என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகாரில் 6 மணி நேரம் விசாரணை: நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்- ஜாய் கிரிசில்டா
    X

    மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகாரில் 6 மணி நேரம் விசாரணை: நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்- ஜாய் கிரிசில்டா

    • எனது குழந்தைக்காக எந்த நிலைக்கும் சென்றும் போராடுவேன். இது மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தை.
    • இரண்டு வருடம் வாழ்ந்து இருக்கிறோம். அது பற்றி தெளிவாக விளக்கம் அளித்துள்ளேன்.

    மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருணம் செய்து ஏமாற்றி விட்டார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என ஜாய் கிரிசில்டா போலீஷ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். மேலும், சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த படங்களையும் பகிர்ந்திருந்தார்.

    காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் அவருடைய புகார் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. அந்த துணை ஆணையர் வனிதா இன்று ஜாய் கிரிசில்டாவிடம் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் உடன் தன்னுடைய இரண்டு வருட வாழ்க்கை குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கமிஷன் அலுவலகத்தில் கொடுத்த புகாரை இங்கே அனுப்பி வைத்துள்ளனர். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். முதல் திருமணம் முடிந்த நிலையில் என்னை திருமணம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. அதனால்தான் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என குற்றம்சாட்டுகிறேன். புகாரை வாபஸ் பெற வேண்டும் என யாரும் என்னை மிரட்டவில்லை. அது தொடர்பாக அணுகவில்லை. எனது குழந்தைக்கு மிரட்டல் இருப்பதாக கேள்ளவிப்பட்டேன். அதற்கான பாதுகாப்பை எடுப்பார்கள்.

    எனது குழந்தைக்காக எந்த நிலைக்கும் சென்றும் போராடுவேன். இது மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தை. அவர் வெளியே ஜாலியாக சுற்றலாம். நான் போராடுவேன். புகார் நான் கொடுத்துள்ளதால் என்னை முதலில் அழைத்து விசாரணை நடத்தினார்கள். பின்னர், மாதம்பட்டி ரங்கராஜை அழைத்து விசாரணை நடத்துவார்கள். கண்டிப்பாக அவர் மீது எப்ஐஆர் போடுவார்கள். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். நடவடிக்கை எடுக்கப்படும்.

    இரண்டு வருடம் வாழ்ந்து இருக்கிறோம். அது பற்றி தெளிவாக விளக்கம் அளித்துள்ளேன். இதனால் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பாசிட்டிவ் ஆன ரிப்ளை கொடுத்துள்ளனர். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். என்ன மாதிரியான ஆதாரங்கள் கொடுத்துள்ளேன் என்பதை தற்போது கூற இயலாது.

    இவ்வாறு ஜாய் கிரிசில்டா தெரிவித்தார்.

    Next Story
    ×