search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Presidential poll"

    • பாராளுமன்ற வளாகத்தில் சரத்பவர் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா, மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்தார்.

    ​​குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் நடவடிக்கையில் திரினாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டு வந்தார்.

    இதற்காக அண்மையில் டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை அவர் கூட்டியிருந்தார். இந்த கூட்டத்தில் திமுக உள்பட 21 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.

    இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. எனினும் அவர்கள் போட்டியிட மறுப்பு தெரிவித்தனர். இதேபோல் ஃபரூக் அப்துல்லாவும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தார்.

    இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் இன்று சரத்பவார் தலைமையில எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி கூட்டணியின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவின் பெயர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

    முன்னாள் மத்திய மந்திரியும், பாஜக தலைவர்களில் ஒருவராக இருந்த யஷ்வந்த்சின்கா, அந்த கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் துணைத் தலைவராக அவர் இருந்து வந்தார். குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து அவர் விலகி உள்ளார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தமக்கு கௌரவம் அளித்ததற்காக மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவிப்பதாக தமது டுவிட்டர் பதிவில் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக நான் கட்சியில் இருந்து ஒதுங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

    • இந்த தேர்தலில் வருகிற 29-ந்தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
    • எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளராக யஷ்வந்த் சின்காவின் பெயர் பரிந்துரை.

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந்தேதி முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18-ந்தேதி நடக்கிறது. இதில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி விட்டது. வருகிற 29-ந்தேதி மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகும்.

    எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்காவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பழங்குடியின பெண் அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    எதிர்க் கட்சிகள், கூட்டணி கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் குடியரசுத் தலைவர் தேர்வு தொடர்பாக பாஜக சார்பில் 14 பேர் அடங்கிய மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் நியமிக்கப் பட்டுள்ளார். இந்த குழுவில் 6 மத்திய மந்திரிகள், பாஜக தேசிய செயலாளர்கள் 3 பேர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக வெங்கையா நாயுடு நிறுத்தப்படக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி, 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    • பாராளுமன்ற தேர்தல், பல்வேறு மாநிலத் தேர்தல்கள் குறித்தும் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கொல்கத்தா:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையே, நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் தேசிய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

    ஜனாதிபதி தேர்தலில் மாநில கட்சிகளின் பங்கு அதிகளவில் தேவை என்பதால் மாநில கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் இது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர், தென் மாநிலங்களை ஒன்றிணைத்து சரத்பவாரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி டெல்லி, கேரளா, தமிழகம், ஒடிசா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநில முதல் மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

    அந்தக் கடிதத்தில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஜூன் 15-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    ×