என் மலர்
நீங்கள் தேடியது "நகை"
- கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தனர்.
- இனிமா கொடுத்துப் பார்த்தும் நகை வெளியே வரவில்லை
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மம்பத் புலிக்காலோடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், உடல் நலம் பாதித்த தனது 2 வயது பெண் குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்க, நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சென்றிருந்தார். அப்போது குழந்தை மருத்துவமனையின் வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை கிராம் எடையுள்ள தங்க நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், அந்த பகுதியில் தேடிப்பார்த்தார்.
ஆனால் குழந்தையின் நகை கிடைக்கவில்லை. காணாமல் போன தனது குழந்தையின் நகை குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, இளம்பெண் ஒருவர் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்ததாக கூறினர். இதையடுத்து அந்த பெண்ணிடம் சென்று குழந்தையின் தாய் கேட்டார்.
ஆனால் அவர் சரியாக பதில் கூறவில்லை. ஆனால் அந்த பெண்தான், குழந்தையின் நகையை திருடியிருக்க வேண்டும் என்று அனைவரும் கருதினர். ஆகவே அது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, குழந்தையின் தாய் உள்ளிட்டோரால் குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போதும் அவர் தனக்கு தெரியாது என்றே கூறினார். இருந்தபோதிலும் அவரின் மீதான சந்தேகம், போலீசாருக்கு விலகவில்லை. ஆகவே அவரை கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தனர்.
அப்போது காணாமல் போன குழந்தையின் தங்க நகை, இளம்பெண்ணின் வயிற்றுக்குள் இருந்தது தெரிந்தது. அந்த பெண் நீலம்பூர் பகுதியை சேர்ந்த சமீனா (வயது35) என்பது கண்டறியப்பட்டது. கிளினிக்கில் குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து, குழந்தை கழுத்தில் அணிந்திருந்த நகையை திருடியது தெரியவந்தது.
பின்பு மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, திருடிய நகையை தனது வாய்க்குள் போட்டு விழுங்கியிருக்கிறார். அது அவரது வயிற்றுக்குள் இருந்தது எக்ஸ்ரேயில் தெரிந்துவிட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சமீனா வயிற்றுக்குள் இருக்கும் தங்க நகையை வெளியே எடுப்பதற்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்து இனிமா கொடுத்தனர். ஆனால் பல முறை முயற்சி செய்தும், இளம்பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து தங்க நகை மட்டும் வெளியே வரவில்லை.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். அதுகுறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்திவருகின்றனர். இனிமா கொடுத்து எடுப்பது எளிமையான விஷயம் என்பதால், அந்த முறையே தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
- ஒருநாள் சிறுவனின் அத்தை வீட்டிற்கு வந்து நகை அலமாரியை திறந்து பார்த்துள்ளார்.
- அலமாரி காலியாக இருந்ததை தொடர்ந்து சிறுவனிடம் விசாரித்ததில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து எகிறி வந்து, கடந்த 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இது வரலாறு காணாத உச்சமாக பதிவானது.
அதன் தொடர்ச்சியாக மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என சொல்லப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக சரிந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், 14 வயது சிறுவன் ரூ.85 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி மோமோஸ் சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் மோமோஸ் மீது தீரா காதல் கொண்ட சிறுவனிடம் வீட்டில் உள்ள நகைகளை திருடி கொண்டுவந்து கொடுத்தால் மோமோஸ் வாங்கி தருவதாக மோமோஸ் கடைக்காரர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்த சிறுவன் மெல்ல மெல்ல தனது வீட்டில் உள்ள நகைகளை திருடி அவர்க்ளிடம் கொடுத்து மோமோஸ் சாப்பிட்டு வந்துள்ளான்.
ஒருநாள் சிறுவனின் அத்தை வீட்டிற்கு வந்து நகை அலமாரியை திறந்து பார்த்துள்ளார். அப்போது அலமாரி காலியாக இருந்ததை தொடர்ந்து சிறுவனிடம் விசாரித்ததில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிறுவனின் தந்தை போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.
- தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.
- சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே 2016ல் நகை, பணத்திற்காக தாய், மகளை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வசந்தா (64) மற்றும் அவரது மகள் தேன்மொழி (32) ஆகிய இருவரையும் வீட்டு வேலைக்கு வந்த சத்யா, தவ்லத் பேகம், இவர்களின் நண்பர் ஜெயக்குமார் இணைந்து கொலை செய்துள்ளனர். மேலும், தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.
வீட்டின் உள்ளே மயங்கிக் கிடந்த சிறுமி, மறுநாள் காலை வெளியே வந்தபோதுதான் இந்த கொலைச் சம்பவம் தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் மூவருக்கும் 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
- துப்பட்டாவால் முகத்தை முழுவதுமாக மூடிய பெண் ஒருவர் நகைக்கடைக்கு வந்துள்ளார்.
- இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலானது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நகைக்கடையில் மிளகாய் போடி தூய் நகையை திருட முயன்ற பெண்ணை கடைக்காரர் 20 முறை அறைந்த சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
நவம்பர் 3 ஆம் தேதி அன்று நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலானது.
துப்பட்டாவால் முகத்தை முழுவதுமாக மூடிய பெண் ஒருவர் நகைக்கடைக்கு வந்துள்ளார். அப்போது திடீரென கையில் மறைத்துவைத்திருந்த மிளகாய் பொடியை கடைக்காரர் மீது தூவி நகையை கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
மிளகாய் போடி கண்ணில் விழாததால் சுதாரித்துக்கொண்ட கடைக்காரர் அந்த பெண்ணை பலமுறை பலமாக ஆராய்ந்துள்ளார். அதாவது கிட்டத்தட்ட 25 வினாடிகளில் 20 முறை அப்பெண்ணை பளார் பளார் என்று அவர் அறைந்துள்ளார்.
இது தொடர்பாக கடைக்காரர் புகார் கொடுத்த மறுத்த நிலையிலும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருட முயன்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
- மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காக்கை தங்க வளையலை திருடி அதன் கூட்டில் வைத்திருந்தது.
- மரம் ஏறும் தொழிலாளியான அன்வர் என்பவர் காக்கையின் கூட்டில் இந்த தங்க வளையலை கண்டெடுத்தார்.
கேரளாவில் மஞ்சேரி என்ற கிராமத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காக்கை தங்க வளையலை திருடி அதன் கூட்டில் வைத்திருந்தது.
மரம் ஏறும் தொழிலாளியான அன்வர் என்பவர் காக்கையின் கூட்டில் இந்த தங்க வளையலை கண்டெடுத்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் இது குறித்து உள்ளூர் நூலகத்தில் அறிவிப்பு பலகை வைத்தார். அதனை கண்ட ஹரிதா என்ற பெண் வளையல் வாங்கிய பில்லையும் அதை அணிந்திருந்த போட்டோவையும் காட்டி வளையலை பெற்றுச் சென்றார்.
இந்த சம்பவம் ஒரு அதிசயமாகவும், ஆச்சரியமான நிகழ்வாகவும் பேசப்பட்டு வருகிறது.
- எதிர்வீட்டில் வசிக்கும் எலட்ரீசியின் சங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்விசிறியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய சென்றபோது கதவை மூடிக்கொண்டு நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
நாமக்கல்லில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வீட்டில் வசிக்கும் எலட்ரீசியின் சங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்விசிறியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய சென்றபோது கதவை மூடிக்கொண்டு நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், மூதாட்டியை கொலை செய்துவிட்டு தப்பியோட முயற்சித்தபோது கொலையாளிகை பிடித்து போலீசாரிடம் மக்கள் ஒப்படைத்தனர்.
- காந்தரின் புதிய பிராண்ட் அம்பாசடராக பாலிவுட் இளவரசர் ஷாருக் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பச்சன் பாரம்பரிய நம்பிக்கையையும், கான் நவீன அழகு உணர்வையும் கொண்டு வருகிறார்கள்.
இணையத்தில் பெரும் கவர்ச்சியையும் ஊகங்களையும் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கால்யான் ஜுவல்லர்ஸ் குழுமத்தின் வாழ்க்கைமுறை நகை பிராண்டான காந்தரின் புதிய பிராண்ட் அம்பாசடராக பாலிவுட் இளவரசர் ஷாருக் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது வெறும் பிரசாரச் செய்தி அல்ல. இந்திய நகைத் தொழிலில் ஒரு திருப்புமுனை. பல நாட்களாக டீசர் வீடியோக்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட இந்த வாய்ப்பு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
ஸ்டைலிஷ் நகைகளில் திகழ்ந்த கானின் தோற்றம், இது அவருடைய சொந்த முயற்சியா என்ற கேள்விகளுக்கே துவக்கமாயிற்று.
அதில் தெளிவாகக் கூறப்பட்டது: ஷாருக் கான் காந்தரின் பிராண்ட் முகம்தான், உரிமையாளர் அல்ல. இது ஒரு தூய்மையான பிராண்டு தூதுவராக இருந்தாலும், அதன் கலாச்சார, வர்த்தக தாக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது.
இப்போது, அமிதாப் பச்சனை பிரதிநிதித்துவப்படுத்தும் கால்யான் ஜுவல்லர்ஸும், ஷாருக் கானை பிரதிநிதித்துவப்படுத்தும் காந்தரும், ஒரே குழுமத்தின் கீழ் இணைந்துள்ளன.
