என் மலர்
உலகம்
- ராணுவத் தளபதியும், முப்படைகளின் தலைவருமான அசிம் முனீர் அதிபர் சுபியான்டோவைச் சந்திக்கவுள்ளார்.
- பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ 2 நாள் பயணமாக இன்றுபாகிஸ்தான் சென்றுள்ளார்.
நூர் கான் விமான தளத்தில் வந்திறங்கிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவை பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் வரவேற்றனர். பிரபோவோவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிபர் சுபியான்டோவுடன் முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவும் வருகை தந்துள்ளது.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அதிபர் பிரபோவோ சுபியான்டோ பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதனிடையே, ராணுவத் தளபதியும், முப்படைகளின் தலைவருமான அசிம் முனீர் அதிபர் சுபியான்டோவைச் சந்திக்கவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர், 2018 ஆம் ஆண்டு அப்போதைய இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ பாகிஸ்தானுக்கு வருகை தந்திருந்தார். கடந்த ஜூலை மாதம், இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சரும் ஷெபாஸ் ஷெரீப்பைச் சந்தித்து பாதுகாப்புதுறையில் உற்பத்தி குறித்த பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜப்பானின் வடக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பொது மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தரமான கைவினைப் பொருட்களை மட்டுமே வழங்கவேண்டும் என்பதே தாமதத்திற்கு காரணம்
- ஆர்டர் செய்யப்பட்ட கண்களுக்கான பொம்மைகள் முன்னரே விற்கப்பட்டன
சீனாவில் லீ என்ற பெண் ஆர்டர் செய்த 'பொம்மை கண்கள்' பத்து ஆண்டுகளுக்கு பின்னர் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்த ஆர்டரை லீ மறந்தேவிட்டதாகவும், தனது மொபைல் நம்பரை மாற்றாததால் பார்சலை நவ.27 அன்று பெற்றதாக தெரிவித்துள்ளார். பார்சல் வரவிருக்கிறது என்பதற்கான குறுஞ்செய்தியை நவ.25ஆம் தேதி பெற்றுள்ளார். 515 யுவான் (ரூ. 6,566) செலுத்தி வாங்கிய ஆர்டரில் கூடுதலாக ஒரு ஜோடி பொம்மை கண்களும் இருந்துள்ளன.
உயர்தர, குறைபாடற்ற, தரமான கைவினைப் பொருட்களை மட்டுமே வழங்கவேண்டும் என்பதே தாமதத்திற்கு காரணம் என விற்பனையாளர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக உற்பத்தியை நிறுத்திவிட்டதாகவும், ஆனால் பெற்ற ஆர்டர்களை மட்டும் டெலிவரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்த பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தங்கள் பொருட்களைப் பெற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மறுபக்கம், லீ ஆர்டர் செய்யப்பட்ட கண்களுக்கான பொம்மைகளை ஏற்கனவே விற்றுவிட்டதாகவும், தற்போது இந்த கண்களை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
- கலிதா ஜியாவை இங்கிலாந்தின் லண்டனுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முடிவு.
- ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்திற்கு நாளை காலை 8 மணிக்கு தரையிறங்கும் இடம் ஒதுக்கீடு.
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (வயது 80). இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே கலிதா ஜியாவை இங்கிலாந்தின் லண்டனுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவர் நாளை ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் லண்டனுக்கு அழைத்து செல்லப்பட உள்ளார்.
இதுதொடர்பாக வங்காளதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது," ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்திற்கு நாளை காலை 8 மணிக்கு தரையிறங்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்று இரவு 9 மணிக்கு புறப்படும் நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது" என்றார்.
இந்த விமானம், ஜெர்மனியை தளமாகக் கொண்ட எப்.ஏ.ஐ விமானக் குழுமத்திடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த எரிபொருள் டேங்கரில் இருந்து கசிந்த எரிபொருளை மக்கள் எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
- மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் அங்கு குழுமியிருந்தவர்களில் குறைந்தது 231 பேர் உயிரிழந்தனர்.
2025 இல் உலகில் பல அழிவுகரமான விபத்துகள் அரங்கேறி உள்ளன. அவற்றில் நூற்றுக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அவற்றை கால வரிசைப்படி இங்கு பார்ப்போம்.

