என் மலர்
உலகம்
- இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
- தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வார்சா:
ஐரோப்பிய நாடான போலந்தில் அதிபர் ஆண்ட்ரெஜ் டுடாவின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்ற தேர்தல் அங்கு நடைபெற்று வருகிறது.
முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 18-ம் தேதி நடந்து முடிந்தது. இதில் தாராளவாத ஐரோப்பிய ஒன்றிய சார்பு வேட்பாளரான ரபால் டிர்சாஸ்கோவ்ஸ்கியும் (53), பழமைவாத கட்சி சார்பில் கரோல் நவ்ரோக்கி (42) ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறினர்.
இதனையடுத்து, 2-வது கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- அழிக்கப்பட்டவற்றில் அதிநவீன Tu-95 மற்றும் Tu-22M3 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஒரு A-50 உளவு விமானம் ஆகியவை அடங்கும்.
- சரக்கு லாரிகளில் பொருத்தப்பட்ட கொட்டகைகளில் டிரோன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
உக்ரைன் ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டிரோன் தாக்குதலை இன்று நடத்தியிருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் நாளை (ஜூன் 2) இஸ்தான்புல்லில் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த தாக்குதல் பதட்டங்களை அதிகரித்துள்ளது.
'ஆபரேஷன் ஸ்பைடர் வெப் ' (பாவுடின்) என்ற பெயரில், உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) இந்த மெகா நடவடிக்கையை மிகவும் ரகசியமாக திட்டமிட்டு செயல்படுத்தியதாக நம்பப்படுகிறது.
இந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாக பெலாயா (கிழக்கு சைபீரியா), பின்லாந்துக்கு அருகிலுள்ள ஆர்க்டிக்கில் உள்ள ஒலென்யா மற்றும் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள இவானோவோ மற்றும் டியாகிலெவ் உள்ளிட்ட பல முக்கிய ரஷிய விமான தளங்கள் குறிவைக்கப்பட்டதாக உக்ரேனிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தாக்குதல்களில் 40க்கும் மேற்பட்ட ரஷிய போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரேனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அழிக்கப்பட்டவற்றில் அதிநவீன Tu-95 மற்றும் Tu-22M3 அணுகுண்டு குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஒரு A-50 உளவு விமானம் ஆகியவை அடங்கும்.
சைபீரியாவின் இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள ஸ்ரிட்னி கிராமத்தில் உள்ள தங்கள் ராணுவ தளத்தின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதை அந்தப் பிராந்தியத்தின் ரஷிய ஆளுநரே உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரக்கு லாரிகளில் பொருத்தப்பட்ட கொட்டகைகளில் டிரோன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், டிரோன்கள் ஏவுவதற்காக குறிப்பிட்ட நேரங்களில் லாரிகளின் கூரைகள் தொலைவிலிருந்து திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ரஷியாவைப் போல விரிவான ஏவுகணை இருப்புக்கள் இல்லாத உக்ரைன், முக்கிய ஆயுதமாக டிரோன்களையே அதிகம் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரஷிய அரசு ஊடகமான RT இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
- 'டு கில் எ டைரண்ட்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எடுத்தார்.
ரஷியா- உக்ரைன் போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சுவர் போல பாதுகாக்கும் மெய்க்காப்பாளர்கள் வைரலாகி வருகின்றனர்.
ரஷிய அரசு ஊடகமான RT இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஒரு புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டபோது, மெய்க்காப்பாளர்கள் அவரைப் பாதுகாப்பதைக் காட்டும் படத்தைப் RT பகிர்ந்து கேலி செய்துள்ளது.
கண்காட்சியில் ஜெலென்ஸ்கி 'டு கில் எ டைரண்ட்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை படிக்க எடுத்ததாகக் கூறப்படுகிறது.
- சாம்பியன்ஸ் லீக் போட்டியில் PSG கால்பந்து கிளப் அணி, இன்டர் மிலனை தோற்கடித்தது.
- ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கடைகளுக்குள் நுழைந்து, பொருட்களைக் கொள்ளையடித்தனர்.
பிரான்சில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டங்களில் வன்முறை வெடித்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் PSG கால்பந்து கிளப் அணி, இன்டர் மிலனை தோற்கடித்தது. ஆயிரக்கணக்கான PSG ரசிகர்கள், தலைநகர் பாரிஸின் தெருக்களில் இறங்கி பெரிய அளவிலான கொண்டாட்டங்களைத் தொடங்கினர்.
இந்நிலையில் கூட்டத்தில் எதிர் அணிகளின் ரசிகர்களுக்கும் PSG ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் வெடித்தன. இது கடுமையான மோதல்களுக்கு வழிவகுத்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 192 பேர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாரிஸின் தெருக்களில் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் தலையிட்டனர். வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.

