என் மலர்
நீங்கள் தேடியது "அன்பில் மகேஷ் பொய்யமொழி"
- மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கு அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
- இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.
சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழக அரசு முமொழிக் கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டும் கல்வி நிதி வழங்க முடியும்" என்று பேசினார்.
அவரது கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்," தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கைதான் காரணம்.
இந்த இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்" என்றார்.
- தமிழகத்தில் இடைநிற்றல் 7.7 சதவீதமாக குறைத்துள்ளோம்.
- காலை உணவு திட்டத்தை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் இன்று நிருபர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக பள்ளிக்கல்வி துறை நலிவடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் பல தொழில்நுட்பங்களை கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படுகிறது. தமிழக மாணவர்கள் உலக அளவில் சாதனை புரிந்து வருகிறார்கள.
தமிழகத்தில் தொடக்க கல்வி அளவில் இடைநிற்றல் இல்லாத நிலைதான் நிலைமை வருகிறது. மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய அளவில் இடைநிற்றல் சதவீதம் 14 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் இடைநிற்றல் 7.7 சதவீதமாக குறைத்துள்ளோம்.
மாநில கல்வி கொள்கையை பொறுத்தவரை அனைவருக்குமான கல்வியை கொண்டு சேர்த்துள்ளோம். 13 ஆண்டுகளுக்குப் பிறகு இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி துறையில் காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் செயல்பட்டு வருகிறோம். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறோம்.
பள்ளி கட்டிடங்களை சீரமைத்து வருகிறோம் பள்ளி கட்டிடங்கள் இல்லாத இடங்களில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இப்படி இருக்க கூடிய நிலையில் எதை வைத்து அன்புமணி ராமதாஸ் பள்ளிக்கல்வித்துறை நலிவடைந்துள்ளதாக கூறுகிறார் என்பது தெரியவில்லை. அதை அவர் விளக்க வேண்டும்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. காலை உணவு திட்டத்தை ஜனாதிபதி பாராட்டியுள்ளார். அரசியல் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்திற்காக பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்க மறுத்து வரும் நிலையில் அதற்காகத்தான் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டுமே தவிர நம் தலையில் நாமே மண்ணள்ளி போட்டுக்கொள்ளும் வகையில் அன்புமணி ராமதாஸ் பள்ளிக்கல்வித்துறை நலிவடைந்துள்ளது என்கிற கருத்தை கூறக்கூடாது.
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் கல்வி சார்ந்து விமர்சனங்களை வைக்கும் போது அதில் உண்மைத் தன்மை இருந்தால் அது குறித்து நடவடிக்கை எடுப்போம். பள்ளி கல்வித்துறை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் வைக்கும் விமர்சனங்களையும் கண்டனங்கள் குறித்தும் எங்களுடைய ஆய்வுக்கூட்டங்களில் விவாதிப்போம்.
தவறு இருந்தால் நிச்சயமாக அதை திருத்திக் கொள்வோம். பள்ளி மாணவர்களுக்கு போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வை தொடர்ந்து பல்வேறு முறைகளில் வழங்கி வருகிறோம்.
ஆம்புலன்ஸ் என்பது உயிர் காக்கக்கூடியது. அதனுடைய முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கக் கூடாது. அவர் பிரசாரக் கூட்டத்தில் நாங்கள் ஏன் ஆம்புலன்ஸை அனுப்பி வைக்கப் போகிறோம்? முன்னாள் முதல்வராக இருந்தவர் இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைக்க கூடாது.
இவ்வாஅ அவர் கூறினார்.
- எல்லோரும் படிக்க வேண்டும் என்பது திராவிட மாடல், இன்னார்தான் படிக்க வேண்டும் என்பது ஆரிய பாஜக மாடல்.
- மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை இடஒதுக்கீட்டை சிதைத்துவிடும்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய தேசிய கல்விக் கொள்கை- 2020 எனும் மதயானை புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எழுதிய 'தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை' புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"
நாட்டில் கல்வி உள்ளிட்ட அனைத்தையும் காவி மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது" என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
புதிய தேசிய கல்விக் கொள்கை எனும் மதயானை தமிழ்நாட்டை நாசப்படுத்திட அனுமதிக்க மாட்டோம். கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை புதிய தேசிய கல்விக் கொள்கையால் நாசப்படுத்திட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்து நிற்போம். எல்லோரும் படிக்க வேண்டும் என்பது திராவிட மாடல், இன்னார்தான் படிக்க வேண்டும் என்பது ஆரிய பாஜக மாடல்.
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை இடஒதுக்கீட்டை சிதைத்துவிடும். தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளையும் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை சிதைத்து விடும்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான போராட்டம் தொடரும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை என்றால் கல்வி எட்டாக்கனியாகிவிடும்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் ரூ.2,158 கோடியை தராமல் மத்திய அரசு அடம்பிடிக்கிறது. நாட்டிற்கே வழிகாட்டியாக இந்த விஷயத்திலும் உச்சநீதிமன்றம் சென்று வெற்றி பெறுவோம்.
இது புத்தக வெளியீட்டு விழா என்பதை விடவும் உரிமைக்குரல் எழுப்பும் விழா என்பதே சரியாக இருக்கும். மதயானை நூலாசிரியர் அன்பில் மகேஷை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
தேசிய கல்விக்கொள்கையின் பாதிப்புகள் என்ன என்பது மதயானை நூலில் எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்த ஒரே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலமாக மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி, சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தேர்விற்கான தேதி அறிவித்த பிறகு தலைைைமயாசிரியர்களை சந்தித்து அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
- மழைக்காலம் என்பதால் பள்ளி உட்டகட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுக்கா தளி அருகே, மதகொண்டப்பள்ளி மாதிரிப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை சார்பாக, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர மீளாயவுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கலந்து கொண்டு துவக்கி வைத்து அவர் பேசியதாவது:-
முதலமைச்சர் பள்ளி கல்வித்துறை, சுகாதாரத்துறைக்கு அதிய முக்கியதுவம் அளித்து போதிய நிதி ஒதுக்கிடு செய்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தி உள்ளார்கள். பொதுத் தேர்விற்கான தேதி அறிவித்த பிறகு 18 மாவட்டங்களின் தலைைைமயாசிரியர்களை சந்தித்து அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளிகளையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்களை அன்பாகவும் அதே நேரத்தில் கண்டிப்புடனும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
பொது தேர்வுகள் முடிவுகள் வரும் போது தான் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கல்வி அலுவலர்களின் முழுமையான செயல்பாடுகள் தெரிய வரும். மாணவ மாணவியர்கள் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஊக்கத்துடன் செயல்படுத்த வேண்டும். மழைக்காலம் என்பதால் பள்ளி உட்டகட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து மாணவர்கள் ஆசிரியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பழைய கட்டிடங்களை முழுமையாக அகற்றி புதிய கட்டிடங்கள் கட்ட கருத்துரு தயார் செய்து போதிய நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும். மேலும் காலை உணவு திட்ட செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- கல்வியை வைத்து கருத்துக்களை சொல்லுங்கள்.
- யூகத்தின் அடிப்படையில் போராட்டம் நடத்துவது தேவையற்றது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கலந்து கொண்டார். பின்னர் மணப்பாறையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளர் சீர் மரபினர் பள்ளிகளை இணைப்பை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 24-ந் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லா துறை சார்ந்து இருக்கின்ற பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று 2023-24 ம் ஆண்டு அன்றைக்கு நிதி அமைச்சராக இருந்தவர்கள் ஒரு அறிவிப்பை அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பு வந்த பின் அதற்கு தனி குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறை சார்ந்து குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறை சார்ந்து இருக்கின்ற அமைச்சர்கள் கருத்துக்களை என்னிடம் வழங்கினார். அதுகுறித்து அறிக்கை உள்ளது. ஆனால் அதுகுறித்து எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை.
