என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தான் அணியைப் பார்ப்பது கடினமாக இருக்கிறது- வாசிம் அக்ரம் வேதனை
- இந்தியா கடந்த 4 - 5 வருடங்களாக ஒவ்வொரு துறைகளிலும் பாகிஸ்தானை விட சிறப்பாக விளையாடுகிறது.
- கிரிக்கெட்டில் வெல்வதும் தோற்பதும் விளையாட்டின் அங்கம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 172 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 7 போட்டிகளில் இந்தியா 7 தொடர் வெற்றிகளை பெற்றுள்ளது. கடைசியாக இதே துபாயில் 2021 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது.
அதனை தொடர்ந்து 2022, 2023, 2024, 2025 வருடங்களில் நடைபெற்ற ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பைகளில் இந்தியா தொடர்ந்து 7-வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 5 வருடங்களாகவே பாகிஸ்தான் அணி 3 துறைகளிலும் இந்தியாவிடம் அடிவாங்கி படுதோல்விகளை சந்திப்பதாக முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் என்னுடைய இதயத்தில் இருந்து பேசப்போகிறேன். தற்போதைய பாகிஸ்தான் அணியைப் பார்ப்பது கடினமாக இருக்கிறது. ஒரு முன்னாள் வீரராக கிரிக்கெட்டில் வெல்வதும் தோற்பதும் விளையாட்டின் அங்கம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் இந்தியா கடந்த 4 - 5 வருடங்களாக ஒவ்வொரு துறைகளிலும் பாகிஸ்தானை விட சிறப்பாக விளையாடுகிறது. இந்தியாவுக்கு எதிராக நாம் அங்கேயும் இங்கேயும் ஓரிரு போட்டிகளில் மட்டுமே வென்றோம். உண்மையில் இந்தியா அற்புதமாக விளையாடுகிறார்கள். ஒரு போட்டியில் சில கேட்ச்கள் தவற விடப்படுவது பரவாயில்லை. ஆனால் முதல் 10 ஓவரில் 91 ரன்கள் எடுத்த உங்களால் 200 தொட முடியவில்லை என்பதைப் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை.
என்று கூறினார்.






