search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drug addict"

    • ரெயிலில் படுத்திருந்ததால் வாலிபர் அங்கும் இங்கும் உருண்டு கொண்டிருந்தார்.
    • பயணிகள் கழிவறைக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    அரக்கோணம்:

    சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்டிரலில் இருந்து புறப்பட்டது.

    இந்த ரெயிலில் ஏ.சி.பெட்டியின் கழிவறை அருகே வாலிபர் ஒருவர் படுத்திருந்தார். ஓடும் ரெயிலில் படுத்திருந்ததால் வாலிபர் அங்கும் இங்கும் உருண்டு கொண்டிருந்தார்.

    இதனால் பயணிகள் கழிவறைக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ரெயில் பயணிகள் வாலிபரை எழுப்ப முயன்றனர். முடியாததால் இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் புகார் அளித்தனர்.

    டிக்கெட் பரிசோதகர் வாலிபரை எழுப்ப முயன்றார். அப்போது தான் அவர் மது போதையில் படுத்திருந்தது தெரிந்தது.

    இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரெயில் அரக்கோணம் வந்ததும், தயாராக இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கழிவறையின் அருகே படுத்திருந்த போதை வாலிபரை தூக்கி வெளியே இழுத்து பிளாட்பாரத்தில் போட்டனர்.

    இதனால் ரெயில் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். போதை வாலிபர் எழுந்திருக்க முடியாமல் பிளாட்பாரத்திலும் படுத்துக்கொண்டு உருண்டார்.

    மேலும் அந்த நபர் யார்? எங்கிருந்து பயணம் செய்கிறார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • யாருடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் வராமல் இருந்த அந்த வாலிபரை ஒரு வழியாக ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர்.
    • போதை வாலிபரின் இந்த நிர்வாண கலாட்டா சென்னை போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    சென்னை:

    சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சுற்றுலா பயணிகள் பலர் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த ஓட்டலில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலியுடன் அறை எடுத்து தங்கினார்.

    நட்சத்திர ஓட்டலில் மது அருந்தி உற்சாகமாக இருந்த அந்த வாலிபர் திடீரென காதலியை மட்டும் அறையில் அமர வைத்துவிட்டு வெளியில் வந்தார். உடலில் ஒட்டு துணிகூட இல்லாமல் காணப்பட்ட அந்த வாலிபா் நிர்வாணமாக ஓட்டல் வளாகத்துக்குள் சுற்றினார்.

    ஓட்டலில் இருந்த மற்ற அறைகளுக்குள் அத்து மீறி புகுந்த அவர் அங்கிருந்த பெண்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் முன்னால் போய் கூச்சமின்றி நின்றார்.

    ஓட்டலில் தங்கியிருந்த பெண்கள் "அய்யோ... இது என்ன கொடுமை" என்று கூறிய படியே அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    இதனால் ஓட்டலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டல் நிர்வாகத்தினர் மற்றும் ஓட்டலில் தங்கி இருந்த மற்ற ஆண்கள் போதையில் ஆட்டம் போட்ட வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அவர் போதை தலைக்கேறிய நிலையில் காணப்பட்டதால் நம்மை சுற்றி என்ன நடக்கிறது? என்பதை கூட அவரால் உணர முடியவில்லை. யாருடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் வராமல் இருந்த அந்த வாலிபரை ஒரு வழியாக ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஓட்டலுக்கு போலீசாரும் விரைந்து சென்றனர். அவர்களிடம் நிர்வாண போதை வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.

    போலீஸ் விசாரணையில் போதை வாலிபர் சென்னை ஓ.எம்.ஆர். பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் என்பது தெரிய வந்தது. காதலியுடன் 2 நாட்களுக்கும் மேலாக நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    நேற்று இரவு மதுகுடித்து காதலியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் உச்சக்கட்ட போதையில் அப்படியே வெளியில் வந்து பெண்களை அச்சுறுத்தி ஓடவிட்டதும் விசாரணையில் அம்பலமானது. போதை வாலிபரின் இந்த நிர்வாண கலாட்டா சென்னை போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    • போதை ஆசாமிகள் தொல்லையால் ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து மதுரை, தூத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை, திருச்சி, நாகர் கோவில் உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதி களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது.

    தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையம் அருகே அம்மா உணவகம் பின் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இங்கு மது அருந்து பவர்களில் சிலர் பஸ் நிலையம் வளாகத்திற்குள் வந்து பயணிகளிடம் வம்பு செய்கின்றனர்.

    போதை தலைக்கேறிய சிலர் பஸ்சிற்குள் அமர்ந்திருக்கும் பயணிகளிடம் பணம் கேட்டும் தொல்லை செய்கின்றனர். இதை கண்டிக்கும் கண்டக்டர், டிரைவர்களிடம் தகராறு செய்கின்றனர்.

    இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே பஸ் ஸ்டாண்டிற்குள் போதையில் குறிப்பாக இரவில் அரைநிர்வாணமாக திரிவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள் வலியுறுத்தினர்.

