என் மலர்
நீங்கள் தேடியது "world"
- சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ.பள்ளியில் உலக தண்ணீர் வாரவிழா நடந்தது.
- நீரின் பயன்பாடுகள் குறித்து கவிதை, ஊமைநாடகம், நீரைப்பற்றிய திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் உலக தண்ணீர் வாரவிழா நடந்தது. சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் ரோட்டரி சங்க தலைவர் வைமா திருப்பதிசெல்வன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ராதா, செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி சேர்மன் குமரேசன் தலைமை தாங்கினார்.
முதன்மை செயல் அதிகாரி அரவிந்த், முதல்வர் அனுசுயா, துணைமுதல்வர் சவுந்திரபாண்டி என்ற சவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்தனர். 8-ம் வகுப்பு மாணவி கிருத்திகா வரவேற்றார். நீர் நிலைகளில் வாழும் உயிரினங்கள், நீரின் பயன்பாடுகள் குறித்து கவிதை, ஊமைநாடகம், நீரைப்பற்றிய திருக்குறள் ஒப்புவித்தல், நடனம் போன்ற நிகழ்ச்சிகளை மாணவர்கள் நடத்தினர். நீரின் அவசியம் குறித்து கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது. இதில் கொல்கத்தா நிர்ணயித்த 179 ரன்கள் இலக்கை டெல்லி அணி 18.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. டெல்லி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 97 ரன்களுடன் (63 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
தவானுக்கு சதம் அடிக்க நல்ல வாய்ப்பு இருந்தது. வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்ட போது, அவர் மூன்று இலக்கத்தை தொட 3 ரன் தேவையாக இருந்தது. அப்போது காலின் இங்ராம் (14 ரன்) சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்து விட்டார்.
20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் தவானின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆட்டநாயகன் விருது பெற்ற 33 வயதான தவான் கூறுகையில், ‘சதம் அடிப்பது எனக்கு விருப்பமான ஒன்று தான். 100 ரன் எடுத்திருந்தால் அது 20 ஓவர் கிரிக்கெட்டில் எனது முதல் சதமாக இருக்கும் என்பதையும் அறிவேன். ஆனால் தனிப்பட்ட சாதனையே விட அணியின் லட்சியமே முக்கியம். அதனால் தான் முந்தைய பந்தில் ‘ரிஸ்க்’ எடுக்காமல் ஓடி ஒரு ரன் எடுத்தேன். 97 ரன்கள் எடுத்ததே எனக்கு சதம் மாதிரி தான்’ என்று குறிப்பிட்டார்.
வெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றது மிகவும் திருப்தி அளிக்கிறது. கொல்கத்தா ஈடன்கார்டனில் எல்லாமே சிறப்பு வாய்ந்தது தான். நாட்டின் மிகச்சிறந்த மைதானம் இது. அபாரமாக பந்து வீசி அவர்களை 178 ரன்களில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது 200 ரன்கள் எடுக்கக்கூடிய ஆடுகளம். அதனால் தான் எளிதாக சேசிங் செய்து விட்டோம்.
இன்றைய ஆட்டத்தில் ஷிகர் தவான், தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மிகச்சிறந்த வீரர்கள் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இந்த வரிசையில் 4-வதாக டோனியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக தவான் திகழ்கிறார். நிலைத்து நின்று அதிரடியாக ஆடத் தொடங்கி விட்டால், அவரை எதிரணி பவுலர்கள் கட்டுப்படுத்துவது கடினம். குறுகிய வடிவிலான போட்டியில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தரமான ஆட்டக்காரர் தவான்.
உலக கோப்பை கிரிக்கெட் வேறு வடிவிலான (50 ஓவர்) போட்டி. தவான் ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் நன்றாக ஆடி இருக்கிறார். உலக கோப்பையிலும் அவர் அசத்துவார்.
இவ்வாறு கங்குலி கூறினார்.
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது, ‘நோ-பால்’ மறுக்கப்பட்டதால் சென்னை கேப்டன் டோனி மைதானத்திற்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் குறித்து கங்குலியிடம் கேட்டபோது, ‘எல்லோரும் மனிதர்கள் தானே. இங்கு நான் அவரது போட்டி மனப்பான்மையை தான் பார்க்கிறேன். அது வியப்புக்குரியது’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். #IPL2019 #Ganguly #ShikharDhawan
பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