பச்சன் பாரம்பரிய நம்பிக்கையையும், கான் நவீன அழகு உணர்வையும் கொண்டு வருகிறார்கள்.
- திருச்சியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
- ஸ்ரீரங்கம் மகமாயி கோவில் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (25) என்பவரை போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து டி.வியை மட்டும் பறிமுதல் செய்தனர்
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியம் (66). இவர் கடந்த மாதம் வீட்டை பூட்டி விட்டு பெங்களூருக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவருடைய வீட்டிற்கு பக்கத்தில் உள்ளவர்களிடமிருந்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பெங்களூரில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த டி.வி. மற்றும் மூன்று பவுன் நகை மற்றும் 7 கிராம் எடையுள்ள தோடு என மொத்தம் 53 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து பாக்கியம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஸ்ரீரங்கம் மகமாயி கோவில் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (25) என்பவர் திருடியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து டி.வியை மட்டும் பறிமுதல் செய்தனர்.
- கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
மார்த்தாண்டத்தை அடுத்த முளங்குழி, முள்ளஞ்சேரியை சேர்ந்தவர் வினு (வயது 35). நகை கடை நடத்தி வருகிறார்.
வினுவின் மனைவி அனுஷா (30). சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு பொருள்கள் வாங்க சென்றார். அப்போது அங்கே மறைந்திருந்த வாலிபர் ஒருவர் திடீரென அனுஷா அருகே வந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் அனுஷா கழுத்தில் கிடந்த 15 பவுன் தாலி செயினை பறித்தார்.
அனுஷா திருடன்...திருடன் என சத்தம் போட்டார். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி யோடி தலைமறைவாகி விட்டார்.
இதுபற்றி அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனுஷாவிடம் நகைபறித்த வாலிபரை தேடி வருகிறார்கள்.மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றியும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- தலைமறைவான பெண் மேலாளரை தேடும் பணி தீவிரம்
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வேப்பமூட்டில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று உள்ளது.
இந்த நிறுவனத்தில் குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் தங்களது நகைகளை அடகு வைத்து பணம் வாங்கியுள்ளார்கள்.
நகைகளை அடகு வைத்து பணம் வாங்கிய பொதுமக்கள் தங்களது நகைகளை மீட்க வரும்போது நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.இது தொடர்பாக அந்த வாடிக்கையாளர்கள் வங்கி மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அந்த வங்கியில் பணிபுரிந்த மேலா ளர் கடந்த சில நாட்களாக பணிக்கு வரவில்லை. நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள் வங்கியில் விசாரணை மேற்கொண்ட னர். அப்போது ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேல் அதிகாரிகள் கோட்டாறு போலீசில் புகார் செய்தனர்.இன்று காலை கோட்டார் போலீசார் நிதி நிறுவனத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த மேலாளர் கடந்த ஒரு வாரமாக வங்கிக்கு வராமல் தலைமறைவானதால் அவர் நகைகளை எடுத்துச் சென்று இருக்கலாம் என தெரிகிறது.அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
வாடிக்கையாளர்களி டமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டும் தங்களது கணக்கில் பணத்தை செலுத்தாமல் உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் செட்டிகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பானுப்பிரியா ஜெயங்கொண்டம் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி செங்குந்தபுரத்திற்கு வந்தார்.
- பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பானுப்பிரியாவின் கழுத்தில் கிடந்த 4பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புது குடி கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மணி கண்ணன். இவரது மனைவி பானுப்பிரியா (வயது 28).
இவர் நேற்று மதியம் ஜெயங்கொண்டம் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி செங்குந்தபுரத்திற்கு வந்தார். பின்னர் புதுகுடி கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பானுப்பிரியாவின் கழுத்தில் கிடந்த 4பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் மர்மநபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றனர்.
இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- நாகர்கோவிலில் அடுத்தடுத்து சம்பவம்
- சி.சி.டி.வி. காமிரா பதிவு மூலம் போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் ராமவர்ம புரத்தைச் சேர்ந்தவர் மெல்பாராஜினி (வயது 51). இவர் நேற்று ஆலயத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், முகவரி கேட்பது போல் மெல்பாராஜினியிடம் பேசி உள்ளனர். அப்போது திடீரென அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
இதேபோல் நாகர்கோவில் மூவேந்தர் நகரைச் சேர்ந்த லட்சுமி (44) சாலையில் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துச் சென்றனர். ஓரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் நேசமணி நகர் மற்றும் ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் 2 நகை பறிப்பு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் நகை பறிப்பு திருடர்களை தேடி வருகின்றனர்.






