என் மலர்tooltip icon

    உலகம்

    • ஜோ பைடன் ஆட்சிக்காலம் வரும் ஜனவரியில் முடிவடைந்ததும் டிரம்ப் அதிபர் பதவியை ஏற்பார்
    • தேதி மட்டும்தான் தெரியாதே தவிர போர் விரைவில் முடிவுக்கு வர உள்ளது.

    ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இது நடந்தால் தங்கள் நாட்டுக்கு மேற்கத்திய நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் ரஷியா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போர் ஒரு முடிவை எட்டாமல் நீண்டுகொண்டே செல்கிறது.

    உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் ராணுவ பலத்தை ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு வழங்கி வருகிறது.வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவுக்கு பக்க பலமாக உள்ளது. இந்நிலையில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடித்து அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்து முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

    ஜோ பைடன் ஆட்சிக்காலம் வரும் ஜனவரியில் முடிவடைந்ததும் டிரம்ப் அதிபர் பதவியை ஏற்பார். இதனால் சர்வதேச அரசியலில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஏற்படும் என்று யூகிக்கப்படுகிறது. அந்த வகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்நாட்டின் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, டிரம்ப் அதிபராகிய பின்னர் உக்ரைன் - ரஷியா போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

     

     

    பேட்டியில் ஜெலன்ஸ்கி பேசியதாவது, முடிவடையும் சரியான தேதி மட்டும்தான் தெரியாதே தவிர போர் விரைவில் முடிவுக்கு வர உள்ளது, வெள்ளை மாளிகையில் புதிய தலைமை கொண்டுள்ள கொள்கைகள், அவர்களின் அணுகுமுறை இதை உறுதி செய்கிறது.

    டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவருடன் நான் [ஜெலன்ஸ்கி] பேசினேன். இந்த உரையாடல் ஆக்கபூர்வமாகவே இருந்தது. நமது நிலைப்பாட்டுக்கு எதிரான எதையும் அவர் பேசி நான் கேட்கவில்லை என்று தெரிவித்தார். 2 வருட போர் விரைவில் முடிவடைய உள்ளதாக ஜெலன்ஸ்கி உறுதிபட கூறியிருப்பது சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இதற்கிடையே தனது மார் ஏ லோகோ எஸ்டேட்டில் நடந்த  கண்காட்சியில் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  'மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக எனது நிர்வாகம் செயல்படும். ரஷ்யாவும், உக்ரைனும் போரை நிறுத்த வேண்டும்.ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்காக கடுமையாக உழைக்க போகிறோம்' என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கரோலின் லீவிட் மேடையில் சிறந்து விளங்குவார் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
    • வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பதவியை வகிக்கும் இளம் வயது நபர் கரோலின் லீவிட் ஆவார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் ஜனவரி மாதம் 20-ந்தேதி பதவியேற்கிறார். அவர் தற்போது தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம் பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறார்.

    இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக கரோலின் லீவிட் என்ற 27 வயது பெண்ணை நியமனம் செய்துள்ளார். இவர் டிரம்பின் பிரசார உதவியாளராக பணியாற்றி இருந்தார்.

    இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, கரோலின் லீவிட் மேடையில் சிறந்து விளங்குவார் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, மேலும் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவோம் என்ற செய்தியை மக்களுக்கு வழங்க உதவுவார் என்றார். வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பதவியை வகிக்கும் இளம் வயது நபர் கரோலின் லீவிட் ஆவார். இதற்கு முன்பு 1969-ம் ஆண்டு 29 வயதான ரான் ஜீக்லர் நியமிக்கப்பட்டிருந்தார்.

    • அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24-ந்தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    • இன்றும் நாளையும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு காற்று தரக்குறியீடு 1,600 என்ற அளவில் உயர்ந்து உள்ளது. இது பேரழிவு அளவாக இருக்கிறது.

    அம்மாகாணத்தில் தொடர்ந்து புகை மூட்டம் நிலவி வருகிறது. காற்று மாசுக்களால் ஏற்படும் அடர்ந்த புகை, பஞ்சாபின் பல நகரங்களை சூழ்ந்துள்ளது. லாகூர் மற்றும் முல்தான் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர்.

