன்னில் சுருண்டுள்ளது.
  ×