போராட்டக்காரர்கள் பல வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும், பேருந்து நிறுத்துமிடங்களை அழித்ததாகவும் அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கடைகளுக்குள் நுழைந்து, பொருட்களைக் கொள்ளையடித்ததாகவும், அவர்களைத் தடுக்க முயன்ற பாதுகாப்புப் பணியாளர்களைத் தாக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோதல்கள் தொடர்பாக இதுவரை மொத்தம் 559 பேரை காவல்துறை கைது செய்துள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- ஐநா உள்ளிட்ட அமைப்புகளை மட்டுப்படுத்தி இஸ்ரேல் - அமெரிக்கா இணைத்து உதவி மையங்களை நிறுவி வருகிறது.
- விடியற்காலையில் ஆயிரக்கணக்கான மக்கள் விநியோக தளத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பே சென்றனர்.
கசாவுக்குள் கடந்த மார்ச் முதல் எந்த உணவு மற்றும் உதவி பொருளும் செல்வதை இஸ்ரேல் தடுத்து வைத்து காசா மக்களை பட்டினி போட்டது. இஸ்ரேலின் இந்த மிருகத்தனத்தை சர்வதேச சமூகம் கண்டித்த நிலையில் பல்வேறு அழுத்தத்துக்கு பின் தற்போது உதவி பொருட்கள் செல்ல இஸ்ரேல் அனுமதித்துள்ளது.
ஆனால் ஐநா உள்ளிட்ட அமைப்புகளை மட்டுப்படுத்தி இஸ்ரேல் - அமெரிக்கா இணைத்து உதவி மையங்களை நிறுவி வருகிறது. பசியால் துடிக்கும் காசா மக்களை அங்கு வரவழைப்பதன்மூலம் அவர்களை வாழ்விடங்களை விட்டு இஸ்ரேல் வெளியேற்ற முயற்சிக்கிறது என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், இன்று அதிகாலை இஸ்ரேலிய ஆதரவு பெற்ற அறக்கட்டளை நடத்தும் உதவி விநியோக மையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மக்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் பீரகிங்கி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதில் இரண்டு பெண்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகத்தின் பதிவுத் துறைத் தலைவர் சஹர் அல்-வஹிதி தெரிவித்தார்.

விடியற்காலையில் ஆயிரக்கணக்கான மக்கள் விநியோக தளத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பே சென்றனர். இஸ்ரேலிய இராணுவம் அவர்களை கலைந்து சென்று பின்னர் திரும்பி வருமாறு உத்தரவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
செஞ்சிலுவைச் சங்கத்தால் நடத்தப்படும் ஒரு மருத்துவமனையின் அதிகாரிகள், குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாகவும், 175 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசுவதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாததால், பெயர் வெளியிட விரும்பாத நிலையில் அவர்கள் பேசியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் முன்னதாகவே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளது.
- மே 11-ந் தேதி மட்டும் நீங்கள் (இந்தியா) தாக்கியிருந்தால் நாங்களும் பதிலுக்கு உங்களை தாக்கியிருப்போம்.
- ஷேக் ஹசீனா அரசு இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் நல்ல நட்புடன் செயல்பட்டு வந்தது.
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.
இதனால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்தது நாங்கள்தான் என்று லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தெரிவித்துள்ளது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய ஜமாத்-உத்-தாவா அமைப்பைச் சேர்ந்த சைபுல்லா கசூரி மற்றும் ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட முசம்மில் ஹாஷ்மி ஆகியோர் ரஹீம் யார் கான் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது முசம்மில் ஹாஷ்மி பேசும் போது, "கடந்த ஆண்டு வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்து நாங்கள் தோற்கடித்தோம். இது இந்திய பிரதமர் மோடிக்கு நன்கு தெரியும்.
மே 11-ந் தேதி மட்டும் நீங்கள் (இந்தியா) தாக்கியிருந்தால் நாங்களும் பதிலுக்கு உங்களை தாக்கியிருப்போம். மே 7-ந்தேதி இரவில் தாக்குதல் நடத்தினீர். ஆனால் மே 10-ந் தேதி நாங்கள் காலை வேளையில் தாக்குதல் நடத்தினோம். நாங்கள் உங்களுக்கு பதிலடி கொடுப்போம். கொடுத்து கொண்டிருக்கிறோம். நீங்கள் போர்க்களத்துக்கு வந்தால் நாங்களும் போர்க்களத்துக்கு வருவோம்" என்றார்.
வங்காளதேசத்தில் இருந்த ஷேக் ஹசீனா அரசு இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் நல்ல நட்புடன் செயல்பட்டு வந்தது. இதற்கிடையே ஷேக் ஹசீனா அரசு கவிழ்க்கப்பட்டது.
