search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளம்- தாழ்வான பகுதி மக்கள் வெளியேற உத்தரவு
    X

    டெல்லியில் யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளம்- தாழ்வான பகுதி மக்கள் வெளியேற உத்தரவு

    • யமுனை ஆற்றில் மறுபடியும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    டெல்லி, இமாசலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டியதால் பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது. டெல்லி யமுனை ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பின்னர் வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் டெல்லியில் மீண்டும் மழை பெய்து வருகிறது. நேற்று பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் யமுனை ஆற்றில் மறுபடியும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவை தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. நேற்று காலை யமுனையில் 205.96 மீட்டர் அளவாக இருந்த நீர்மட்டம் இரவு 9 மணி அளவில் 206.42 மீட்டராக உயர்ந்தது.

    இன்று காலை இது 206.56 மீட்டர் நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளானார்கள்.

    யமுனையில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கரையோரம் தாழ்வான பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். டெல்லியில் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    Next Story
    ×