என் மலர்
உலகம்
- பெஷாவரில் இருந்து ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சரியாக 9 மணிக்கு வர இருந்தது.
- ரெயில் வருவதற்கு முன்னதாக குண்டு வெடிப்பு.
பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரெயில் நிலையத்தில் இன்று காலை பயங்கர குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் சுமார் 24 பேர் பலியாகினர். 30 பேர் காயம் அடைந்தனர்.
ரெயில் ஒன்று நடைமேடைக்கு வருவதற்கு சற்று முன்னதாக பிளாட்பாரத்தில் குண்டு வெடித்தது முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
பெஷாவரில் இருந்து ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சரியாக 9 மணிக்கு வர இருந்தது. ரெயில் வந்திருந்தால் பலி எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கும்.
தற்கொலை படை மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால், முன்னதாகவே அந்த முடிவுக்கு வர முடியாது. குண்டு வெடிப்பு எப்படி நடைபெற்றது என்பதை அறிய விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டு வெடிப்பு நடைபெற்ற போது ரெயில் நிலையத்தில் சுமார் 100 பேர் இருந்தனர் என குவெட்டா எஸ்.எஸ்.பி. (Senior Superintendent of Police) தெரிவித்துள்ளார்.
மீட்பு குழுவின் தலைவர் ஜீஷன் "ரெயில் நிலையத்திற்கு உள்ளே பிளாட்பாரத்தில் குண்டு வெடித்தது" எனத் தெரிவித்துள்ளார்.
- நான் புதிய போர்களை தொடங்கமாட்டேன், நடக்கும் போர்களை நிறுத்தவே வந்துள்ளேன்
- மஸ்க்கை சுட்டிக்காட்டி புதிய நட்சத்திரம் உதயமாகி உள்ளதாக பேசினார்.
அதிபர் தேர்தல்
நடந்து முடிந்த அமரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றார் இரண்டாவது முறையாக அதிபராகும் டிரம்ப் அமெரிக்காவின் 47 வது அதிபர் ஆகிறார். இந்நிலையில் காசா போர், உக்ரைன் போர் உள்ளிட்டவற்றை டிரம்ப் எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
நான் புதிய போர்களை தொடங்கமாட்டேன், நடக்கும் போர்களை நிறுத்தவே வந்துள்ளேன் என்று தனது வெற்றி உரையில் டிரம்ப் பேசினார். இதற்கிடையே டிரம்ப்பின் வெற்றிக்கு ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
உக்ரைன் அதிபர்
தற்போது புளோரிடாவில் எலான் மஸ்க்குடன் மார் இ லாகோ பால்ம் கடற்கரை ரிசார்ட்டில் ஓய்வெடுத்து வரும் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த போன் உரையாடலில் எலான் மஸ்க்கும் இருந்துள்ளார். இந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக குதிரை மீது பந்தயம் கட்டுவது போல் சுமார் 118 மில்லியன் டாலர் வரை செலவு செய்துள்ளார்.
புதிய நட்சத்திரம்
வெற்றி பெற்ற குதிரையை வைத்து வருங்கால திட்டங்களை மஸ்க் தீட்டி வருகிறார். மஸ்க்குக்கு அமைச்சரவையில் முக்கிய பதவி வழங்கப்படும் என்று டிரம்ப் வெற்றி பெறுவதற்கு முன்பே அறிவித்திருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு அதிகரித்து வருகிறது. டிரம்ப்பின் நம்பிக்கைக்குரிய நபராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார். தனது வெற்றி உரையின்போது பேசிய டிரம்ப், மஸ்க்கை சுட்டிக்காட்டி புதிய நட்சத்திரம் உதயமாகி உள்ளதாக மெய் சிலிர்த்துப் பேசினார்.

இந்நிலையில்தான் ஜெலன்ஸ்கியுடன் போனில் பேசிய டிரம்ப், உக்ரைனுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று பேசியுள்ளாராம். தொடர்ந்து லைனை எலான் மஸ்க்கிடம் கொடுத்துள்ளார். ஜெலன்ஸ்கியுடன் பேசிய மஸ்க், உக்ரைனுக்கு தனது ஸ்டார் லிங்க் நிறுவனம் டிரோன் கண்கணிப்பு உள்ளிட்ட சாட்டிலைட் தொழில்நுட்ப உதவிகளை விரிவுபடுத்தும் என்று உறுதி அளித்துள்ளாராம்.