இதில் பாகிஸ்தானின் சதி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு நாங்கள்தான் காரணம் என்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 21 வயதாகும் ஓபல் சுச்சாட்டா கடந்த நான்கு ஆண்டுகளாக மாடலிங் துறையில் இருக்கிறார்.
- தனது வீட்டில் 16 பூனைகளையும் ஐந்து நாய்களையும் வளர்க்கிறார்.
ஐதராபாத்தில் நடந்து வந்த உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நேற்று நடந்தது. இதில் தாய்லாந்து அழகி சுசாதா சுவாங்ஸ்ரீ வென்றார். அவருக்கு ரூ.8.50 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது.
21 வயதாகும் ஓபல் சுச்சாட்டா கடந்த நான்கு ஆண்டுகளாக மாடலிங் துறையில் இருக்கிறார்.
அவர் 2021 ஆம் ஆண்டு மிஸ் ரத்தனகோசின் போட்டியுடன் தனது அழகுப் போட்டி பயணத்தை தொடங்கினார்.
2022 ஆம் ஆண்டு, அவர் மிஸ் யுனிவர்ஸ் தாய்லாந்து போட்டியில் பங்கேற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் விலகியதால், அவர் இரண்டாவது இடத்திற்கு உயர்த்தப்பட்டார்.
ஓபல் சுச்சாட்டாவுக்கு 16 வயதில் மார்பகத்தில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்ற பிறகு அவள் குணமடைந்தாள். அந்த நேரத்தில் தனது உடல் மற்றும் மன நிலையை விவரிக்க முடியாததாக சுச்சாதா கூறினார்.

பெண்களைப் பாதிக்கும் இந்தப் பிரச்சினையை நீக்குவதற்குப் பொது விழிப்புணர்வு அவசியம் என்பதை உணர்ந்த அவர், 'பால் ஃபார் ஹெர்' என்ற பெயரில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
உளவியல் மற்றும் மானுடவியலில் ஆர்வமுள்ள ஓபல், இளம் பெண்களிடையே கல்வியை மேம்படுத்துவதற்காகவும் பணியாற்றுகிறார். சுச்சாதா ஒரு விலங்கு பிரியரும் ஆவார். அவர் தனது வீட்டில் 16 பூனைகளையும் ஐந்து நாய்களையும் வளர்க்கிறார்

தனது வெற்றிக்கான ரகசியத்தை விளக்கிய சுச்சாதா, "எப்போதும் உங்களை நம்புங்கள். உங்கள் முக்கிய மதிப்புகளில் உறுதியாக இருங்கள். நான் என் இலக்கைப் பிடித்துக் கொண்டு என்னை நம்பியதால் இன்று நான் இங்கே இருக்கிறேன்.
இந்தப் பயணத்தில் உங்களை நீங்களே நேசிக்க மறக்காதீர்கள். இது எப்போதும் எளிதானது அல்ல, சில சமயங்களில் சோர்வாகவும் வெறுப்பாகவும் உணரலாம்.
ஆனால் நீங்கள் ஒருபோதும் கைவிடவில்லை என்றால், நீங்கள் விரும்பும் இடத்தை நிச்சயமாக அடைவீர்கள்" என்று அவர் கூறினார்.
- ஊடகங்கள், லாரன்ஸ் அந்த வெற்றியை தனது காதலிக்கு சமர்பித்ததாக புளகாங்கிதத்துடன் செய்தி வெளியிட்டன.
- கடைசியாக அவளை வேறொரு ஆணுடன் படுக்கையில் பார்த்ததாக அவர் வழக்கில் கூறினார்.
கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல் என்ற நபர் வாங்கிய லாட்டரி சீட்டில் 5 மில்லியன் கனடிய டாலர்களை (சுமார் 30 கோடி ரூபாய்) வென்றார்.
அவருக்கு வங்கிக் கணக்கு கூட இல்லாததால், மேற்கு கனடா லாட்டரி கார்ப்பரேஷன் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், பணத்தை தனது காதலி மெக்கேயின் பெயரில் டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்டார்.
இருவரும் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக உறவில் இருந்ததாகவும், அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் கேம்பல் கூறினார்.
ஊடகங்கள், லாரன்ஸ் அந்த வெற்றியை தனது காதலிக்கு சமர்பித்ததாக புளகாங்கிதத்துடன் செய்தி வெளியிட்டன. அதனபின்னும் இருவரும் பொது இடங்களில் ஒன்றாகவே காணப்பட்டனர்.
இந்நிலையில் லாட்டரி வென்ற சில நாட்களுக்குப் பிறகு, மெக்கே காணாமல் போனதாகவும், எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டதாகவும் காம்ப்பெல் குற்றம் சாட்டியுள்ளார்.