    அவர்கள் சுவாசப் பிரச்சனைகள், கண் பாதிப்பு உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த நிலையில் காற்று மாசு காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் சுகாதார அவசரநிலையை அம்மாகாண அரசு விதித்து இருக்கிறது. லாகூர், முல்தான் மாவட்டங்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    புகைமூட்டம் தற்போது ஒரு தேசிய பேரழிவாக உள்ளது என்றும் இது ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்தில் முடிந்துவிடாது. 3 நாட்களுக்குப் பிறகு நிலைமை மதிப்பீடு செய்யப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே காற்று மாசு காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் 17-ந்தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தொடர்ந்து மோசமான நிலை இருப்பதால் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24-ந்தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் ஆன்லைன் வழியே கல்வி பயிற்சியை தொடர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புகைமூட்டம் அதிகம் உள்ள லாகூர், முல்தான் நகரங்களில் வாரத்திற்கு 3 நாட்கள் வரை முழு ஊரடங்கை பஞ்சாப் அரசு நேற்று அமல்படுத்தியது. அதன்படி அங்கு இன்றும் நாளையும் இந்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரேசா பாங்கி தான் எக்ஸ் தளத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் நபர் ஆவார்.
    • எக்ஸ் தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் அதிக கவனம் செலுத்தவே பாங்கி பணியமர்த்தப்பட்டுள்ளார்.

    எலான் மஸ்க் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல சமூக ஊடகமான டுவிட்டரை 44 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கினார். பின்னர் எலான் மஸ்க் டுவிட்டருக்கு எக்ஸ் என்ற பெயர் மாற்றம் செய்தார்.

    இந்நிலையில், எக்ஸ் தளத்தின் தலைமை நிதி அதிகாரியாக துபி ஸ்ட்ரீமிங் தளத்தின் முன்னாள் நிதித் தலைவரான மஹ்மூத் ரேசா பாங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.

    மஹ்மூத் ரேசா பாங்கி தான் எக்ஸ் தளத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் நபர் ஆவார். எக்ஸ் தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் அதிக கவனம் செலுத்தவே பாங்கி பணியமர்த்தப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

    2010 ஆம் ஆண்டு தவறான அறிக்கைகளை வழங்கியதற்காக பாங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். பின்னர் 2021-ல் பாங்கியை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மன்னித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து அதிகம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
    • உயிருக்கு ஆபத்து இருந்தாலும் இந்த சட்டவிரோத இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. முதல் 5 நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்.) மற்றும் டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மக்களிடம் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அந்த அறிக்கையை பாகிஸ்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

    அதில், 'கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து அதிகம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். உயிருக்கு ஆபத்து இருந்தாலும் இந்த சட்டவிரோத இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது. சுமார் 40 சதவீதம் பாகிஸ்தானியர்கள், இடம் பெயர விரும்புவதாக கூறி உள்ளனர்' என்று கூறப்பட்டுள்ளது.

    • 14 வயதிலிருந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது.
    • இதற்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது.

    லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குழந்தைத் திருமணங்களை ஒழிக்கும் முகாந்திரத்தில் புதிய மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டுள்ளது. கொலம்பியாவில் இதுவரை பெற்றோர் சம்மதத்துடன் 14 வயதிலிருந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது.

    இதற்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது. அவர்கள் சிறுமிகள்! மனைவிகள் அல்ல! என்ற முழக்கம் அந்நாட்டில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இந்த மசோதா மீது தற்போது கொலம்பிய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதிக வாக்குகளுடன் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

     

    இதனை பாராளுமன்றத்தில் வைத்தே அந்நாட்டு எம்.பிக்கள் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ இதில் கையெழுத்திட்ட பின்னர் மசோதா சட்டமாக்கப்பட்டும். இதன்மூலம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதை வரவேற்றுப் பேசிய காங்கிரசை சேர்ந்த கிளாரா ஒப்ரிகான், அவர்கள் பாலியல் பொருட்கள் அல்ல, அவர்கள் சிறுமிகள் என்று தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடான ஈராக் பெண் குழந்தைகளின் திருமண வயதை 9 ஆக குறைக்க தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்துக்கு இடையில் உள்ள வான் பரப்பில் பறந்தது.
    • சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் இந்த டர்புலன்ஸ் ஏற்பட்டது

    ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோல்ம் [Stockholm] விமான நிலையத்திலிருந்து அதிகாலை 12.03 மணிக்கு அமெரிக்காவின் மியாமி நகருக்கு ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் [ SAS ] நிறுவனத்தின் SAS SK957 விமானம் புறப்பட்டது.

    வானில் பறந்துகொண்டிருந்த விமானம் ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்துக்கு இடையில் உள்ள வான் பரப்பின் மீது வந்தபோது மோசமான வானிலை காரணமாகக் கடுமையான டர்புலன்ஸை எதிர்கொண்டுள்ளது.