இந்த மூவரது உரையாடல் சுமார் அரை மணி நேரம் நீடித்ததாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. தான் டிரம்ப் உடன் பேசியதாகவும் அவர் ஆதரவு வழங்குவதாக உறுதி அளித்தார் என்றும் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக பெரும் பணக்காரர் நினைத்தால் உலக வல்லரசாக இருப்பினும் அதன் ஜனநாயகத்தில் தனது ஆதிக்கத்தை நிறுவிக் கொள்ள முடியும் என்பது தெளிவாகிறது. அடுத்ததாக கனடா பிரதமர் ட்ரூடோ அடுத்த தேர்தலில் தோற்பார் என்றும் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் போர்
உக்ரைன் நேட்டோ நாடுகளுடன் சேர்வது தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரில் இரு நாடுகளும் அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளன.
- ஒட்டாவாவில் இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு பேசினார்
- தனது கருத்து மூலம் இந்தியாவை மீண்டும் சீண்டி உள்ளார்.
இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்ததையடுத்து மோதல் போக்கு ஏற்பட்டது.
சமீபத்தில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவோம் என்று கனடா அரசாங்கம் தெரிவித்ததால் இரு நாட்டு உறவில் விரிசல் அதிகரித்தது.
இந்த நிலையில் ஒட்டாவாவில் இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர், ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதேபோல் கனடாவில் மோடி அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த இந்து கனேடியர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றார். இதன் மூலம் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளனர் என்பதை ட்ரூடோ ஒப்புக் கொண்டுள்ளார். அதேவேளை தனது கருத்து மூலம் இந்தியாவை மீண்டும் சீண்டி உள்ளார்.
- டிரம்பை கொல்ல ஈரானின் சதித்திட்டத்தை எப்.பி.ஐ முறியடித்தது.
- ஈரான் ஆட்சியை விமர்சிக்கும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரை கொல்லும் சதியில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்பை கொல்ல ஈரான் முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் அதை ஈரான் மறுத்தது.
இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பாக டிரம்பை கொல்ல ஈரான் சதி திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டிரம்பை கொல்ல ஈரானின் சதித்திட்டத்தை எப்.பி.ஐ முறியடித்தது. ஈரான் புரட்சிகர காவலர் படையை சேர்ந்த பர்ஹாத் ஷகேரியிடம் டிரம்பை கொல்லும் திட்டம் ஈரான் ஆட்சியால் வழங்கப்பட்டது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவை சேர்ந்த கார்லிஸ்லே ரிவேரா, ஜொனாடன் லோட்ஹோல்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பர்ஹாத் ஷகேரியின் அறிவுறுத்தலின் பேரில், ஈரான் ஆட்சியை விமர்சிக்கும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரை கொல்லும் சதியில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருமண தின விழாவை கொண்டாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வரைலாகி உள்ளது.
- பள்ளிப் பருவத்தில் இருந்து 7 பெண்களிடம் காதலை வெளிப்படுத்தியதாகவும், அவர்கள் காதலை நிராகரித்து, ஏளனம் செய்ததாக கோண்டோ கூறுகிறார்.
பொருத்தமான ஜோடி பலருக்கு அமைவதில்லை. அதனால் சிலர் ஒரே பாலினத்தவரையோ, பொம்மையையோ, விலங்கையோ திருமணம் செய்த அரிய நிகழ்வுகளை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதுபோல ஒரு ஜப்பானியர் ரோபோவை திருமணம் செய்து 6 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருவது ஆச்சரியம் அளிக்கிறது.
அவர் திருமண தின விழாவை கொண்டாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வரைலாகி உள்ளது. 41 வயதான அகிஹிகோ கோண்டோ என்பவர் கடந்த 2018-ம் ஆண்டில் மிகு என்ற ரோபோ பொம்மையை திருமணம் செய்து கொண்டார்.
பள்ளிப் பருவத்தில் இருந்து 7 பெண்களிடம் காதலை வெளிப்படுத்தியதாகவும், அவர்கள் காதலை நிராகரித்து, ஏளனம் செய்ததாக கோண்டோ கூறுகிறார். இதற்கிடையே வேலையிலும் மனச்சோர்வு அடைந்த அவர், மிகு ரோபோவின் கவனிப்புகளால் மகிழ்ச்சி அடைந்தார். அது இன்னிசையில் பாடும், பேசும் திறன் பெற்ற ரோபோ. அதனால் ரோபோவையே அவர் திருமணம் செய்து கொண்டார்.