பல அமைப்புக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இதை எயல்லாம் தொகுத்து முதல்வரிடம் கொடுத்துள்ளோம். இறுதியாக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்கள். ஒரு முடிவை எடுத்த பின் ஆர்ப்பாட்டம், போரட்டம் நடத்தலாம்.
ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் வியூகத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது எந்தவிதத்திலும் சரியானது அல்ல.
கல்வியை வைத்து கருத்துக்களை சொல்லுங்கள். ஆனால் கல்வியை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் முடிவெடுத்த பின் தங்களின் கருத்தக்களை தெரிவிக்கலாமே தவிர யூகத்தின் அடிப்படையில் போராட்டம் நடத்துவது தேவையற்றது என்பது என்னுடைய கருத்து.
அரசு பள்ளிகளில் உள்ள ஐடெக் லேப்களில் தனியாக ஆசிரியர் தேவை என்பதை நானும் உறுதி செய்கிறேன். 3 ஆண்டுகளில் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
மத்திய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய நிதியை தர மறுப்பதுடன் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தருவேன் என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளார்கள்.
இதில் எதிர் கட்சித் தலைவர் எந்த குரலும் கொடுக்காத நிலையில் இறுதி முடிவு எடுக்காத ஒரு விஷயத்திற்கு போராட்டம் என்பது தேவையில்லாதது.
எடப்பாடி பழனிசாமி 2026-ம் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு இப்போதே அரசியல் செய்ய நினைக்கிறார். ஆர்ப்பாட்டம்-பேராட்டத்தை கைவிடுங்கள். தமிழக முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- லேசான வயிறு வலி ஏற்பட்டதாக அமைச்சரின் உதவியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உடல்நிலை சீரானதும் அமைச்சர் அன்பில் மகேஷ் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உணவு ஒவ்வாமை காரணமாக வயிறு வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நிலை சீரானதும் அமைச்சர் அன்பில் மகேஷ் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக தமிழ்நாடு முழுக்க அனைத்து தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில், தொடர் சுற்றுப்பயணத்தின் காரணமாக உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கலாம் என்றும், அதன் காரணமாக லேசான வயிறு வலி ஏற்பட்டதாக அமைச்சரின் உதவியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசுப்பள்ளி பெயர் மாற்றத்திற்காக போராடிய கணேசனுக்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்தார்.
- பெயர் மாற்றத்திற்கான அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் அமைச்சர் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி, 'அரிசன் காலனி' என்ற ஊர்ப்பெயரில் இயங்கி வந்த நிலையில், 'மல்லசமுத்திரம் கிழக்கு' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயர் மாற்றம் செய்தார்
'கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்' என்ற மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வரிகளை குறிப்பிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப்பள்ளியின் பெயரை மாற்றம் செய்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி' எனும் பெயரினை 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில் 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க வெளியிட்டோம்.
தொடர்ந்து இன்று மல்லசமுத்திரம் கிராமத்திற்கு நேரடியாக சென்று 'அரிசன் காலனி' எனும் பெயரினை அழித்து, அரசாணையை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினோம். இதற்காக போராடி வந்த ஊர் பெரியர் திரு.கணேசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம்.
ஊர் மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் திரு.G.அன்பழகன் அவர்களிடம் 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அலைப்பேசி வாயிலாக தெரிவித்தோம். மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்" என்று பதிவிட்டுள்ளார்.
- பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.
- காய்ச்சல் பரவலால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து ஆலோசனைக்கு பின் முடிவு.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் உள்ளிட்ட பொருட்களை வழங்க மறுத்த விவகாரத்தில் இதுவரை 2பேர் கைது செய்யப்பட்டு, 5பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாஞ்சாகுளத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சாதிய பாகுபாடு காட்டப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:
பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும்.
காய்ச்சல் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாநில சுகாதாரத்துறையுடனான ஆலோசனைக்கு பின்னர் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