98 பேர் உடல் கருகி உயிரிழந்த நைஜீரிய எரிபொருள் டேங்கர் விபத்து
2025 தொடக்கத்தில் ஜனவரி 18 அன்று நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் சுலேஜா அருகே நிகழ்ந்த கோரமான விபத்தில் 98 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலையில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த எரிபொருள் டேங்கரில் இருந்து கசிந்த எரிபொருளை மக்கள் எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

78 பேர் பலியான துருக்கி ஹோட்டல் விபத்து
ஜனவரி 21 அன்று துருக்கியில் புகழ்பெற்ற Ski Resort அமைந்துள்ள கார்தால்காயாவில் ஒரு சொகுசு ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 78 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். ஜனவரி மாத நடுப்பகுதியில், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்த நேரத்தில் இந்த விபத்து நடந்தது.
இரவு நேரத்தில் தீப்பிடித்ததால், பலர் தங்கள் அறைகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டாலும், ஹோட்டலின் மரக்கட்டமைப்பு மற்றும் குளிர்சாதன அமைப்புகளால் தீ வேகமாக பரவியதில் விபத்தின் சேதம் பன்மடங்கு அதிகரித்தது.

55 பேர் மரணித்த குவாத்தமாலா பேருந்து விபத்து
மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு குவாத்தமாலா குடியரசு. இதன் தலைநகரான குவாத்தமாலா சிட்டியில் உள்ள லாஸ் வேகாஸ் ஆற்றின் மீதுள்ள பாலம் ஒன்றில் கடந்த பிப்ரவரி 10 அன்று அதிகாலையில் லாஸ் வேகாஸ் ஆற்றின் மீதுள்ள பாலம் ஒன்றில் இருந்து, பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் குறைந்தது 55 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். பேருந்தில் இருந்தவர்களில் பலர் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளர்கள்.

59 பேர் பலி மரணித்த நைட் கிளப் விபத்து:
பால்கன் நாடுகளில் ஒன்றான வடக்கு மாசிடோனியாவில் கோச்சானி நகரில் ஒரு பரபரப்பான இரவு விடுதியில் கடந்த மார்ச் 16 ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உடல் கருகி இறந்தனர். இந்த விபத்தில் 155 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது விடுதிக்குள் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவசரகால வெளியேறும் வழிகள் போதுமானதாக இல்லாததும், நெரிசலும் உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

231 பேர் பலி உயிரிழந்த டொமினிகன் நைட் கிளப் விபத்து
கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் சான்டோ டொமிங்கோ நகரில் பிரபல பாடகர் ரூபி பெரெஸ் பங்கேற்ற இசை நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 8 அன்று இரவு விடுதி ஒன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் அங்கு குழுமியிருந்தவர்களில் குறைந்தது 231 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் பாடகர் ரூபி பெரெஸும் உயிரிழந்தார். நிகழ்ச்சியின் போது கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதும், கட்டிடத்தின் தரமற்ற கட்டுமானமும் இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

148 பேர் பலி உயிரிழந்த காங்கோ படகு விபத்து
ஏப்ரல் 15 அன்று ஆபிரிக்க நாடான காங்கோவின் மண்டாகா நகருக்கு அருகில் உள்ள காங்கோ ஆற்றில் மரப் படகு தீப்பிடித்துக் கவிழ்ந்ததில் குறைந்தது 148 பேர் உயிரிழந்தனர்.
மோட்டார் மூலம் ஆற்றில் படகு அதிவேகமாக இயக்கப்பட்டதும் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக இல்லாததும் இந்த விபத்துக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. படகில் இருந்த பலர் நீச்சல் தெரியாததாலும், தீக்காயங்களாலும் உயிரிழந்தனர்.

