என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இரு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
    • போலியாக புலம்பும் சிலர் இனியாவது உண்மையை உணர்ந்து திருந்த வேண்டும்.

    தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த 2 கப்பல் கட்டும் தளங்கள் அமைக்க ரூ.30,000 கோடி முதலீடு மகிழ்ச்சி அளிக்கிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெிரவித்துள்ளார்.

    இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தொடர்ந்து தமிழகத்தில் முதலீடு செய்யும் பிரதமர் மோடி அரசு!

    தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த இரு கப்பல் கட்டும் தளங்கள் அமைப்பதற்காக 30,000 கோடி ரூபாயை CSL Cochin

    மற்றும் Mazagaon Dock ஆகிய இரு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    முத்துநகராம் தூத்துக்குடிக்கு வருகைபுரிந்து ₹452 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையத்தைப் புதுப்பித்து ₹4,800 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடித்தளமிட்டு இருமாதங்களுக்குள்ளேயே ₹30,000 கோடி மதிப்பில் மேலும் முதலீடு செய்ய முன்வந்துள்ள நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்வதில்லை என்று பொழுது புலர்ந்ததும் போலியாக புலம்பும் சிலர் இனியாவது உண்மையை உணர்ந்து திருந்த வேண்டும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியா கடந்த 4 - 5 வருடங்களாக ஒவ்வொரு துறைகளிலும் பாகிஸ்தானை விட சிறப்பாக விளையாடுகிறது.
    • கிரிக்கெட்டில் வெல்வதும் தோற்பதும் விளையாட்டின் அங்கம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

    ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 172 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 7 போட்டிகளில் இந்தியா 7 தொடர் வெற்றிகளை பெற்றுள்ளது. கடைசியாக இதே துபாயில் 2021 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது.

    அதனை தொடர்ந்து 2022, 2023, 2024, 2025 வருடங்களில் நடைபெற்ற ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பைகளில் இந்தியா தொடர்ந்து 7-வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது.

    இந்நிலையில் கடந்த 5 வருடங்களாகவே பாகிஸ்தான் அணி 3 துறைகளிலும் இந்தியாவிடம் அடிவாங்கி படுதோல்விகளை சந்திப்பதாக முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் வேதனை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் என்னுடைய இதயத்தில் இருந்து பேசப்போகிறேன். தற்போதைய பாகிஸ்தான் அணியைப் பார்ப்பது கடினமாக இருக்கிறது. ஒரு முன்னாள் வீரராக கிரிக்கெட்டில் வெல்வதும் தோற்பதும் விளையாட்டின் அங்கம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

    ஆனால் இந்தியா கடந்த 4 - 5 வருடங்களாக ஒவ்வொரு துறைகளிலும் பாகிஸ்தானை விட சிறப்பாக விளையாடுகிறது. இந்தியாவுக்கு எதிராக நாம் அங்கேயும் இங்கேயும் ஓரிரு போட்டிகளில் மட்டுமே வென்றோம். உண்மையில் இந்தியா அற்புதமாக விளையாடுகிறார்கள். ஒரு போட்டியில் சில கேட்ச்கள் தவற விடப்படுவது பரவாயில்லை. ஆனால் முதல் 10 ஓவரில் 91 ரன்கள் எடுத்த உங்களால் 200 தொட முடியவில்லை என்பதைப் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை.

    என்று கூறினார்.

    • ஆவின் விற்பனை மூலம் வருகின்ற வருவாய் 90% க்கு மேல் பால் உற்பத்தியாளர்களுக்கே வழங்கப்படுகிறது.
    • பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் நலன் சார்ந்த பால் உபபொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாகவும், பண்டிகை கால சலுகையாகவும் ஆவின் நெய், பனீர் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஆவினின் அனைத்து வகை நெய்யும் லிட்டருக்கு ரூ.40 வரை குறைத்து சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    தனியார் நிறுவனத்தைவிட ரூ.50 வரை குறைவாக 500 கிராம் வெண்ணெய் ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    200 கிராம் பனீர் சலுகை விலையில் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆவின் நிறுவனத்தில் ஜி.எஸ்.டி வரி குறைப்பின் காரணமாகவும் பண்டிகை கால சலுகையாகவும், ஒரு லிட்டர் ஜார் நெய் ரூ. 690/- லிருந்து ரூ.650/-குறைக்கப்பட்டுள்ளது.

