என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவின் பால் விலை"

    • திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும்.
    • வரும் தேர்தலில் திமுக அரசின் திருட்டுத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளை குறைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி இன்று காலை நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ஜி.எஸ்.டி வரிக்குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அரசின் சார்பில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவை செய்தியாக ஒலிபரப்பாகி வருகின்றன. ஆவின் பால்பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை; இது மக்களை ஏமாற்றும் முயற்சி என்பது தான் உண்மை.

    ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்றவாறு பால் பொருள்களின் விலை குறைக்கப்பட வேண்டும். ஆனால், ஆவின் நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, ஆவின் பால் பொருள்களின் அதிகபட்ச விற்பனை விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாத ஆவின் நிறுவனம், வரி எந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதோ, அதற்கு ஏற்றவாறு அடிப்படை விலையை உயர்த்தியுள்ளது.

    எடுத்துக்காட்டாக ஒரு கிலோ நெய்யின் அதிகபட்சம் விற்பனை விலை ரூ.700. இதில் அடிப்படை விலை ரூ.625. 12% ஜி.எஸ்.டி வரி ரூ.75 ஆகும். ஆவின் நெய் மீதான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மதிப்பு ரூ.31 மட்டும் தான். அதன்படி ஆவின் நெய் ஒரு கிலோ ரூ.656-க்கும் மட்டுமே விற்கப்பட வேண்டும். அமுல் , நந்தினி போன்ற பொதுத்துறை பால் நிறுவனங்கள் இந்த அடிப்படையில் தான் விலைக்குறைப்பு செய்துள்ளன. ஆனால், ஆவின் நிறுவனமோ ஒரு கிலோ நெய்யின் அடிப்படை விலையை ரூ.625-லிருந்து ரூ.669 ஆக உயர்த்தி அத்துடன் ரூ.31 ஜி.எஸ்.டி விலை சேர்த்து அதிகபட்ச விலையாக ரூ.700 நிர்ணயித்துள்ளது.

    அதே நேரத்தில் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் இந்த நாளில் விலையை குறைத்ததாகக் கணக்குக் காட்டும் நோக்குடன் இன்று முதல் நவம்பர் 30 வரை ஒரு கிலோ நெய்க்கு ரூ.40 தள்ளுபடி வழங்குகிறது. இந்த தள்ளுபடியும் கூட ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றுக்கு குறைந்த அளவில் தரப்படுகிறதே தவிர, பிற பால் பொருள்களுக்கு தரப்படவில்லை. அவை அதிக விலைக்குத் தான் விற்பனை செய்யப்படுகின்றன.

    நவம்பர் மாதத்துடன் இந்த தள்ளுபடி ரத்து செய்யப்படும் நிலையில், திசம்பர் மாதம் முதல் ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்த்தப்படும். திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும். இதன் மூலம் மக்களை ஏமாற்றி விடலாம் என்று திமுக அரசு நினைத்தால், அவர்களுக்குத் தான் தோல்வி கிடைக்கும். வரும் தேர்தலில் திமுக அரசின் திருட்டுத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் தனியார் பாலைவிட ஆவின் பால் அதிகம் விற்பனையாகிறது. காரணம் தனியார் பால் பாக்கெட்டைவிட ஆவின் பால் பாக்கெட் விலை குறைவாகும்.
    • அரசாங்கம் பால் வினியோகத்தை கண்காணித்து அதிகாலையிலேயே பால் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

    சென்னை:

    சென்னையில் தனியார் பாலைவிட ஆவின் பால் அதிகம் விற்பனையாகிறது. காரணம் தனியார் பால் பாக்கெட்டைவிட ஆவின் பால் பாக்கெட் விலை குறைவாகும்.

    சென்னையில் ஆவின் பால் பாக்கெட் ஆரஞ்சு, பச்சை, புளூ என 3 வகை பாக்கெட்டுகளில் புழக்கத்தில் விற்பனையில் உள்ளது.

    இதில் ஆரஞ்சு பால் பாக்கெட் கார்டுதாரராக இருந்தால் ½ லிட்டர் 24 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆவின் பார்லரில் வாங்கினால் 30 ரூபாய் கொடுக்க வேண்டும். மளிகை கடைகளில் 32 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும்.

    கிரீன் பால் பாக்கெட் ½ லிட்டர் கார்டுதாரர்களுக்கு ரூ.20-க்கு கிடைக்கும். பார்லரில் ரூ.22-க்கும் மளிகை கடைகளில் ரூ.24-க்கும் கிடைக்கிறது.

    புளூ பாக்கெட் பால் ½ லிட்டர் கார்டுதாரர்களுக்கு ரூ.18.50-க்கு கிடைக்கிறது. ஆவின் பார்லரில் 20 ரூபாய்க்கும் மளிகை கடைகளில் ரூ.22-க்கும் விற்கப்படுகிறது.

    இதுகுறித்து மளிகைக் கடைக்காரர் கூறுகையில், பால் பாக்கெட்டுகளை எங்கள் கடைக்கு கொண்டு வருபவர் 50 பைசா லாபம் வைத்துதான் எங்களிடம் தருவார். எங்களுக்கு அடக்க விலையே 20 ரூபாய் 50 பைசா ஆகிவிடுகிறது. அதன் மீது நாங்கள் ரூ.1.50 வைத்து 22 ரூபாய்க்கு பால் பாக்கெட்டை விற்கிறோம்.

    ஆனால் சூப்பர் மார்க்கெட்டை பொறுத்த வரை அவர்கள் பில்போடுவதால் எம்.ஆர்.பி. விலை ரூ.20-க்குதான் விற்க வேண்டும். அதைவிட கூடுதலாக இப்போது விற்பதாக தகவல் வருகிறது.

    சென்னையில் ஆவின் பால் பாக்கெட் குறிப்பிட்ட நேரத்தில் இதற்கு முன்பு வந்து விடும். ஆனால் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது காலதாமதமாக கிடைக்கிறது. எனவே அரசாங்கம் பால் வினியோகத்தை கண்காணித்து அதிகாலையிலேயே பால் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

    ×