70 பேர் பலியான ஈரான் துறைமுக விபத்து
ஈரானின் முக்கிய வர்த்தக மையமான பந்தர் அப்பாஸில் உள்ள ஷாஹித் துறைமுகத்தில் ஏப்ரல் 26 பெரும் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் குறைந்தது 70 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
துறைமுகத்தில் சேமிக்கப்பட்டிருந்த எரிபொருள் அல்லது இரசாயனப் பொருட்கள் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ஈரானின் ஏற்றுமதி இறக்குமதி செயல்பாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

79 பேர் பலியான ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்து
ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து, ஆப்கானிஸ்தான் ஹெராத் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு லாரி மீது மோதிய விபத்தில் 79 பேர் பலியாகினர்.

159 பேர் பலியான ஹாங்காங் அடுக்குமாடி தீ விபத்து
நவம்பர் 23 அன்று ஹாங்காங்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நெருக்கமாக அமைந்திருந்த கட்டடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 159 பேர் கொல்லப்பட்டதுடன், 150-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். அந்த கட்டடங்களில் மூங்கில் உள்ளிட்ட தீப்பற்றக்கூடிய பொருட்கள் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று பின்னர் தெரிய வந்தது.
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருகிற ஜனவரி மாத தொடக்கத்தில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- பயண தேதியை உறுதி செய்ய இந்தியா, உக்ரைன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் ரஷிய அதிபர் புதின் கடந்த 4-ந்தேதி 2 நாள் பயணமாக இந்தியா வந்தார். அவர் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் புதினிடம் மோடி வலியுறுத்தினார்.
அதேபோல் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இந்தியாவின் பங்களிப்பை புதின் பாராட்டினார்.
இந்த நிலையில் புதின் வருகையை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருகிற ஜனவரி மாத தொடக்கத்தில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது பயண தேதியை உறுதி செய்ய இந்தியா, உக்ரைன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
உக்ரைன் மீதான போருக்கு பிறகு ரஷிய அதிபர் புதினின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. தற்போது உக்ரைன் அதிபர் இந்தியாவுக்கு வர உள்ளார். இது ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியாவின் முயற்சிக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்று கருதப்படுகிறது.
- இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.
- இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்தது.
தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மே மாதம் திடீர் மோதல் வெடித்தது.
இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.
எல்லைப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறினார்கள். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இதில் தலையிட்டு இரு நாட்டு தலைவர்களுடன் பேசி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இந்நிலையில் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று
இதனையடுத்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சி மாநாட்டின் டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், தாய்லாந்து - கம்போடியா நாடுகளுக்கு இடையே மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உபோன் ரட்சதானி மாகாணத்தில் கம்போடியா படைகள் தாய்லாந்து படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதற்கு தாய்லாந்து வீரர்கள் எதிர்த்தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்து தெரிவித்தது. ஆனால் தாய்லாந்து தான் முதலில் தாக்கியதாக கம்போடியா கூறியது. இந்த தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்ததாகவும் 4 பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து கூறியுள்ளது.
பின்னர் போர் விமானங்களை பயன்படுத்தி கம்போடியா மீது தாய்லாந்து பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் கம்போடியா - தாய்லாந்து நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- பெனின் ஆட்சியை பிடித்ததாக ராணுவ கிளர்ச்சி குழுவால் அறிவித்தது.
- நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அதிபர் பத்ரிக் தாலோன் அறிவிப்பு
பெனின் நாட்டில் அரசு ஊடகத்தை கைப்பற்றி, அதிபர் பத்ரிக் தாலோனை பதவியில் இருந்து நீக்கி ஆட்சியை பிடித்ததாக அறிவித்த ராணுவ கிளர்ச்சி குழுவால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ராணுவப் படைகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
தொலைக்காட்ச்சி வழியே மக்களிடம் பேசிய பெனின் அதிபர் பத்ரிக் தாலோன், "நமது இராணுவமும் அதன் தலைவர்களும் தேசத்திற்கு விசுவாசமாக இருந்து வரும் கடமை உணர்வை நான் பாராட்ட விரும்புகிறேன். நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