    ரூ.120/-க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பனீர் ரூ.110/-க்கும், ரூ.300/- க்கு விற்பனை செய்யப்பட்ட 1/ 2 கிலோ பனீர் ரூ.275/- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்திய அளவில் கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களை காட்டிலும் ஆவின் நிறுவளம் பொதுமக்கள் நலன் கருதி மிகவும் குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் உப பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

    மேலும், ஆவின் விற்பனை மூலம் வருகின்ற வருவாய் 90% க்கு மேல் பால் உற்பத்தியாளர்களுக்கே வழங்கப்படுகிறது.

    மேலும் அவ்வப்பொழுது சந்தை நிலவரத்திற்க்கு ஏற்றவாறு இதர கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் போல் பால் மற்றும் பால் பொருட்களின் விNைDI மாற்றியமைக்காமல், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் நலன் சார்ந்த பால் உபபொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    ஆவின் நிறுவனம் பொதுமக்கள் நலன் கருதி குறைந்த விலையில் uns மற்றும் பால் உப பொருட்களை கர்வோருக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசால் கடந்த 2021 ஆம் ஆண்டு அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3/-குறைந்து ஆணையிட்டது. இதன் மூலம் தினமும் சுமார் 1.5 கோடி நுகர்வோர் பயனடைந்து வருகின்றனர்.இதுவரை பொதுமக்கள்கு 1073/- கோடியை சேமித்துள்ளனர்.

    2023 ஆம்ஆண்டுமாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள். பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு ஊக்கத்தொகையாக லிட்டர் ஒன்றுக்கு ரூபாம் 3 வழக உத்தரவிட்டுள்ளார்.

    இதன் மூலம் சுமார் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுகின்றனர். 18.12.2023 முதல் இதுவரை ரூ 635 கோடி தமிழ்நாடு அரசால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசால் இணையம், ஒன்றியங்கள் மற்றும் சங்கங்களின் நிதி கட்டமைப்பை வலுபடுத்திட சுமார் 675 கோடி ரூபாயை பங்கு மூலதனமாக வழங்கப்பட்டுள்ளது.

    தற்சமயம் ஒன்றிய அரசாங் GST வரி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் பால் மற்றும் பால் உபபொருட்களை விற்பனை செய்வதாலும் மற்றும் பால் தரத்திற்கேற்ப உரிய விலையில் பால் கொள்முதல் செய்வதாலும் ஆவின் நிறுவனம் நிதி சுமையை கவனத்தில் கொண்டு சந்தையில் குறைவான விலையில் தாந்துடன் அனைத்து பால் பொருட்களையும் விற்பனை செய்துவருகிறது.

    தற்பொழுது ஜிஎஸ்டி (GST) சதவிகிதகுறைப்பின் காரணமாகவும் மற்றும் பண்டிகை கால சலுகையாகவும் ஆவினின் அனைத்து வகையான நெய்களுக்கும் லிட்டர் ஒன்றுக்கு சுமார் 40/- ரூபாய் விலை குறைத்து பொது மக்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

    மேலும் வெண்ணெய் விலையானது இந்தியாவிலுள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை விட ரூ.10/- முதல் ரூ.50/- வரை குறைவான விலையில் (அரை கிலோ வெண்ணெய் ரூபாய் 275/- ) ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

    மேலும் ஆவின் 200 கிராம் பனீர் ரூபாய் 110/- என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • எனது குழந்தைக்காக எந்த நிலைக்கும் சென்றும் போராடுவேன். இது மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தை.
    • இரண்டு வருடம் வாழ்ந்து இருக்கிறோம். அது பற்றி தெளிவாக விளக்கம் அளித்துள்ளேன்.

    மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருணம் செய்து ஏமாற்றி விட்டார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என ஜாய் கிரிசில்டா போலீஷ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். மேலும், சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த படங்களையும் பகிர்ந்திருந்தார்.

    காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் அவருடைய புகார் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. அந்த துணை ஆணையர் வனிதா இன்று ஜாய் கிரிசில்டாவிடம் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் உடன் தன்னுடைய இரண்டு வருட வாழ்க்கை குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கமிஷன் அலுவலகத்தில் கொடுத்த புகாரை இங்கே அனுப்பி வைத்துள்ளனர். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். முதல் திருமணம் முடிந்த நிலையில் என்னை திருமணம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. அதனால்தான் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என குற்றம்சாட்டுகிறேன். புகாரை வாபஸ் பெற வேண்டும் என யாரும் என்னை மிரட்டவில்லை. அது தொடர்பாக அணுகவில்லை. எனது குழந்தைக்கு மிரட்டல் இருப்பதாக கேள்ளவிப்பட்டேன். அதற்கான பாதுகாப்பை எடுப்பார்கள்.

