search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
    X

    கோப்புபடம்

    காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

    • 126 செவிலியர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகபணியார்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
    • அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல் இணைக்க வேண்டும்.

    திருப்பூர், ஜன. 17-

    மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், 126 செவிலியர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகபணியார்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

    இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம்வெளியிட்டுள்ளஅறிக்கையில்கூறியிருப்பதாவது:-மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்பசுகாதார நிலையங்களில், 126 செவிலியர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர் நியமிக்கப்பட உள்ளனர்.

    விண்ணப்பங்கள்,category/recruitement என்ற tirupur.nic.in/notice இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு, 50 வயது வரைஉள்ளவர் விண்ணப்பிக்கலாம். இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்தஒரு காலத்திலும் பணி நிரந்தம் செய்யப்படமாட்டாது.

    பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். விண்ணப்பபடிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் நிர்வாக செயலாளர்/துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், 147, பூலுவப்பட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் ரோடு, திருப்பூர். என்ற முகவரிக்கு வரும், 30 ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×