என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பை சூப்பர் 4: புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் பாகிஸ்தான்
    X

    ஆசிய கோப்பை சூப்பர் 4: புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் பாகிஸ்தான்

    • 4 அணிகளும் ஒரு போட்டியில் விளையாடி உள்ளனர்.
    • பாகிஸ்தான் அணி ரன் ரேட் அடிப்படையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் வங்கதேசம்- இலங்கை அணிகள் மோதின. இதில் வங்கதேசம் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 4 அணிகளும் ஒரு போட்டியில் விளையாடி உள்ளனர். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் 1 வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளனர். ரன்ரேட் அடிப்படையில் இந்தியா (+0.689) முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் வங்கதேசம் அணி (+0.121) உள்ளது.

    தோல்வியடைந்த இலங்கை, பாகிஸ்தான் அணிகள் ரன் ரேட் அடிப்படையில் 3-வது 4-வது இடங்களில் உள்ளது. பாகிஸ்தான் அணி ரன் ரேட் அடிப்படையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    Next Story
    ×