    எனது குழந்தைக்காக எந்த நிலைக்கும் சென்றும் போராடுவேன். இது மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தை. அவர் வெளியே ஜாலியாக சுற்றலாம். நான் போராடுவேன். புகார் நான் கொடுத்துள்ளதால் என்னை முதலில் அழைத்து விசாரணை நடத்தினார்கள். பின்னர், மாதம்பட்டி ரங்கராஜை அழைத்து விசாரணை நடத்துவார்கள். கண்டிப்பாக அவர் மீது எப்ஐஆர் போடுவார்கள். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். நடவடிக்கை எடுக்கப்படும்.

    இரண்டு வருடம் வாழ்ந்து இருக்கிறோம். அது பற்றி தெளிவாக விளக்கம் அளித்துள்ளேன். இதனால் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பாசிட்டிவ் ஆன ரிப்ளை கொடுத்துள்ளனர். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். என்ன மாதிரியான ஆதாரங்கள் கொடுத்துள்ளேன் என்பதை தற்போது கூற இயலாது.

    இவ்வாறு ஜாய் கிரிசில்டா தெரிவித்தார்.

    • இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவது உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
    • அமெரிக்கா, எங்களின் முன்மாதிரியைப் பின்பற்றி ஒப்பந்தத்தின் வரம்புகளைப் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

    அமெரிக்கா- ரஷியா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்தது. இருந்தபோதிலும், மேலும் ஒரு வருடத்திற்கு அணு ஆயுத வரம்புகளை கடைபிடிப்போம் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

    அத்துடன், இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவது உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்கா, எங்களின் முன்மாதிரியைப் பின்பற்றி ஒப்பந்தத்தின் வரம்புகளைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். என்றார்.

    ரஷிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்போது புதின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • சாலையின் நடுவே பெரிய பள்ளம் தோண்ப்பட்டுள்ளது.
    • மழை நீரால் பள்ளம் நிரம்பி கிடப்பதால் அடிக்கடி வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படுவதாக குற்றச்சாட்டு.

    பொதுவாக சாலையில் உள்ள பள்ளத்தால், வாகனங்கள் கவிழ்ந்தால் அரசு மீது குற்றம்சாட்டப்படுவது வழக்கம். சாலை பராமரிப்பு இல்லாத காரணத்தினால்தான் வாகனம் கவிழந்ததாக குற்றம்சாட்டுவார்கள். ஆனால், பீகார் மாநிலத்தில் சாலையில் கவிழ்ந்த காரின் உரிமையாளர், அரசை அவமதிப்பதற்கான சதி எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை பீகார் மாநிலத்தின் பாட்னாவில், ஐந்து பேருடன் சென்ற சொகுசு கார், மழை வெள்ளம் குளம் போல் தேங்கி நின்ற சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆனால் காரில் இருந்த ஐந்து பேரும் காயமின்றி உயிர் தப்பினர். காரை ஓட்டு வந்தவர் பெண். இவர்தான் அரசை அவமதிப்பதற்கான சதி எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "நாங்கள் எல்லோரையும் தொடர்பு கொண்டோம். டிம் உடன் பேசினோம். அவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரசை அவமதிப்பதற்காக சதி செய்யப்பட்டதுதான் இந்த பள்ளம் எனக் கூறினார்" எனத் தெரிவித்தார்.

    மேலும், அதிகாரிகள் குழியை தோண்டி, 20 நாட்களாக கவனிக்காமல் விட்டுவிட்டனர். தற்போது மழைக்காலம். ஐந்து பேர் காரில் இருந்தோம். யாராவது ஒருவர் உயிரிழந்திருந்தால், யார் பொறுப்பு?. அங்கு பேரி கார்டு கிடையாது. எங்கள் கார் விழுந்த அதேநேரத்தில், பைக் ஒன்றும் விழுந்தது. ஒவ்வொரு நாளும் இந்த குழியில் தினமும் யாராவது ஒருவர் விழுவதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்" என்றார்.

    • ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் தொடர் 5 பதக்கங்களை இந்தியா வென்றது.
    • இந்தியா பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

    73-வது ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் தொடர் செப்டம்பர் 13 முதல் 21 வரை சீனாவின் பெய்டைஹேயில் நடைபெற்றது. இந்த சாம்பியன்ஷிப் டிராக் மற்றும் ரோடு போட்டிகளை உள்ளடக்கியது. இதில் கொலம்பியா, சீன தைபே, ஸ்பெயின், இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, சிலி, எக்குவடார், ஜெர்மனி, பராகுவே, சீனா, தென் கொரியா, பெல்ஜியம் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனை பங்கேற்றனர்.

