என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆம்புலன்ஸ்சின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் இ.பி.எஸ். ஆதாரமற்ற குற்றச்சாட்டு- அன்பில் மகேஷ் கண்டனம்
    X

    ஆம்புலன்ஸ்சின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் இ.பி.எஸ். ஆதாரமற்ற குற்றச்சாட்டு- அன்பில் மகேஷ் கண்டனம்

    • தமிழகத்தில் இடைநிற்றல் 7.7 சதவீதமாக குறைத்துள்ளோம்.
    • காலை உணவு திட்டத்தை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

    தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் இன்று நிருபர்களிடம் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக பள்ளிக்கல்வி துறை நலிவடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் பல தொழில்நுட்பங்களை கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படுகிறது. தமிழக மாணவர்கள் உலக அளவில் சாதனை புரிந்து வருகிறார்கள.

    தமிழகத்தில் தொடக்க கல்வி அளவில் இடைநிற்றல் இல்லாத நிலைதான் நிலைமை வருகிறது. மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய அளவில் இடைநிற்றல் சதவீதம் 14 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் இடைநிற்றல் 7.7 சதவீதமாக குறைத்துள்ளோம்.

    மாநில கல்வி கொள்கையை பொறுத்தவரை அனைவருக்குமான கல்வியை கொண்டு சேர்த்துள்ளோம். 13 ஆண்டுகளுக்குப் பிறகு இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளி கல்வி துறையில் காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் செயல்பட்டு வருகிறோம். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறோம்.

    பள்ளி கட்டிடங்களை சீரமைத்து வருகிறோம் பள்ளி கட்டிடங்கள் இல்லாத இடங்களில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இப்படி இருக்க கூடிய நிலையில் எதை வைத்து அன்புமணி ராமதாஸ் பள்ளிக்கல்வித்துறை நலிவடைந்துள்ளதாக கூறுகிறார் என்பது தெரியவில்லை. அதை அவர் விளக்க வேண்டும்.

    தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. காலை உணவு திட்டத்தை ஜனாதிபதி பாராட்டியுள்ளார். அரசியல் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்திற்காக பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்க மறுத்து வரும் நிலையில் அதற்காகத்தான் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டுமே தவிர நம் தலையில் நாமே மண்ணள்ளி போட்டுக்கொள்ளும் வகையில் அன்புமணி ராமதாஸ் பள்ளிக்கல்வித்துறை நலிவடைந்துள்ளது என்கிற கருத்தை கூறக்கூடாது.

    ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் கல்வி சார்ந்து விமர்சனங்களை வைக்கும் போது அதில் உண்மைத் தன்மை இருந்தால் அது குறித்து நடவடிக்கை எடுப்போம். பள்ளி கல்வித்துறை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் வைக்கும் விமர்சனங்களையும் கண்டனங்கள் குறித்தும் எங்களுடைய ஆய்வுக்கூட்டங்களில் விவாதிப்போம்.

    தவறு இருந்தால் நிச்சயமாக அதை திருத்திக் கொள்வோம். பள்ளி மாணவர்களுக்கு போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வை தொடர்ந்து பல்வேறு முறைகளில் வழங்கி வருகிறோம்.

    ஆம்புலன்ஸ் என்பது உயிர் காக்கக்கூடியது. அதனுடைய முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கக் கூடாது. அவர் பிரசாரக் கூட்டத்தில் நாங்கள் ஏன் ஆம்புலன்ஸை அனுப்பி வைக்கப் போகிறோம்? முன்னாள் முதல்வராக இருந்தவர் இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைக்க கூடாது.

    இவ்வாஅ அவர் கூறினார்.

    Next Story
    ×