     

    சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் இந்த டர்புலன்ஸ் காரணமாகப் பயணிகள் தங்கள் இருக்கையில் தூக்கி மேல் நோக்கி தூக்கி வீசப்படும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

    பல மணி நேரங்களாக டர்புலென்ஸ் நீடித்ததால் மேற்கொண்டு பயணத்தைத் தொடரமுடியாமல் விமானம் மீண்டும் ஐரோப்பாவுக்கே திரும்பியுள்ளது. பயணிகளுக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒருவர் காயமுற்றதாகப் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் மந்திரிகள் பலர் தோல்வி அடைந்தனர்.
    • திச நாயகா தலைமையிலான கூட்டணி 141 இடங்களை கைப்பற்றியது.

    இலங்கை பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை அமைதியான முறையில் நடந்தது. வாக்குப் பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் அதிபர் அனுரா குமார திச நாயகா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) கட்சி முன்னிலை வகித்தது.

    இதைத் தொடர்ந்து நடந்த ஓட்டு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை வகித்து வந்தது. எதிர்கட்சிகளை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 113 இடங்களும் சிறப்பு பெரும்பான்மைக்கு 150 இடங்களும் தேவை. இந்த மேஜிக் எண்ணை அக்கட்சி எளிதில் எட்டி பிடித்தது. சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் முன்னாள் மந்திரிகள் பலர் தோல்வி அடைந்தனர்.

    வாக்கு எண்ணிக்கை முடிவில் அனுரா குமார நித நாயகா தலைமையிலான கூட்டணி 141 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாராளுமன்ற அதிகாரத்தை இந்த கூட்டணி தன்வசப்படுத்தி உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 61.56 சதவீத வாக்குகளை தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெற்றது.

    • நாங்கள் கான்பரன்ஸ் இடத்தை முற்றிலுமாக பாதுகாப்பு செய்து விட்டோம்
    • எந்த வாழைப்பழங்களும் இங்கு இல்லை என்று ஊழியர்கள் அவருக்கு தெரிவித்துள்ளனர்.

    ஐரோப்பாவில் உள்ள ஸ்வீடன் நாட்டின் பாலின சமத்துவம் மற்றும் வொர்க் லைஃப் அமைச்சர் பவுலினா பிராட்பெர்க் [Paulina Brandberg]. இவருக்கு வாழைப்பழங்களைக் கண்டால் பயம் ஏற்படும் போபியா [Phobia] உள்ளது.

    உயரமான இடங்களைக் கண்டு பயப்படுவது Acrophobia, ரத்தத்தைக் கண்டு பயப்படுவது Hemophobia என பல போபியாக்கள் இருப்பது போல் வாழைப்பழங்களைக் கண்டு பயப்படுவதற்கு பெயர் bananaphobia ஆகும்.

    இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பவுலினா பிராட்பெர்க் தனது அலுவலகத்தில் தான் கலந்து கொள்ளும் மீட்டிங்களில் வாழைப்பழங்கள் தனது கண்ணில் படவே கூடாது என்று ஸ்டிரிக்டாக தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு ஸ்டிரிக்ட்டாக உத்தரவு போட்டுள்ளார்.

     

    அவருக்கும் அவரிடம் வேலை பார்ப்பவர்களுக்கும் இடையிலாக பரிமாறிக்கொள்ளப்பட்ட ஈமெயில்கள் லீக் ஆனதால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எஸ்பிரசென் [Expressen] செய்தி நிறுவனம் இந்த ஈமெயில்களை பொதுவெளியில் வெளியிட்டது.

    கடந்த செப்டம்பர் மாதம் தேதியிட்ட ஈமெயில் ஒன்றில், ஸ்வீடன் சபாநாயகர் அலுவலகத்தில் தான் கலந்துகொள்ள உள்ள மீட்டிங்கில் வாழைப்பழகளுக்கான எந்த தடையும் இருக்கக்கூடாது, அவை எனக்கு அதிக அலர்ஜி என்று பவுலினா தெரிவித்துள்ளார்.

    பவுலினா கலந்துகொள்ள உள்ள மற்றொரு மீட்டிங் தொடர்பான ஈமயிலில், நாங்கள் கான்பரன்ஸ் இடத்தை முற்றிலுமாக பாதுகாப்பு செய்து விட்டோம், எந்த வாழைப்பழங்களும் இங்கு இல்லை என்று ஊழியர்கள் அவருக்கு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பல ஈமெயில் உரையாடல்கள் வெளியாகி அந்நாட்டில் பேசுபொருளானது.