கடைசியாக அவளை வேறொரு ஆணுடன் படுக்கையில் பார்த்ததாக அவர் தெரிவித்தார்.
வேறொருவரின் பெயரில் லாட்டரி உரிமை கோருவது குறித்து தனக்கு தவறான ஆலோசனை வழங்கியதாகக் கூறி, லாட்டரி நிறுவனம் மீதும் கேம்பல் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விதியின் விசித்திரமான நாடகம் என்றும் கேம்ப்பெல்லின் வழக்கறிஞர் நொந்துகொண்டார்.
- தண்டவாளத்தில் வேகமாக வந்த ரெயில் இடிபாடுகள், கான்கிரீட் கற்கள் மீது மோதியது.
- இந்த விபத்தில் 70 பேர் படுகாயம் அடைந்தனர்.
ரஷியாவின் பெல்கொரோட் பிராந்தியத்தில் உள்ள கிளி மோவ் நகரத்தில் இருந்து தலைநகர் மாஸ்கோவிற்கு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த ரெயில், பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பில்ஷினோ, வைகோனிச்சி ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது அங்கிருந்த ஒரு பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. மேம்பாலத்தின் இடிபாடுகள், கான்கிரீட் கற்கள் தண்டவாளத்தில் விழுந்தன.
அப்போது தண்டவாளத்தில் வேகமாக வந்த ரெயில் இடிபாடுகள், கான்கிரீட் கற்கள் மீது மோதியது. இதனால் ரெயில் தடம் புரண்டு கவிழ்ந்தது. ரெயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி கவிழ்ந்தது. உடனே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கவிழ்ந்த ரெயில் பெட்டி யில் இருந்த பயணிகளை மீட்டனர். ரெயில் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 7 பேர் பலியானார்கள். 70 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் இந்த ரெயில் கவிழ்ந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு சதி செயல் காரணம் என்று ரஷியா தெரிவித்துள்ளது. மேம்பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இச்சம்பவம் நடந்த பகுதி உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் உக்ரைன் சதிச் செயல் இருக்கலாம் என்று ரஷிய அதிகாரிகள் சந்தே கத்தை எழுப்பியுள்ளனர்.
- அதிபர் டிரம்ப் தனது நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவராக எலான் மஸ்க்கை நியமித்திருந்தார்.
- அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது கெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், இதில் அவருக்கு சிறுநீர்ப்பை பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. இதற்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, நான் எந்த போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை. நான் போதைப் பொருளை பயன்படுத்தியதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது. மருத்துவர் பரிந்துரையின் பேரில், மன அழுத்தத்தில் இருந்து வெளியேறுவதற்காக, கெட்டமைனை சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தினேன்.
அதை ஏற்கனவே எக்ஸ் தளத்தில் கூறி உள்ளேன். தற்போது அதையும் நான் பயன்படுத்துவது கிடையாது என்றார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவராக எலான் மஸ்க்கை நியமித்திருந்தார். அந்த பதவியில் இருந்து சமீபத்தில் எலான் மஸ்க் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நைஜீரியாவின் மோசமான சாலைகளினால் விபத்துக்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
- கடந்த ஆண்டு மட்டும் நைஜீரியாவில் சாலை விபத்துககளினால் 5,421 பேர் உயிரிழந்துள்ளனர்
நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஒரு பஸ்சில் கானோ நகருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கியது.
இதில் 21 தடகள வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து டிரைவரின் சோர்வு அல்லது அதிக வேகத்தின் காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நைஜீரியாவின் மோசமான சாலைகளினாலும் போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் வேகமாக வாகனம் ஓட்டுவதாலும் விபத்துக்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு மட்டும் நைஜீரியாவில் 9,570 சாலை விபத்துககளினால் 5,421 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- புகை பிடிப்பவர் மட்டுமின்றி அதனை சுவாசிப்பவர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது.
- இ-சிகரெட்டுகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாரீஸ்:
ஐரோப்பிய நாடான பிரான்சில் புகை பிடிப்பதால் ஒரு நாளில் சராசரியாக 200 பேர் இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இது புகை பிடிப்பவர் மட்டுமின்றி அதனை சுவாசிப்பவர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. குறிப்பாக குழந்தைகளிடம் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
எனவே குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, பூங்காக்கள் அருகே புகை பிடிப்பதை தடை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் (ஜூலை) 1-ம் தேதி முதல் இந்தத் தடை அமலுக்கு வரும் என சுகாதாரத்துறை மந்திரி கேத்தரின் வவுட்ரின் தெரிவித்தார்.
அதே சமயம், இ-சிகரெட்டுகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.






