search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சவுதி அரேபியா மருத்துவமனைகளில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் செவிலியர் பணி இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
    X

    சவுதி அரேபியா மருத்துவமனைகளில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் செவிலியர் பணி இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்

    • பெண் செவிலியர்களுக்கு ரூ.80,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம்
    • அயல்நாட்டு வேலைவாய்ப்பு

    நாகர்கோவில் : குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சவுதி அரேபியா அமைச்சகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பெண் செவிலியர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பை அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு தேவையான கல்வித்தகுதி 2 வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்.சி. நர்சிங் தேர்ச்சி பெற்ற 21-35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் ஸ்டாப் நர்சு பணிக்காலியிடத்திற்கு தேவைப்படுகிறார்கள்.தேர்வு பெறும் பெண் செவிலியர்களுக்கு ரூ.80,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேலும், டேட்டா புளோ மற்றும் எச்.ஆர்.டி. சான்றி தழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும், மேற்படி பணியாளர்களுக்கு உண வுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பதிவு செய்வதற்கான முகாம் வருகிற 17-ந்தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோணம், நாகர் கோவிலில் வைத்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (95662 39685, 63791 79200), (044-22505886, 044-22502267). இந்த முகாமிற்கு வரமுடியாதவர்கள் தங்களுடைய சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. பதிவு மற்றும் பணி விவரங்களின் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வுபெறும் பணியாளர்களிடமிருந்து சேவை கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாய்ப்பினை விண்ணப்பதாரர்கள் நேரிடையாக முகாமிற்கு வந்து பயன் படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×