    இந்த தொடரின் முடிவில் ஒட்டுமொத்தமாக 5 பதக்கங்களை இந்தியா வென்றது. அதில் 3 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் (வெள்ளிப் பதக்கங்கள் இல்லை) ஆகும். இதனால் பதக்கப் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்தது.

    இதன்மூலம் உலக வேக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

    • நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
    • சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தார்.

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகிய முக்கிய தலைவர்களை நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளார்.

    சேலத்தில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்த நிலையில் இன்று டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.

    மேலும், தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள தனது தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பாகவும், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாம் வாங்குவது சுதேசி (இந்திய தயாரிப்பு பொருட்கள்) என்று பெருமையுடன் கூறுவோம்.
    • நாம் விற்பது சுதேசி என்று பெருமையுடன் கூறுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    நவராத்திரி மற்றும் பண்டிகைக்கால தொடக்கத்தை நாடு முழுவதும் கொண்டாடும் வேளையில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகை அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம் எழுதியுள்ளார்.

    ஜிஎஸ்டி 2.0 மூலம் இந்த பண்டிகை கால சீசன் கூடுதல் மகிழ்ச்சியை கொண்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜிஎஸ்டி வரிகள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுள்ளது. இதன்மூலம் குறையும் பொருட்களின் விலை, மக்களின் சேமிப்பு குறித்து விரைவாக குறிப்பிட்டுள்ளார்.

    அத்துடன், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்குமாறு கடைக்காரர்களையும், வர்த்தகர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் வாங்குவது சுதேசி (இந்திய தயாரிப்பு பொருட்கள்) என்று பெருமையுடன் கூறுவோம். நாம் விற்பது சுதேசி என்று பெருமையுடன் கூறுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கு அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
    • இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.

    சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழக அரசு முமொழிக் கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டும் கல்வி நிதி வழங்க முடியும்" என்று பேசினார்.

    அவரது கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்," தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கைதான் காரணம்.

    இந்த இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்" என்றார்.

    • 1,231 செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கியதை முதலமைச்சர் குறிப்பிட்டு பதிவு.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக விரைவில் 2,417 செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் தேர்ச்சி பெற்ற 1,231 செவிலியர்களுக்கு பணி ஆணை வழங்கியதை முதலமைச்சர் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் தேர்ச்சி பெற்று, மக்களுக்குச் சேவையாற்றவுள்ள 1,231 கிராம சுகாதாரச் செவிலியர்களுடன்!

    மேலும் 2,417 காலிப் பணியிடங்களும் விரைவில் #MRB மூலம் நிரப்பப்படும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • தேர்தல் வந்தா போதும்ய்யா.. அவன் அவன் ரோட்ல வந்துடுறான். அவன் அவன் இஷ்டத்துக்கு பேசுறான்.
    • நாங்கள் மட்டும் அவர்களுக்கு பதிலே பேசக் கூடாதாம்.

    காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழகத்தை தலை குனிய விடமாட்டோம் தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் டெக்ஸ்டைல்ஸ் துறை அமைச்சர் ஆர். காந்தி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் வந்தா போதும்ய்யா.. அவன் அவன் ரோட்ல வந்துடுறான். அவன் அவன் இஷ்டத்துக்கு பேசுறான். எங்களுக்கு கட்டளையிட்டுள்ளனர் தலைமையிலிருந்து. என்ன கட்டளை தெரியுமா? நாங்கள் எல்லாம் அமைச்சர்களாம். நாங்களும் அமைச்சர்கள். நீங்களும் அமைச்கர்கள்தான்.

    நாங்கள் மட்டும் அவர்களுக்கு பதிலே பேசக் கூடாதாம். எங்களுக்கு நிஜமாக இந்த கட்டளை. நேற்று கூட வாட்ஸ்அப்பில் போட்டிருக்கிறார்கள். அவர்கள் எது வேண்டுமென்றாலும் பேசிக்கிட்டு போவார்கள். நாங்கள் எதுவும் பேசவில்லை. அது கூட கரெக்ட்தான். தெருவுல நாய் குலைக்குது, அது பின்னாடி நாம் போக முடியுமா? இல்ல.

    என்னுடைய நெசவுத்துறையில் அரசு ஏராளமா செய்திருக்கிறது. யார் யாரோ வந்து என்னமும் பேசுங்கள். ஒன்னும் வேலைக்காகாது. யாரும் முதல்வரை தொட்டுக்கூட பார்க்க முடியாது.

    இவ்வாறு அமைச்சர் ஆர். காந்தி பேசினார்.

    ×