search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "christmas party"

    • இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை நினைவுகூறுவோம்.
    • போப் பிரான்சிஸ் உடனான சந்திப்பை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.

    டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் நேரந்திர மோடி கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உள்ளூர் கிறிஸ்தவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, மெழுகுவர்த்திகளை ஏற்றினார்.

    பிறகு உரையாற்றிய அவர், உலகம் முழுக்க கிறிஸ்துமஸ் கொண்டாடும் மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நாளில் தனது வாழ்க்கையை மனித குலத்திற்கு சேவையாற்றவும், ஏழை, எளியோருக்காக அர்ப்பணித்த இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை நினைவுகூறுவோம் என்று அவர் தெரிவித்தார்.

     


    இதோடு கடந்த 2021-ம் ஆண்டு வாட்டிகன் நகரில் போப் பிரான்சிஸ் உடனான சந்திப்பை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். நேற்று தனது இல்லத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிலையில், இன்று கிறிஸ்துமஸ் விழா புகைப்படங்களை தனது எக்ஸ் பதிவில் அவர் பகிர்ந்து இருக்கிறார். 



    • நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை ஏசு சொரூபத்தை காட்டினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூரில் உள்ள தேவாயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    ஏசு கிறிஸ்து பிறந்த நாள் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று நள்ளிரவு தேவாலயங்களில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது. பலர் புத்தாடைகள் அணிந்து ஆலயங்களுக்கு சென்றிருந்தனர்.

    விழாவை முன்னிட்டு பலர் தங்கள் வீடுகளில் குடில்கள் அமைத்து, வண்ண ஸ்டார்களை தொங்கவிட்டிருந்தனர். பேக்கரிகளில் கேக் விற்பனை களை கட்டியது. வேலூர் மாநகரில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    வேலூர் விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஏசு பிறந்ததை குறிக்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை ஏசு சொரூபத்தை காட்டினர். பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள குடிலில் சொரூபம் வைக்கப்பட்டது.

    இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினர்.

    வேலூர் சார்பனா மேட்டில் உள்ள ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் கிறிஸ்து பிறப்பு நாளையொட்டி கைகுலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆலய வளாகத்தில் குழந்தைகள் பலர் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    காட்பாடி ரோடு புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பெந்தெகொஸ்தே சபையிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது. இதேபோல குடியாத்தம், அணைக்கட்டு, பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    • ரோவர் கல்வி குழுமத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டப்பட்டது
    • பாடாலூர் பங்குத்தந்தை மாசலின் ஆண்டனி கலந்து–கொண்டு இயேசு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை பற்றி கூறினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ரோவர் கல்வி குழுமத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் பெரு–விழா கோலாகலமாக கொண்டா–டப்பட்டது. இவ்விழாவிற்கு ரோவர் கல்வி குழுமத்தின் தலைவர் வரதராஜன் மற்றும் துணைதலைவர் ஜான் அசோக் வரதராஜன் ஆகி–யோர் தலைமை தாங்கி–னர். அறங்காவலர் மகாலட் சுமி வரதராஜன் முன்னிலை வகித்தார். இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக பாடாலூர் பங்குத்தந்தை மாசலின் ஆண்டனி கலந்து–கொண்டு இயேசு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை பற்றியும், யார் உங்களின் ஊக்கம் அளிப்பவர், உச்சா–கப்படுத்துபவர் என்பதை கண்டறிவதை பற்றியும், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் ரோவர் கல்வி குழும தலைவர் வரதரா–ஜன் திருக்குறளின் பெருமை–யையும், இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள் பற்றியும் மேலும் மூடநம்பிக்கைகளா அல்லது அறிவியலின் உச்சமா என்பது பற்றியும் சிறப்பாக உரையாற்றினார். அலுவலக மேலாளர் ஆனந்த் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் சக்தீஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வி–ழாவில் ரோவர் கல்வி நிறுவனத்தை சேர்ந்த முதல்வர்கள், துணை முதல்வர்கள், அலுவலக மேலா–ளர்கள் ஆசிரிய பெரு–மக்களும் அலுவலக ஊழி–யர்களும் கலந்து கொண்டனர்.


    • இயேசு கிறிஸ்துவின்பிறப்பை விளக்கும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.
    • கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பை ஆசிரியர்களின் பாடல்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆடல், பாடல்களின் மூலமாக விளக்கினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் இயேசு கிறிஸ்துவின்பிறப்பை விளக்கும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.

    கிறிஸ்துமஸ் தாத்தா நிகழ்ச்சியின் இடையில் வந்து குழந்தைகளை குதூகலப்படுத்தி ஆடி பாடினார். இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பை ஆசிரியர்களின் பாடல்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆடல், பாடல்களின் மூலமாக விளக்கினர்.

    விழாவில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் ,ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

    • இயேசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ்குடில் அமைக்கப்பட்டிருந்தது.
    • கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள்,ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பகுதியில் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.விழாவிற்கு லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தலைவர் ஆர்.ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.

    விழாவில் பள்ளி மாணவ,மாணவிகளின் கிறிஸ்துமஸ் பாடல், நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இயேசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ்குடில் அமைக்கப்பட்டிருந்தது. விழாவில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.

    விழாவில் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தலைவர் ஆர்.ராமமூர்த்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும், வரும் புத்தாண்டு பெருமையாலும்,அன்பாலும்,பண்பாலும் பிறக்கட்டும்" என புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகளை லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள்,ஆசிரியைகள் செய்திருந்தனர். 

    • புதுவை கவுண்டன் பாளையத்தில் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா பள்ளி உள்விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மாண வர்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடி கிறிஸ்து பிறப்பு தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையத்தில் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா பள்ளி உள்விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தாகூர் நகர் பரிசுத்த ஆவி ஆலயத்தின் நிர்வாக தந்தை ஜான்சன் கலந்து கொண்டு பள்ளியில் புதிதாக செய்யப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிலை ஆசீர்வதித்து மாணவர்க ளுக்கு கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா, பள்ளியின் ஆலோசகர் ரத்தின பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாண வர்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடி கிறிஸ்து பிறப்பு தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வைத்து 2 ஆயிரம் பேருக்கு மோகன்.சி.லாசரஸ் விருந்து வழங்கினார். #mohanclazarus
    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வருடந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏழை-எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டு வருகிறது. 

    இதே போன்று இந்த ஆண்டு  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன். சி. லாசரஸ் தலைமை வகித்தார். நாலுமாவடி சேகர குரு மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி ஆரம்ப ஜெபம் செய்தார். 

    நாலுமாவடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள ஏழை -எளிய மக்கள் 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டன.  ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வகுமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.  #mohanclazarus
    ×