என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சாலையின் நடுவே பெரிய பள்ளம் தோண்ப்பட்டுள்ளது.
    • மழை நீரால் பள்ளம் நிரம்பி கிடப்பதால் அடிக்கடி வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படுவதாக குற்றச்சாட்டு.

    பொதுவாக சாலையில் உள்ள பள்ளத்தால், வாகனங்கள் கவிழ்ந்தால் அரசு மீது குற்றம்சாட்டப்படுவது வழக்கம். சாலை பராமரிப்பு இல்லாத காரணத்தினால்தான் வாகனம் கவிழந்ததாக குற்றம்சாட்டுவார்கள். ஆனால், பீகார் மாநிலத்தில் சாலையில் கவிழ்ந்த காரின் உரிமையாளர், அரசை அவமதிப்பதற்கான சதி எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை பீகார் மாநிலத்தின் பாட்னாவில், ஐந்து பேருடன் சென்ற சொகுசு கார், மழை வெள்ளம் குளம் போல் தேங்கி நின்ற சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆனால் காரில் இருந்த ஐந்து பேரும் காயமின்றி உயிர் தப்பினர். காரை ஓட்டு வந்தவர் பெண். இவர்தான் அரசை அவமதிப்பதற்கான சதி எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "நாங்கள் எல்லோரையும் தொடர்பு கொண்டோம். டிம் உடன் பேசினோம். அவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரசை அவமதிப்பதற்காக சதி செய்யப்பட்டதுதான் இந்த பள்ளம் எனக் கூறினார்" எனத் தெரிவித்தார்.

    மேலும், அதிகாரிகள் குழியை தோண்டி, 20 நாட்களாக கவனிக்காமல் விட்டுவிட்டனர். தற்போது மழைக்காலம். ஐந்து பேர் காரில் இருந்தோம். யாராவது ஒருவர் உயிரிழந்திருந்தால், யார் பொறுப்பு?. அங்கு பேரி கார்டு கிடையாது. எங்கள் கார் விழுந்த அதேநேரத்தில், பைக் ஒன்றும் விழுந்தது. ஒவ்வொரு நாளும் இந்த குழியில் தினமும் யாராவது ஒருவர் விழுவதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்" என்றார்.

    • ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் தொடர் 5 பதக்கங்களை இந்தியா வென்றது.
    • இந்தியா பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

    73-வது ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் தொடர் செப்டம்பர் 13 முதல் 21 வரை சீனாவின் பெய்டைஹேயில் நடைபெற்றது. இந்த சாம்பியன்ஷிப் டிராக் மற்றும் ரோடு போட்டிகளை உள்ளடக்கியது. இதில் கொலம்பியா, சீன தைபே, ஸ்பெயின், இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, சிலி, எக்குவடார், ஜெர்மனி, பராகுவே, சீனா, தென் கொரியா, பெல்ஜியம் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனை பங்கேற்றனர்.

    இந்த தொடரின் முடிவில் ஒட்டுமொத்தமாக 5 பதக்கங்களை இந்தியா வென்றது. அதில் 3 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் (வெள்ளிப் பதக்கங்கள் இல்லை) ஆகும். இதனால் பதக்கப் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்தது.

    இதன்மூலம் உலக வேக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

    • நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
    • சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தார்.

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகிய முக்கிய தலைவர்களை நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளார்.

    சேலத்தில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்த நிலையில் இன்று டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.

    மேலும், தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள தனது தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பாகவும், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாம் வாங்குவது சுதேசி (இந்திய தயாரிப்பு பொருட்கள்) என்று பெருமையுடன் கூறுவோம்.
    • நாம் விற்பது சுதேசி என்று பெருமையுடன் கூறுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    நவராத்திரி மற்றும் பண்டிகைக்கால தொடக்கத்தை நாடு முழுவதும் கொண்டாடும் வேளையில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகை அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம் எழுதியுள்ளார்.

    ஜிஎஸ்டி 2.0 மூலம் இந்த பண்டிகை கால சீசன் கூடுதல் மகிழ்ச்சியை கொண்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜிஎஸ்டி வரிகள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுள்ளது. இதன்மூலம் குறையும் பொருட்களின் விலை, மக்களின் சேமிப்பு குறித்து விரைவாக குறிப்பிட்டுள்ளார்.

    அத்துடன், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்குமாறு கடைக்காரர்களையும், வர்த்தகர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் வாங்குவது சுதேசி (இந்திய தயாரிப்பு பொருட்கள்) என்று பெருமையுடன் கூறுவோம். நாம் விற்பது சுதேசி என்று பெருமையுடன் கூறுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கு அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
    • இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.

    சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழக அரசு முமொழிக் கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டும் கல்வி நிதி வழங்க முடியும்" என்று பேசினார்.

    அவரது கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்," தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கைதான் காரணம்.

    இந்த இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்" என்றார்.

    • 1,231 செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கியதை முதலமைச்சர் குறிப்பிட்டு பதிவு.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக விரைவில் 2,417 செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் தேர்ச்சி பெற்ற 1,231 செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கியதை முதலமைச்சர் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் தேர்ச்சி பெற்று, மக்களுக்குச் சேவையாற்றவுள்ள 1,231 கிராம சுகாதாரச் செவிலியர்களுடன்!

    மேலும் 2,417 காலிப் பணியிடங்களும் விரைவில் #MRB மூலம் நிரப்பப்படும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • தேர்தல் வந்தா போதும்ய்யா.. அவன் அவன் ரோட்ல வந்துடுறான். அவன் அவன் இஷ்டத்துக்கு பேசுறான்.
    • நாங்கள் மட்டும் அவர்களுக்கு பதிலே பேசக் கூடாதாம்.

    காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழகத்தை தலை குனிய விடமாட்டோம் தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் டெக்ஸ்டைல்ஸ் துறை அமைச்சர் ஆர். காந்தி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் வந்தா போதும்ய்யா.. அவன் அவன் ரோட்ல வந்துடுறான். அவன் அவன் இஷ்டத்துக்கு பேசுறான். எங்களுக்கு கட்டளையிட்டுள்ளனர் தலைமையிலிருந்து. என்ன கட்டளை தெரியுமா? நாங்கள் எல்லாம் அமைச்சர்களாம். நாங்களும் அமைச்சர்கள். நீங்களும் அமைச்கர்கள்தான்.

    நாங்கள் மட்டும் அவர்களுக்கு பதிலே பேசக் கூடாதாம். எங்களுக்கு நிஜமாக இந்த கட்டளை. நேற்று கூட வாட்ஸ்அப்பில் போட்டிருக்கிறார்கள். அவர்கள் எது வேண்டுமென்றாலும் பேசிக்கிட்டு போவார்கள். நாங்கள் எதுவும் பேசவில்லை. அது கூட கரெக்ட்தான். தெருவுல நாய் குலைக்குது, அது பின்னாடி நாம் போக முடியுமா? இல்ல.

    என்னுடைய நெசவுத்துறையில் அரசு ஏராளமா செய்திருக்கிறது. யார் யாரோ வந்து என்னமும் பேசுங்கள். ஒன்னும் வேலைக்காகாது. யாரும் முதல்வரை தொட்டுக்கூட பார்க்க முடியாது.

    இவ்வாறு அமைச்சர் ஆர். காந்தி பேசினார்.

    • கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழக அரசு திட்டங்களில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது.
    • முதலமைச்சர் திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பாக செய்திருக்கிறார்.

    தமிழக அமைச்சர் கே.என். நேரு இன்று திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழக அரசு திட்டங்களில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது. அன்றைய மாவட்ட ஆட்சியர் இதை சொன்னார். அதற்கான விளக்கங்களையும் நாங்கள் தந்திருக்கிறோம். திருச்சி வளர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை திருச்சியில் உள்ள நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வோம். மற்றவர்கள் சொன்னால்?.

    நாங்கள் வளர்ந்திருக்கிறோம். முதலமைச்சர் திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பாக செய்திருக்கிறார். அதை வைத்து துணிந்து மக்களிடம் செல்வோம். தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு மணப்பாறை சிப்காட்டில் புதிய நிறுவனம் வரப்போகிறது. அந்த நிறுவனம் அமைந்த பிறகு, திருச்சி முகமே மாறும் என தொழில் அதிபர் சொல்லியிருக்கிறார்கள். அரசு அதிகாரிகளும் சொல்லியிருக்கிறார்கள்.

    2026-ல் நாங்கள்தான் நிற்கிறோம், நாங்கள்தான் ஜெயிப்போம். தளபதி மீண்டும் முதல்வர் ஆவார். டெல்டாவில் மிகவும் அதிகமாக தொகுதிகளை வென்று கொடுப்போம்.

    இவ்வாறு கே.என். நேரு தெரிவித்தார்.