- 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை மீறியது எக்ஸ்.
- முன்னதாக டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை மீறியதற்காக ஆப்பிள் மற்றும் மெட்டா உள்ளிட்டவற்றிற்கு அபராதம் விதித்தது.
27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டதின் கடுமையான உள்ளடக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதற்காக எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைத்தளத்திற்கு 140 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த விதிமீறலால் ஐரோப்பிய எக்ஸ் பயனர்கள் பல்வேறு மோசடிகளுக்கு ஆளாக்கக்கூடும் என்றும் எக்ஸ் தங்களின் விளம்பர தரவுத்தளத்திற்கான விதிமுறைகளுக்கு இணங்கத் தவறிவிட்டது என்றும் ஐரோப்பியஒன்றியம் குற்றம்சாட்டி இருந்தது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், இறையாண்மை தனிப்பட்ட நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும், அப்போதுதான் அரசாங்கங்கள் தங்கள் மக்களின் நலன்களை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை மீறியதற்காக ஆப்பிள் மற்றும் மெட்டா உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மொத்தம் 797 மில்லியன் டாலர் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஜெர்மனி ராணுவத்தில் சுமார் 1 லட்சத்து 82 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜெர்மனி ராணுவத்தில் சுமார் 1 லட்சத்து 82 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.
இதற்கிடையே, நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்த நேரிடும் என ஜெர்மனி ராணுவ தலைவர் கார்ஸ்டன் ப்ரூயர் எச்சரிக்கை விடுத்தார். இதனால் வலிமையான ராணுவத்தை உருவாக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்தது.
இதற்காக கட்டாய ராணுவ சேவை திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, 18 வயது நிரம்பிய அனைவரும் ராணுவத்தில் சேர்வதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கு மருத்துவ பரிசோதனையை எடுக்கவேண்டும்.
இந்த ராணுவ சேவையானது ஆண்களுக்கு கட்டாயமாகவும், பெண்களுக்கு விருப்ப அடிப்படையிலும் இருக்கும் என அரசாங்கம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
இதன்மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 2 லட்சத்து 60 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் இடதுசாரி கட்சியினர் இந்த கட்டாய ராணுவ சேவைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் (RSF) வருவதால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.
- அப்பகுதியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் செய்திகள் வெளிவருவது கடினமாகி உள்ள சூழலில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.
ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 முதல் அரசுப் படைகளுடன் துணை ராணுவமான ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் (RSF) சண்டையிட்டு வருவதால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் RSF தெற்கு கோர்டோஃபான் மாநிலத்தின் கலோகி நகரில் உள்ள ஒரு நர்சரி பள்ளி மீது டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 33 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சூடானிய மருத்துவர்கள் அமைப்பு இதை தெரிவித்துள்ளது.
சிவிலியன் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பது உட்பட சர்வதேச மனிதாபிமான சட்டத்தை ஆர்.எஸ்.எஃப் வெளிப்படையாக மீறுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
அப்பகுதியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் செய்திகள் வெளிவருவது கடினமாகி உள்ள சூழலில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது.
- 70-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களையும் இலங்கைக்கு அனுப்பி உள்ளது.
இலங்கையில் பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடருக்கு 465 பேர் பலியாகி உள்ளனர். 366 பேர் மாயமாகி இருக்கிறார்கள்.
வெள்ளத்தால் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியது. மேலும், மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது. அவர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர சுகாதார உதவிகளை வழங்குவதற்காக இந்தியா ஒரு நடமாடும் மருத்துவமனையையும், 70-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களையும் இலங்கைக்கு அனுப்பி உள்ளது.
இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் ஆக்ராவிலிருந்து 73 மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுடன் புறப்பட்டு கொழும்பில் தரை இறங்கியது.
இந்நிலையில், இலங்கை பேரிடர்- கண்டியில் இந்தியா அமைத்த தற்காலிக மருத்துவமனையில் இலங்கை மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 2,200க்கும் மேற்பட்டோருக்கு இந்திய மருத்துவ குழு சிகிச்சை அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.






