என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து நகை, பணம் திருடியவர் கைது
- திருச்சியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
- ஸ்ரீரங்கம் மகமாயி கோவில் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (25) என்பவரை போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து டி.வியை மட்டும் பறிமுதல் செய்தனர்
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியம் (66). இவர் கடந்த மாதம் வீட்டை பூட்டி விட்டு பெங்களூருக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவருடைய வீட்டிற்கு பக்கத்தில் உள்ளவர்களிடமிருந்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பெங்களூரில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த டி.வி. மற்றும் மூன்று பவுன் நகை மற்றும் 7 கிராம் எடையுள்ள தோடு என மொத்தம் 53 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து பாக்கியம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஸ்ரீரங்கம் மகமாயி கோவில் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (25) என்பவர் திருடியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து டி.வியை மட்டும் பறிமுதல் செய்தனர்.