4-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘அமைதிக்கான யோகா’ ஆகும். இதையொட்டி, நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மாநில அரசுகள் இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
வெளிநாடுகளில், இந்திய தூதரகங்கள் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சுரிநாம் நாட்டில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்குள்ள பரமாரிபோ நகரில் அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்கிறார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மும்பையில் யோகா செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் வன ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 55 ஆயிரம் பேருடன் யோகா பயிற்சியில் ஈடுபடுகிறார். இதையொட்டி, அங்கு கமாண்டோக்கள் மற்றும் துணை ராணுவப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், லக்னோவிலும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பெல்ஜியம் நாட்டு நாடாளுமன்ற வளாகத்திலும் யோகா பயிற்சி செய்கிறார்கள். இதுபோல், ஒவ்வொரு மத்திய மந்திரியும் ஒவ்வொரு நகரங்களில் பங்கேற்கிறார்கள்.
21 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பனி சிகரத்தில் சுமார் 200 ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி செய்கிறார்கள். அதன் அடிவார முகாமில், சத்குரு ஜக்கி வாசுதேவ் ராணுவ வீரர்களிடையே பேசுகிறார்.
தலைநகர் டெல்லியில் 8 இடங்களில் யோகா பயிற்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சி, ராஜபாதையில் நடைபெறுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரம்மகுமாரிகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில், பெண்கள், துணை ராணுவ படையினர் உள்பட சுமார் 50 ஆயிரம்பேர் பங்கேற்கிறார்கள்.
பதஞ்சலி யோகா சமிதி சார்பில் துவாரகாவிலும், வாழும் கலை மையம் சார்பில் ரோகிணி பகுதியிலும் யோகா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
யோகா தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
யோகா என்பது நமது முனிவர்கள், மனித குலத்துக்கு அளித்த விலைமதிப்பில்லாத பரிசு. அது, உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் உடற்பயிற்சிகளின் தொகுப்பு மட்டுமல்ல, நமது சுகாதார உத்தரவாதத்துக்கான பாஸ்போர்ட் ஆகும். மனதை ஒருமுகப்படுத்தி, மனவலிமை அளிக்கிறது. எனவே, உலக மக்கள் யோகாவை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Yoga #InernationalYogaDay

இந்நிலையில், வங்கிக் கணக்குகள் தொடர்பான உலகளாவிய ஒப்பீடு வெளியாகி உள்ளது. அதில், இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்தபோதிலும், உலக அளவில் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2014-ம் ஆண்டு வங்கி கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை 53 சதவீதமாக இருந்தது. அது 2017ல் 80 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், 191 மில்லியன் மக்களுக்கு (19.1 கோடி) வங்கி கணக்கு இல்லை. இது, வங்கிக்கணக்கு இல்லாத மக்கள் அதிகம் உள்ள நாடுகளில் இரண்டாவது இடமாகும். முதலிடத்தில் சீனா உள்ளது. அங்கு 224 மில்லியன்மக்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. பாகிஸ்தான் 99 மில்லியன் மக்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. #UnbankedPopulation #IndianBankingSystem

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் கையெழுத்திட்டனர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, கிம் ஜாங் அன் பேசுகையில், இது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என்றும் இந்த சந்திப்பு சிறப்பாக நடப்பதை உறுதி செய்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
‘கடந்த காலங்களில் நடந்தவற்றை மறக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதற்காக முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இனி உலகம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும்’ என்றும் கிம் கூறினார்.
டிரம்ப் பேசும்போது, வடகொரிய தலைவர் கிம்மை அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைப்பேன் என்றார். பேச்சுவார்த்தை தொடர்பான விரிவான விவரங்களை மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறினார். #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument






