என் மலர்

  செய்திகள்

  உங்கள் வெற்றியை உலகமே பேசுகிறது: பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்த டிரம்ப் புகழாரம்
  X

  உங்கள் வெற்றியை உலகமே பேசுகிறது: பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்த டிரம்ப் புகழாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபர் மேக்ரானை சந்தித்த டொனால்டு டிரம்ப் உங்கள் வெற்றி குறித்து உலகமே பேசுகிறது என்று புகழாரம் சூட்டினார்.
  புருசெல்ஸ்:

  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபின் முதன் முறையாக சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 

  அதன்படி சவுதி அரேபியா, இஸ்ரேல், சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இத்தாலி சென்றார். அங்கு வாடிகன் நகரில் போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்தார். இத்தாலி அதிபர் செர்ஜியோ மேட்டரல்லா, பிரதமர் பயோலோ ஜென்டிலோனி ஆகியோரை சந்தித்தார். 

  இதனையடுத்து பயணத்தின் ஒரு பகுதியாக அதிபர் டிரம்ப் இன்று பிரான்ஸ் நாட்டிற்கு சென்றார். அங்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிபர் மெக்ரானை டிரம்ப் சந்தித்தார்.

  இந்த சந்திப்பின் போது, “இந்த உலகமே உங்கள் வெற்றியை பற்றி பேசுகிறது. ஆச்சியர்யப்படும் வகையில் பிரச்சாரம் நடத்தினீர்கள். மிகப்பெரிய வெற்றியாக இருந்தது” என்று மேக்ரானிடம் டிரம்ப் கூறினார்.

  மேலும் இந்த சந்திப்பின் போது தீவிரவாதம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் பேசினர். 
  Next Story
  ×