வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய மோடி.. அவரே வெளியிட்ட படங்கள் வைரல்..

இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை நினைவுகூறுவோம். போப் பிரான்சிஸ் உடனான சந்திப்பை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.
வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய மோடி.. அவரே வெளியிட்ட படங்கள் வைரல்..
Published on

டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் நேரந்திர மோடி கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உள்ளூர் கிறிஸ்தவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, மெழுகுவர்த்திகளை ஏற்றினார்.

பிறகு உரையாற்றிய அவர், உலகம் முழுக்க கிறிஸ்துமஸ் கொண்டாடும் மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நாளில் தனது வாழ்க்கையை மனித குலத்திற்கு சேவையாற்றவும், ஏழை, எளியோருக்காக அர்ப்பணித்த இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை நினைவுகூறுவோம் என்று அவர் தெரிவித்தார்.

இதோடு கடந்த 2021-ம் ஆண்டு வாட்டிகன் நகரில் போப் பிரான்சிஸ் உடனான சந்திப்பை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். நேற்று தனது இல்லத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிலையில், இன்று கிறிஸ்துமஸ் விழா புகைப்படங்களை தனது எக்ஸ் பதிவில் அவர் பகிர்ந்து இருக்கிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com