என் மலர்
நீங்கள் தேடியது "செவிலியர் பணி"
- 1,231 செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கியதை முதலமைச்சர் குறிப்பிட்டு பதிவு.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக விரைவில் 2,417 செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் தேர்ச்சி பெற்ற 1,231 செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கியதை முதலமைச்சர் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் தேர்ச்சி பெற்று, மக்களுக்குச் சேவையாற்றவுள்ள 1,231 கிராம சுகாதாரச் செவிலியர்களுடன்!
மேலும் 2,417 காலிப் பணியிடங்களும் விரைவில் #MRB மூலம் நிரப்பப்படும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- 126 செவிலியர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகபணியார்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
- அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல் இணைக்க வேண்டும்.
திருப்பூர், ஜன. 17-
மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், 126 செவிலியர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகபணியார்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம்வெளியிட்டுள்ளஅறிக்கையில்கூறியிருப்பதாவது:-மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்பசுகாதார நிலையங்களில், 126 செவிலியர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர் நியமிக்கப்பட உள்ளனர்.
விண்ணப்பங்கள்,category/recruitement என்ற tirupur.nic.in/notice இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு, 50 வயது வரைஉள்ளவர் விண்ணப்பிக்கலாம். இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்தஒரு காலத்திலும் பணி நிரந்தம் செய்யப்படமாட்டாது.
பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். விண்ணப்பபடிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் நிர்வாக செயலாளர்/துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், 147, பூலுவப்பட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் ரோடு, திருப்பூர். என்ற முகவரிக்கு வரும், 30 ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெண் செவிலியர்களுக்கு ரூ.80,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம்
- அயல்நாட்டு வேலைவாய்ப்பு
நாகர்கோவில் : குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சவுதி அரேபியா அமைச்சகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பெண் செவிலியர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பை அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு தேவையான கல்வித்தகுதி 2 வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்.சி. நர்சிங் தேர்ச்சி பெற்ற 21-35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் ஸ்டாப் நர்சு பணிக்காலியிடத்திற்கு தேவைப்படுகிறார்கள்.தேர்வு பெறும் பெண் செவிலியர்களுக்கு ரூ.80,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேலும், டேட்டா புளோ மற்றும் எச்.ஆர்.டி. சான்றி தழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும், மேற்படி பணியாளர்களுக்கு உண வுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பதிவு செய்வதற்கான முகாம் வருகிற 17-ந்தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோணம், நாகர் கோவிலில் வைத்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (95662 39685, 63791 79200), (044-22505886, 044-22502267). இந்த முகாமிற்கு வரமுடியாதவர்கள் தங்களுடைய சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. பதிவு மற்றும் பணி விவரங்களின் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வுபெறும் பணியாளர்களிடமிருந்து சேவை கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாய்ப்பினை விண்ணப்பதாரர்கள் நேரிடையாக முகாமிற்கு வந்து பயன் படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.
- முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் மாநகர நல சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
14 நகர சுகாதார செவிலியர்கள் பணியிடத்துக்கு பி.எஸ்சி.நர்சிங், நர்சிங் மிட்வைப் பயிற்சி, டிப்ளமோ நர்சிங் அன்ட் மிட்வைப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 ஆய்வக அலுவலர், 1 மருத்துவ பணியாளர் பணியிடமும் நிரப்பப்பட உள்ளது.
வருகிற 11-ந் தேதி திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதிவாய்ந்த நபர்கள் இந்த நேர்காணலில் தங்களது அசல் சான்றிதழ், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0421 2240153 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நேர்காணலுக்கு வருபவர்களிடம் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்விச்சான்றிதழ், தமிழ்நாடு மருத்துவ குழும பதிவு சான்றிதழ், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல் சரிபார்க்கப்படும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






