என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கு ஆப்பிரிக்க நாடுகள்"

    • பெனின் ஆட்சியை பிடித்ததாக ராணுவ கிளர்ச்சி குழுவால் அறிவித்தது.
    • நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அதிபர் பத்ரிக் தாலோன் அறிவிப்பு

    பெனின் நாட்டில் அரசு ஊடகத்தை கைப்பற்றி, அதிபர் பத்ரிக் தாலோனை பதவியில் இருந்து நீக்கி ஆட்சியை பிடித்ததாக அறிவித்த ராணுவ கிளர்ச்சி குழுவால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், அந்த கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ராணுவப் படைகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.

    தொலைக்காட்ச்சி வழியே மக்களிடம் பேசிய பெனின் அதிபர் பத்ரிக் தாலோன், "நமது இராணுவமும் அதன் தலைவர்களும் தேசத்திற்கு விசுவாசமாக இருந்து வரும் கடமை உணர்வை நான் பாராட்ட விரும்புகிறேன். நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

    • 24-மணி நேர கால இடைவெளியில், உணவின்றி தவிக்கும் குழந்தைகளை "ஜீரோ-ஃபுட் குழந்தைகள்" என அழைக்கின்றனர்
    • இந்தியாவில், 19.3 சதவீதம் குழந்தைகள் உணவின்றி உறங்கச் செல்வதாக ஆய்வு தெரிவிக்கிறது

    24 மணி நேர கால இடைவெளியில், உண்பதற்கு உணவின்றி தவிக்கும் நிலை "ஜீரோ ஃபுட்" (zero-food) என அழைக்கப்படும்.

    பிறந்த குழந்தைகள் மற்றும் 2 வயதுடைய குழந்தைகளில் பால் அல்லது திட உணவு அல்லது திரவ-திட உணவுகள், 24 மணி நேரத்திற்கு கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகளை, "ஜீரோ-ஃபுட் குழந்தைகள்" என ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.

    "ஜீரோ-ஃபுட்" நிலையில் தவிக்கும் குழந்தைகள் குறித்து இந்தியா உட்பட குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்களை அதிகம் கொண்ட 92 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வில், இந்தியாவில், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியா, பெனின், லைபீரியா மற்றும் மாலி ஆகிய நாடுகளில் உள்ளதை போன்று அதிகப்படியான எண்ணிக்கையில் உணவின்றி தவிக்கும் குழந்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

    கினியா (21.8 சதவீதம்), மாலி (20.5 சதவீதம்) எனும் நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் (19.3 சதவீதம்) எனும் நிலையில் குழந்தைகள் உணவின்றி உறங்கச் செல்வதாக தெரிய வந்துள்ளது.

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை (Harvard University) சேர்ந்த எஸ்.வி. சுப்ரமணியன் எனும் ஆராய்ச்சியாளர் நடத்திய இந்த ஆய்வறிக்கை ஜமா நெட்வொர்க் (JAMA Network) எனும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஓமர் கார்ல்சன் (Omar Karlsson) மற்றும் கொரியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ராக்லி கிம் (Rockli Kim) ஆகியோர், ஆராய்ச்சியாளர் சுப்ரமணியனுடன் இணைந்து இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிராமபுறம் மற்றும் நகர்புறங்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில் வாழும் பெண்கள், தினசரி கூலி வேலைகள் செய்து கொண்டும், அன்றாட குடும்ப பணிகளையும் செய்வதால், குழந்தைகளுக்கு முறையான உணவளிக்க நேரம் ஒதுக்க முடியாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டுள்ளது.

    ×