சில தினங்களுக்கு முன்பு 6-வது ஆண்டு திருமண விழாவை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ அதிகமானவர்களால் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
- காரில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
- கொலை செய்யப்பட்டவருக்கு ஏற்கனவே கிரிமினல் குரூப் மிரட்டல் விடுத்ததாக போலீசார் தகவல்.
பிரேசில் நாட்டின் மிப்பெரிய விமானம் குவாருல்கோஸில் உள்ள சாவோ பவுலோ சர்வதேச விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்திற்கு காரில் வந்த சிலர் திடீரென துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்கும் புகுந்து சரிமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் காயம் அடைந்தனர்.
கொலை செய்யப்பட்டவர் அன்டோனியா வின்சியஸ் லோபஸ் கிரிட்ஸ்பேச் என போலீசார் கண்டறிந்ததுள்னர். இவருக்கு சர்வதேச கிரிமினல் குரூப் கொலை மிரட்டல் விடுத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர் கிரிப்டோகரன்சி வணிகத்தில் ஈடுபட்டு வந்தவர்.
இந்த சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பதை தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவில் 2 பேர் ஈடுபட்டதாக தெரிகிறது. டெர்மினல் இரண்டில் ஒருவர் குண்டு பாய்ந்த கீழே விழுவது போல் தெரிகிறது. இந்த டெர்மினல் உள்ளூர் விமான போக்குவரத்திற்காக பயன்படும்.
- தோல்வி அடைந்த இஸ்ரேல் ரசிகர்கள்மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
- கலவரத்தில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்டர்டாம்:
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ளூர் கால்பந்து அணியான அஜாக்சுக்கும், இஸ்ரேல் கால்பந்து அணிக்கும் இடையிலான போட்டி நடந்தது. இதில் இஸ்ரேல் அணி தோல்வி அடைந்தது. அதனால் இஸ்ரேல் ரசிகர்கள் கோஷமெழுப்பினர்.
போட்டி முடிந்து ஆம்ஸ்டர்டாம் நகரின் தெருக்களில் சென்ற இஸ்ரேல் ரசிகர்கள் மீது மர்ம நபர்கள் தாக்கினர். அவர்களில் சிலர் பாலஸ்தீன கொடிகளை ஏந்தியபடி கோஷமெழுப்பினர்.
கலவரத்தில் ஈடுபட்ட நெதர்லாந்தை சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, நெதர்லாந்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், நெதர்லாந்தில் இருக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான இடங்கள் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
- இந்தியாவை வல்லரசுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
- இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் வரை அதிகரிக்கிறது.
உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இருப்பதற்கு இந்தியாவுக்கு தகுதி உள்ளது என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ரஷியா தொடர்ந்து பல்வேறு வழிகளில் இந்தியாவுடனான உறவை வளர்த்து வருவதாக தெரிவித்தார்.
"பில்லியன் கணக்கான மக்கள் தொகை, உலகின் அனைத்து பொருளாதாரங்களிலும் வேகமான வளர்ச்சி, பண்டைய கலாச்சாரம் மற்றும் வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள் கொண்ட இந்தியாவை வல்லரசுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்."
"நாங்கள் இந்தியாவுடன் பல வழிகளில் உறவை வளர்த்து வருகிறோம். இந்தியா தலைசிறந்த நாடு. தற்போது மக்கள் தொகை அடிப்படையில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் அங்கு வசிக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் வரை அதிகரிக்கிறது."
"எங்களது உறவு மற்றும் கூட்டணி எந்த வேகத்தில் வளர்ச்சி பெறும் என்பது இன்றைய கள எதார்த்தத்தை சார்ந்த இலக்கை கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் எங்ளிடையே ஒத்துழைப்பு பல மடங்கு அதிகரித்து வருகிறது," என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.
- சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ஃப் பகுதியில் அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
- பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சவுதி அரேபியாவில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ஃப் பகுதியில் அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளித்த பாலைவனத்தில் தற்போது பனிப்பொழிவும் நிகழ்ந்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி பிறநாட்டு மக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி ஓமன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (என்சிஎம்) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தடுக்க வந்த காதலியின் அண்ணனையும் கத்தியால் தாக்கி உள்ளார்.
- கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பென்சில்வேனியா:
பென்சில்வேனியாவில் 49 வயதான பெஞ்சமின் என்பவர், தனது காதலியின் தலைமுடியை தனக்கு பிடிக்காத வகையில் வெட்டியதால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அதனை தடுக்க முயன்ற அண்ணனையும் கத்தியால் குத்தியுள்ளார்.
சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த பெஞ்சமினை கைது செய்தனர். பின்னர் இறந்து கிடந்த காதலியையும் காயமடைந்த அண்ணனையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து அவர்களது மகள் குறித்த புகாரில், ஒருநாள் முன்னர் 50 வயதான கார்மென் மார்டினெஸ்-சில்வா முடி திருத்தம் செய்துள்ளார். அந்த புதிய ஹேர் ஸ்டைலுடன் அவர் வீடு திரும்பினார். வீட்டில் இருந்த அவரது காதலனுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை. இதனால் காதலி பயந்து, தன் மகளின் வீட்டில் இரவைக் கழிக்க முடிவு செய்தாள்.
ஆனால் தனது காதலனால் மிகவும் பயந்துடன் இருந்த அவர், தனது மகளின் வீட்டை விட்டு தனது சகோதரனின் வீட்டிற்குச் சென்று, தங்கள் உறவு முடிந்துவிட்டதை பெஞ்சமினிடம் சொல்லுமாறு ஒரு நண்பரிடம் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த பெஞ்சமின், அவளைத் தேடி அண்ணன் வீட்டுக்குச் சென்றார். முதலில் அவள் இல்லை என்று பொய் சொல்லி அவளை அண்ணன் திருப்பி அனுப்பி வைத்தார். ஆனால் பெஞ்சமின் திரும்பி வந்து காதலியின் அண்ணனை கத்தியால் தாக்க ஆரம்பித்தார். இதனை கண்ட காதலி தடுக்க முயற்சித்தார். அப்போது அவரை சராமாறியாக தாக்கி கொலை செய்துள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டது.
- சட்டத்திற்கு 61 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் 41 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- காசா முனை அல்லது வேறு பகுதிக்கு 20 ஆண்டுகள் வரை நாடு கடத்தப்படுவார்கள்.
இஸ்ரேல் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பங்களை வெளியேற்றுவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கட்சி மற்றும் அவருடைய ஆதரவு வலதுசாரி கட்சிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. பாராளுமன்றத்தில் 61 உறுப்பினர்கள் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 41 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் நீதிமன்றம் இந்த சட்டத்திற்கு தடைவிதிக்க வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனர்கள், இணைக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ளவர்கள், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் தாக்குதல் குறித்து முன்னதாக தெரிந்துள்ளவர்களாக இருந்தால், பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அல்லது அடையாளத்தை தெரிவிப்பவர்களாக இருந்தால் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள். அவர்கள் ஏழு முதல் 20 ஆண்டுகளுக்கு காசா முனை அல்லது மற்ற பகுதிக்கு நாடு கடத்தப்படுவார்கள்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு இந்த சட்டம் பொருந்துமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை, அங்கு இஸ்ரேல் ஏற்கனவே தாக்குபவர்களின் குடும்ப வீடுகளை இடிக்கும் நீண்டகாலக் கொள்கையைக் கொண்டுள்ளது.
இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.
- அமெரிக்கா வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் வெற்றியை நான் பெறுவதற்கு சூசன் வைல்ஸ் மிகவும் உதவியாக இருந்தார்.
- என்னுடைய 2016 மற்றும் 2020 வெற்றிகரமான பிரசாரத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2-வது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். டொனால் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் என தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே டொனால்டு டிரம்ப் அதிகாரிகளை அறிவித்து வருகிறார். வெற்றி உரையின்போது ஜே.டி. வின்ஸை துணை அதிபராக அறிவிப்பதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தன்னுடைய தேர்தல் பிரசார குழுவின் மானேஜராக திகழந்த சூசன் வைல்ஸ் என்ற பெண்மணியை வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக நியமித்துள்ளார். இந்த பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் வெற்றியை நான் பெறுவதற்கு சூசன் வைல்ஸ் மிகவும் உதவியாக இருந்தார். என்னுடைய 2016 மற்றும் 2020 வெற்றிகரமான பிரசாரத்தின் ஒரு பகுதியாக அவர் இருந்தார். அவர் கடினமானவர். புத்திசாலி, புதுமையானவர். அத்துடன் உலகளவில் போற்றப்படுகிறவர். மதிக்கப்படுகிறவர் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற சூசி (சூசன் வைல்ஸ்) தொடர்ந்து அயராது உழைக்கிறார். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி இருப்பது மிகவும் தகுதியான மரியாதை. அவர் நம் நாட்டைப் பெருமைப்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.