     

    இதையடுத்து பவுலினாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டெர்சன் [Ulf Kristersson], பவுலினாவின் போபியா அரசு நிர்வாக செயல்பாடுகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை, போபியாக்களால் அவதிப்படும் மனிதர்களையும் அவர்களின் சிரமங்களையும் நான் மதிக்கிறேன், அதை கிண்டல் செய்யக் கூடாது, கடினமாக உழைக்கக்கூடிய ஒரு அமைச்சரை மக்கள் கிண்டல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    • 54 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் நடக்க உள்ளது.
    • The View, KTTV, Fox உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார்.

    உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க்குக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் 235 பில்லியன் டாலர் சொத்துடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார்.60 வயதான ஜெஃப் பெசோஸ் தனது இரண்டாம் திருமணத்துக்குத் தயாராகி வருகிறார். தனது நீண்ட நாள் காதலியான 54 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் நடக்க உள்ளது.

    இவர்கள் இருவருக்கும் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திருமணம் நடைபெற உள்ளதாக அமெரிக்க இதழான தி சன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இவர்கள் விடுமுறைக்கு வழக்கமாக ஆஸ்பென் நகருக்கு அடிக்கடி சென்று வருவர்.

    இந்நிலையில் அந்த ஆஸ்பென் நகரில் வைத்தே தங்கள் திருமணத்தைப் பிரமாண்டமாக நடந்த இவர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த திருமண விழாவில் அமெரிக்க பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள உள்ளதாகவும் தி சன் இதழ் தெரிவித்துள்ளது.

     

    The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றிய லாரன் சான்செஸ் உடன் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜெஃப் பெசோஸ் டேட்டிங் செய்து வருகிறார்.

    ஜெஃப் பெசோஸ் தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட் - ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்தின்மூலம் ஜெஃப் பெசோஸ் வைத்திருந்த கணிசமான பங்குகளை பெற்று மெக்கன்சி ஸ்காட் பில்லியனர் ஆனார்.

    • போயிங் தலைமை செயல் அதிகாரி தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
    • ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை தொடர்கிறோம்.

    உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் அதிரடி பணிநீக்க நடவடிக்கையை துவங்கியுள்ளது. உலகம் முழுக்க பணியாற்றி வரும் போயிங் ஊழியர்களில் 10 சதவீதம் பேர், சுமார் 17 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி ஜனவரி மாத மத்தியில் பணிநீக்க நடவடிக்கை அமலுக்கு வரவுள்ளது.

    பணிநீக்க நடவடிக்கையில் தெற்கு கரோலினா மற்றும் வாஷிங்டன் ஆலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். பணிநீக்க நடவடிக்கை தொடர்பாக போயிங் தலைமை செயல் அதிகாரி தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

    அதில், "நாங்கள் ஏற்கனவே அறிவித்தப்படி நிதி சார்ந்த திட்டங்கள் மற்றும் முக்கியமானவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு ஏற்ற வகையில் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை தொடர்கிறோம். சந்தையில் போட்டித்தன்மையை தொடர்வதற்கும், வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால மதிப்புகளை வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை முக்கியமான ஒன்று ஆகும்," என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என பல சர்ச்சையில் சிக்கியதால் டைசன் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கவில்லை.
    • சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு டைசன் திரும்பி உள்ளார்.

    இர்விங்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி இன்று நடக்கிறது. இதில், அமெரிக்காவின் மைக் டைசன், ஜேக் பால் மோதுகின்றனர்.

    முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியனான மைக் டைசன் (58 வயது), இதுவரை விளையாடிய 58 போட்டியில், 50-ல் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை 'நாக்-அவுட்' முறையில் வீழ்த்தினார். ஆறு போட்டியில் மட்டும் தோல்வியடைந்தார். எதிரணி வீரரின் காதை கடித்தது, பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என பல சர்ச்சையில் சிக்கியதால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பி உள்ளார்.

    இவரை அமெரிக்காவை சேர்ந்த 'யூடியூப்' பிரபலம் ஜேக் பால் (27) எதிர் கொள்கிறார். இவர் கடந்த 2013 முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார். இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10ல் வெற்றி பெற்றார். இதில் 7 முறை 'நாக்-அவுட்' முறையில் வெற்றி கண்டார்.

    இருவருக்கு இந்திய நேரப்படி இன்று மாலை போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில் போட்டோசூட்டுக்காக இருவரும் ஒரே மேடையில் தோன்றினர். அப்போது மைக் டைசன் எதிரணி வீரரான ஜேக் பால் கன்னத்தில் பலார் என அறைந்தார். ஆனால் அவர் அறைந்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தப்படி பால் இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    ×