search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delhi rain"

    • டெல்லியில் இருந்து சென்னைக்கு செல்லவிருந்த மூத்த அரசு அதிகாரி ஒருவர், தனது விமானம் 5 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக வந்ததாக தெரிவித்தார்.
    • அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து 36.8 டிகிரி செல்சியசாக இருந்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. கடுமையான வெயிலில் தவித்த பொதுமக்கள் சிறிது நேரம் பெய்த மழையால் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இந்தநிலையில் மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 15 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. மேலும் பல விமானங்களும் தாமதமாக வந்தன.

    இந்த விமானங்களில், 9 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், தலா 2 விமானங்கள் அமிர்தசரஸ் மற்றும் லக்னோவிற்கும், தலா ஒரு விமானம் மும்பை மற்றும் சண்டிகருக்கும் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    டெல்லியில் இருந்து சென்னைக்கு செல்லவிருந்த மூத்த அரசு அதிகாரி ஒருவர், தனது விமானம் 5 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக வந்ததாக தெரிவித்தார்.

    இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறும் போது, டெல்லியில் வானிலை திடீரென மாறியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து 36.8 டிகிரி செல்சியசாக இருந்தது. பலத்த காற்றும் லேசான மழையும் பெய்தது. அடுத்த 7 நாட்களுக்கு டெல்லியில் வெப்ப அலைக்கான சாத்தியம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

    • தென்மேற்கு டெல்லி வசந்தவிகார், முகிர்தா, ஆர்.கே. புரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த மழை கொட்டியது.
    • மழை காரணமாக டெல்லி-நொய்டா தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புதுடெல்லி:

    தென்மேற்கு டெல்லி வசந்தவிகார், முகிர்தா, ஆர்.கே. புரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த மழை கொட்டியது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    மழை காரணமாக டெல்லி-நொய்டா தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது. வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளானார்கள்.

    டெல்லியில் மேலும் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • பலத்த மழை காரணமாக டெல்லியில் முக்கிய சாலைகளில் வெள்ளம் இடுப்பளவுக்கு இருந்தது.
    • டெல்லியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல இடங்களில் நிவரண முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முதல் தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய பெய்தது.

    தொடர் மழை காரணமாக டெல்லியில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவிலும் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.

    பலத்த மழை காரணமாக டெல்லியில் முக்கிய சாலைகளில் வெள்ளம் இடுப்பளவுக்கு இருந்தது. இதனால் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றன. பெரும்பாலான இடங்களில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    டெல்லியில் தொடர்ந்து மழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் யமுனை நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

    டெல்லியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல இடங்களில் நிவரண முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    • யமுனை ஆற்றில் மறுபடியும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    டெல்லி, இமாசலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டியதால் பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது. டெல்லி யமுனை ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பின்னர் வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் டெல்லியில் மீண்டும் மழை பெய்து வருகிறது. நேற்று பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் யமுனை ஆற்றில் மறுபடியும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவை தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. நேற்று காலை யமுனையில் 205.96 மீட்டர் அளவாக இருந்த நீர்மட்டம் இரவு 9 மணி அளவில் 206.42 மீட்டராக உயர்ந்தது.

    இன்று காலை இது 206.56 மீட்டர் நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளானார்கள்.

    யமுனையில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கரையோரம் தாழ்வான பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். டெல்லியில் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    • மழை வெள்ளம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • யமுனை ஆற்றில் பழைய கால படங்கள் மற்றும் ஓவியங்களையும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    டெல்லி மற்றும் அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பகுதியில் பெய்த கனமழையால் யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் டெல்லியில் வி.ஐ.பி. பகுதிகள் உள்பட அனைத்து இடங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    இந்த மழை வெள்ளம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது யமுனா தனது இடத்தை மீட்டெடுக்கிறது என்ற தலைப்பில் யமுனை ஆற்றின் பழைய புகைப்படங்களையும், தற்போது வெள்ளம் பாய்ந்தோடும் பகுதிகளையும் பதிவிட்டு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த புகைப்படங்களில் ஒரு காலத்தில் செங்கோட்டையின் பின்புற சுவருக்கு அருகில் யமுனா நதி எவ்வாறு பாய்ந்து செல்கிறது என்பதை காண முடிகிறது.

    மேலும் யமுனை ஆற்றில் பழைய கால படங்கள் மற்றும் ஓவியங்களையும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
    • கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    புதுடெல்லி:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்லி, அரியானா, இமாச்சல பிரதேசம் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் அரியானாவின் அத்னிகுண்ட் தடுப்பணைக்கு வந்தது. அந்த தண்ணீர் யமுனை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் யமுனையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் டெல்லி நகருக்குள் புகுந்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் மார்பளவு தேங்கி உள்ளது.

    இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளுக்கு உதவவும் 4500-க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    டெல்லியில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளத்தில் சிக்கிய பலர் உணவு இல்லாமல் பட்டினியில் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு தன்னார்வலர்கள், மீட்பு படையினர் உதவி வருகின்றனர்.

    இந்தநிலையில் கனமழை ஓய்ந்ததால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஓரளவு குறைந்தது. ஆனால் இன்று மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    • மெட்ரோ கட்டுமானப் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் வெள்ளத்தில் குளிக்க குதித்தனர்.
    • சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    வடமாநிலங்களில் பெய்த பேய்மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தலைநகர் டெல்லி வெள்ளத்தில் மூழ்கியது.

    டெல்லியில் சாலை எங்கும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைநீரை வெளியேற்றும் பணியில் டெல்லி அரசு ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியின் முகுந்த்பூரில் தேங்கி இருந்த வெள்ள நீரில் குளித்த மூன்று சிறுவர்கள் அதில் மூழ்கி உயிரிழந்தனர்.

    டெல்லி முகுந்த்பூரில் உள்ள மெட்ரோ கட்டுமானப் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் வெள்ளத்தில் குளிக்க குதித்த சிறுவர்கள் நீரில் மூழ்கினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வெள்ளத்தில் மூழ்கிய சிறுவர்களை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    உயிரிழந்த சிறுவர்கள் பியூஷ் (13), நிகில் (10), ஆஷிஷ் (13) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

    டெல்லியில் உள்ள சப்தர்ஜங் வானிலை மையத்தில் மதியம் 2.30 மணி வரை 98.7 மிமீ மழை பதிவாகியுள்ளது. ரிட்ஜ் மையத்தில் 111.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    மேலும் டெல்லி மற்றும் என்சிஆர், யமுனா நகர், குருக்ஷேத்ரா, கர்னால், அசாந்த், பானிபட், கோஹானா, கன்னார், மெஹம், சோனிபட், ரோஹ்தக், கார்கோடா, பிவானி, சர்க்கி தாத்ரி, மட்டன்ஹைல், ஜஜ்ஜார், கோஸ்ஸாவின் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தலைநகர் டெல்லியில் இடி, மின்னலுடன் இன்று மாலை பெய்துவரும் கனமழை காரணமாக தரையிறங்க வேண்டிய 18 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. #raininDelhi #flightsdiverted
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் கடந்த 15 நாட்களாக வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது.

    மேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர பல வாகனங்கள் சென்றதை காண முடிந்தது.

    சூறைக்காற்றை தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழையும் பெய்து வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதும், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் டெல்லியில் இருந்து பிறபகுதிகளுக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், இங்கு தரையிறங்க வேண்டிய 18 விமானங்கள் பிறபகுதிகளில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. #raininDelhi #flightsdiverted 
    ×