டெல்லியில் தேங்கிய வெள்ளத்தில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மெட்ரோ கட்டுமானப் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் வெள்ளத்தில் குளிக்க குதித்தனர்.சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
டெல்லியில் தேங்கிய வெள்ளத்தில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Published on

வடமாநிலங்களில் பெய்த பேய்மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தலைநகர் டெல்லி வெள்ளத்தில் மூழ்கியது.

டெல்லியில் சாலை எங்கும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைநீரை வெளியேற்றும் பணியில் டெல்லி அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியின் முகுந்த்பூரில் தேங்கி இருந்த வெள்ள நீரில் குளித்த மூன்று சிறுவர்கள் அதில் மூழ்கி உயிரிழந்தனர்.

டெல்லி முகுந்த்பூரில் உள்ள மெட்ரோ கட்டுமானப் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் வெள்ளத்தில் குளிக்க குதித்த சிறுவர்கள் நீரில் மூழ்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வெள்ளத்தில் மூழ்கிய சிறுவர்களை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவர்கள் பியூஷ் (13), நிகில் (10), ஆஷிஷ் (13) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com