    • 4 அணிகளும் ஒரு போட்டியில் விளையாடி உள்ளனர்.
    • பாகிஸ்தான் அணி ரன் ரேட் அடிப்படையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் வங்கதேசம்- இலங்கை அணிகள் மோதின. இதில் வங்கதேசம் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 4 அணிகளும் ஒரு போட்டியில் விளையாடி உள்ளனர். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் 1 வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளனர். ரன்ரேட் அடிப்படையில் இந்தியா (+0.689) முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் வங்கதேசம் அணி (+0.121) உள்ளது.

    தோல்வியடைந்த இலங்கை, பாகிஸ்தான் அணிகள் ரன் ரேட் அடிப்படையில் 3-வது 4-வது இடங்களில் உள்ளது. பாகிஸ்தான் அணி ரன் ரேட் அடிப்படையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    இட்லி கடை வரும் அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும்.

    தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

    படத்திற்கான புரோமோசன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெயிலர் பிரமாண்டமாக நடைபெற்றது.

    படத்தின் டிரெயிலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், உலகளவில் வெளியாகும் இட்லி கடை படத்திற்கு யு சான்றிதழை தணிக்கை குழு வழங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும்.
    • வரும் தேர்தலில் திமுக அரசின் திருட்டுத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளை குறைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி இன்று காலை நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ஜி.எஸ்.டி வரிக்குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அரசின் சார்பில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவை செய்தியாக ஒலிபரப்பாகி வருகின்றன. ஆவின் பால்பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை; இது மக்களை ஏமாற்றும் முயற்சி என்பது தான் உண்மை.

    ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்றவாறு பால் பொருள்களின் விலை குறைக்கப்பட வேண்டும். ஆனால், ஆவின் நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, ஆவின் பால் பொருள்களின் அதிகபட்ச விற்பனை விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாத ஆவின் நிறுவனம், வரி எந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதோ, அதற்கு ஏற்றவாறு அடிப்படை விலையை உயர்த்தியுள்ளது.

    எடுத்துக்காட்டாக ஒரு கிலோ நெய்யின் அதிகபட்சம் விற்பனை விலை ரூ.700. இதில் அடிப்படை விலை ரூ.625. 12% ஜி.எஸ்.டி வரி ரூ.75 ஆகும். ஆவின் நெய் மீதான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மதிப்பு ரூ.31 மட்டும் தான். அதன்படி ஆவின் நெய் ஒரு கிலோ ரூ.656-க்கும் மட்டுமே விற்கப்பட வேண்டும். அமுல் , நந்தினி போன்ற பொதுத்துறை பால் நிறுவனங்கள் இந்த அடிப்படையில் தான் விலைக்குறைப்பு செய்துள்ளன. ஆனால், ஆவின் நிறுவனமோ ஒரு கிலோ நெய்யின் அடிப்படை விலையை ரூ.625-லிருந்து ரூ.669 ஆக உயர்த்தி அத்துடன் ரூ.31 ஜி.எஸ்.டி விலை சேர்த்து அதிகபட்ச விலையாக ரூ.700 நிர்ணயித்துள்ளது.

    அதே நேரத்தில் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் இந்த நாளில் விலையை குறைத்ததாகக் கணக்குக் காட்டும் நோக்குடன் இன்று முதல் நவம்பர் 30 வரை ஒரு கிலோ நெய்க்கு ரூ.40 தள்ளுபடி வழங்குகிறது. இந்த தள்ளுபடியும் கூட ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றுக்கு குறைந்த அளவில் தரப்படுகிறதே தவிர, பிற பால் பொருள்களுக்கு தரப்படவில்லை. அவை அதிக விலைக்குத் தான் விற்பனை செய்யப்படுகின்றன.

    நவம்பர் மாதத்துடன் இந்த தள்ளுபடி ரத்து செய்யப்படும் நிலையில், திசம்பர் மாதம் முதல் ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்த்தப்படும். திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும். இதன் மூலம் மக்களை ஏமாற்றி விடலாம் என்று திமுக அரசு நினைத்தால், அவர்களுக்குத் தான் தோல்வி கிடைக்கும். வரும் தேர்தலில் திமுக அரசின் திருட்டுத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    • வார தொடக்க நாளான இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
    • புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சி.

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது.

    இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    வார தொடக்க நாளான இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,360-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,880-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் இன்று ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்து புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.83,440ஆக விற்பனையாகிறது.

    காலையில் ஏற்கனவே ரூ.560 உயர்ந்த நிலையில், பிற்பகலில் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.

    அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.83,440ஆக உயர்ந்து விற்பனையாகிறது.

    ×