என் மலர்

  செய்திகள்

  தென்னாப்பிரிக்காவில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
  X

  தென்னாப்பிரிக்காவில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷியா, சீனா, அங்கோலா, அர்ஜெண்டினா ஆகிய நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். #PMModi #BRICS #IndiaatBRICS
  ஜோகன்னஸ்பெர்க்:

  ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நேற்று நடந்த பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டு தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

  மேலும், மாநாட்டில் பார்வையாளராக அங்கோலா, அர்ஜெண்டினா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாடு முடிந்த பின்னர், ஒவ்வொரு நாடுகளின் தலைவர்களிடம் மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார்.  தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், அங்கோலா ஜாவோ, அர்ஜெண்டினா அதிபர் மவுரிசியோ மாக்ரி ஆகியோரை மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

  தென்னாப்பிரிக்க அதிபர் உடனான சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே சில துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 


  Next Story
  ×