    • அந்த நபரை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
    • திருப்பூர், கோர்ட் ரோட்டில் இளம்பெண் ஒருவர், கணவருடன் நேற்றுமாலை நடந்து சென்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர், கோர்ட் ரோட்டில் இளம்பெண் ஒருவர், கணவருடன் நேற்றுமாலை நடந்து சென்றார். அங்கு ரோட்டில் வலம் வந்த போதை ஆசாமி ஒருவர் பெண்ணிடம் அத்துமீற முயற்சி செய்தார். ஆத்திரமடைந்த அப்பெண், அந்த நபரை பிடித்து அடி வெளுத்து எடுத்தார். இதே போல் மற்றொரு பெண்ணையும் அந்த ஆசாமி கையைப் பிடித்து இழுத்து அத்திமீறி நடந்துள்ளார்.

    இதனைப்பார்த்த பொதுமக்களும் 'தர்மஅடி' கொடுத்தனர். அப்போது அந்த ஆசாமி பொதுமக்கள் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றார். அப்போது பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து, தகவலறிந்து சென்ற வடக்கு போலீசாரிடம், நக்கலாக பேசியபடி அந்த நபர் அமர்ந்திருந்தார்.

    'கூலிங் கிளாஸ்' போட்டு கொண்டு, 'நான் பாட்ஷா ரஜினி தெரியுமா' என, தலைமுடியை ஸ்டைலாக கோதி விட்டார். அந்த நபரை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் போதையின் இருப்பதும் லேசான மனநிலை பாதிக்கப்ப ட்டிருப்பதும் தெரியவந்தது இதனையடுத்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    • இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு ஒருவரும் இல்லாத சமயத்தில் அதை எடுத்துக்கொண்டு சிட்டாய் பறந்து விட்டார்.
    • வாகனத்தை திருடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சூலூர்,

    சூலூர் அருகே அரசூர் ஊராட்சி செயல்பட்டு வருகிறது. அரசூர் ஊராட்சி அலுவலகத்திற்கு முன்பாக அங்கு பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்வது வழக்கம்.

    நேற்று ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த போதை நபர் அங்குள்ளவர்களிடம் தனக்கு குடிக்க பணம் வேண்டும் 50 ரூபாய் கொடுங்கள் என கேட்டுள்ளார். ஏற்கனவே போதையில் இருந்த அந்த போதை நபரை அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லுமாறு அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

    அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போதை நபர், தான் வந்த பழைய இருசக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு அங்கிருந்த புதிய ஒரு இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு ஒருவரும் இல்லாத சமயத்தில் அதை எடுத்துக்கொண்டு சிட்டாய் பறந்து விட்டார்.

    அந்த இருசக்கர வாகனமானது அரசூர் ஊராட்சி அலுவலகத்தில் திட்ட பிரிவில் பணியாற்றும் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமானது.

    வெளியே வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்து ராமச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். இது சம்பந்தமாக சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். தற்போது போதை நபர் இருசக்கர வாகனத்தை திருடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பண்ருட்டி பிரதான சாலையில் போதை ஆசாமி வீசிய துண்டு பீடியால் வீடு தீப்பிடித்து எரிந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சாலையில் போக்குவரத்தை தடை செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டியில் பிரதான சாலையான ராஜாஜி சாலையில் பாழடைந்த ஓட்டு வீடு ஒன்று போதை ஆசாமி ஒருவன் புகைத்து விட்டு வீசிய துண்டு பீடியால் தீப்பிடித்து எரிந்தது. தீமளமளவென எரிந்து அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் இரவு ரோந்து பணியில் இருந்த பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்பரமேஸ்வர பத்மநாபன்,சப்.இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், தலைமை காவலர் சுப்பிரமணி, மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரை ந்து சென்று அந்த சாலையில் போக்குவரத்தை தடை செய்தனர்.

    இது பற்றி உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புநிலைய அலு வலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீமேலும் பரவாமல் அணைத்தனர்.போலீசாரின்உடனடிநடவடிக்கையால்அந்த பகுதியில்பெரும்தீவிபத்துதடுக்கப்பட்டது. சிறிது நேரம் அங்கு பதட்டம் நிலவியது.

    • குட்டி என்பவர் குடிபோதையில் மினி லாரியை நிறுத்தி கமலக்கண்ணனுடன் தகராறில் ஈடுபட்டு மினி லாரி கண்ணாடியை உடைத்தார்.
    • கமலக்கண்ணன் அனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே அனந்தபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சங்கீதமங்கலத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் மினி லாரியை ஓட்டி வந்தார். விழுப்புரம் அருகே ஒலக்கூரை பகுதியில் வந்த போது அதே பகுதியை சேர்ந்த குட்டி (வயது 35) என்பவர் குடிபோதையில் மினி லாரியை நிறுத்தி கமலக்கண்ணனுடன் தகராறில் ஈடுபட்டு மினி லாரி கண்ணாடியை உடைத்தார். இதுகுறித்து கமலக்கண்ணன் அனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×