என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • எடப்பாடி பழனிசாமி நல்லவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள்.
    • பொய்யான தகவல்களை தொண்டர்கள் மத்தியில் விஷமாக பரப்பிக் கொண்டிருக்கிறார்.

    ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

    அதிமுக கட்சியை ஒரு நல்ல நோக்கத்தோடு கொண்டுப் போக வேண்டும் என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு மேல் செல்வாக்கு உள்ள அனைவருமே கட்சியில் இருக்கக்கூடாது என்று ஒரு குறுகிய நோக்கத்தோடு செயல்பட்டார்.

    அதேபோல், கட்சியில் யார் சுயமாக சிந்தித்து செயல்படுகிறார்களோ, யார் சரி, தவறு என்பவதில் சரி என்கிறார்களோ அவர்களையும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இதேபோன்ற செயல்பாட்டினால் நல்லவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். ஒரு சிலர் மாற்று கட்சிக்கு மாரிவிட்டனர். ஒரு சிலர் மாற்றுக் கட்சிக்கு செல்ல விருப்பமில்லாமல் கட்சியில் ஒதுங்கி எந்த வேலையையும் செய்யாமல் இருக்கின்றனர்.

    எடப்பாடியின் இதுபோன்ற செயல்களால் அதிமுக பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 1998-களில் அம்மாவின் நம்பிக்கைக்கூறிய நாயகனாக செயல்பட்டு, தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு மேல் அம்மா அவர்கள் ஒரு கடுஞ்சொல் கூட அப்பாவை பேசினது கிடையாது.

    எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் அப்பாவிடம் கலந்தாலோசித்த பிறகே முடிவுகளை எடுப்பார்கள். அவ்வாறு நம்பிக்கைக்குறியவர் அப்பா.

    ஆனால், பொய்யான தகவல்களை தொண்டர்கள் மத்தியில் விஷமாக பரப்பிக் கொண்டிருக்கிறார். நிர்வாகிகளிடம் தவறான கருத்துகளை புகுத்திக் கொண்டிருக்கிறார். முழுநேரமும் சொந்த கட்சிக்காரர்களையும், கட்சி தலைவர்களையும் எப்படி காலி செய்ய வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் மட்டுமே எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

    இதனால், திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகள் முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது இந்தியாவிலேயே முதன்மையான கட்சியாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

    நம் சகோதரர்களுக்குள் பிரிவினைவாதத்தை கொண்டு வந்து தற்போது வரை அவர்கள் எந்த மாற்றமும் இன்றி செயல்புரியாத காரணத்தினால், அதிமுக மிகப்பெரிய பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 3-வது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.
    • இந்த போட்டி வதோதராவில் உள்ள கோதம்பி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    பெண்கள் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. முதலாவது ஆண்டில் மும்பை இந்தியன்சும், 2-வது சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மகுடம் சூடின.

    இந்த நிலையில் 3-வது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியனான மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.


    இந்த போட்டி வதோதராவில் உள்ள கோதம்பி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் இரு அணிகளும் தலா 2-ல் வெற்றி பெற்றுள்ளன. 

    • இரண்டு விமானங்கள் மூலம் 119 பேரை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது.
    • நாடு கடத்தப்பட்டவர்கள் நாளை மற்றும் நாளைமறுதினம் பஞ்சாப் மாநிலம் வந்தடைவார்கள்.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கிருந்தவர்களை, அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது.

    அவர்கள் பிப்ரவரி 5-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 பேர், மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களை சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரைச் சேரந்த 2 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.

    அவர்களை கை மற்றும் காலில் விலங்கிட்டு விமானத்தில் அனுப்பி வைத்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. கண்ணியமாக நாடு கடத்தப்படவில்லை. இந்திய அரசு அவர்களை அழைத்து வந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இந்த நிலையில் மேலும் 119 இந்தியர்களை இரண்டு விமானங்கள் மூலம் இன்று நாடு கடத்தியுள்ளது. இவர்கள் பிப்ரவரி 15-ஆம் தேதி (நாளை) மற்றும பிப்ரவரி 15-ஆம் தேதி (நாளைமறுதினம்) அமிர்தசரஸ் வந்தடைவார்கள். இரண்டு விமானங்களும் இரவு 10.05 மணிக்கு அமிர்தரசில் தரையிங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போது வருபவர்களில் 67 பேர் பஞ்சாப் மாநிலத்தையும், 33 பேர் அரியானா மாநிலத்தையும், 8 பேர் குஜராத் மாநிலத்தையம், 3 பேர் உத்தர பிரதேசத்தையும், தலா 2 பேர் மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் மாநிலத்தையும், தலா ஒரு பேர் இமாச்சல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இவர்கள் அமெரிக்காவிற்குள் மெக்சிகோ மற்றும் மற்ற எல்லை வழியாக ஊடுருவியவர்கள். ஊடுருவிய நிலையில் பாஸ்போர்ட்களை கிழித்து எறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பிப்ரவரி மாதத்தில் 8 நாட்கள் பங்குச் சந்தை சரிவை எதிர்கொண்டுள்ளது.
    • சென்செக்ஸ் 2,644.60 புள்ளிகளும், நிஃப்டி 810 புள்ளிகள் சரிந்துள்ளன.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி சரிவை சந்தித்து வருகின்றன.

    குறிப்பாக இந்த மாதம் (பிப்ரவரி) இதுவரை, பங்குச் சந்தைகள் செயல்பட்ட 11 நாட்களில் 8 நாட்கள் சென்செக்ஸ், நிஃப்டி சரிவை சந்தித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேறுவது, கார்ப்பரேட் நிறுவனங்களின் 3-வது காலாண்டு வருமான அறிக்கை முக்கிய காரணம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 199.76 புள்ளிகள் சரிந்து 75,939.21 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது 0.26 சதவீதம் சரிவு ஆகும். இன்று காலை வர்த்தகத்தின்போது 699.33 புள்ளிகள் குறைந்து 75,439.64 புள்ளிகளில் வர்த்தகமானது. அதன்பின் சுமார் 500 புள்ளிகள் உயர்ந்து 199.76 புள்ளிகள் சரிவில் வர்த்தகம் முடிவடைந்தது.

    அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 102.15 புள்ளிகள் 22,929.25 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் 8 நாட்களில் 2,644.6 புள்ளிகள் சரிந்துள்ளது. இது மொத்த புள்ளிகளில் 3.36 சதவீதம் ஆகும். நிஃப்டி 810 புள்ளிகள் சரிந்துள்ளன. இது 3.41 சதவீதம் ஆகும்.

    30 பங்குகளை அடிப்படையாக கொண்ட மும்பை பங்குச் சந்தையில் அதானி போர்ட்ஸ் பங்கு 4 சதவீதத்திற்கு மேல் சரிவை சந்தித்தது. அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், சன் பார்மா, இந்துஸ்இண்ட் பேங்க், என்டிபிசி, டாடா ஸ்டீல் நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.

    நெஸ்லே, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெ.சி.எல்.டெக் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.

    இன்றைய ஆசிய பங்குச் சந்தைகளில் டோக்கியோ பங்குச் சந்தை சரிவில் முடிவடைந்தது. சியோல், ஷாங்காய், ஹாங் காங் பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்தன.

    அந்நிய முதலீட்டாளர்கள் நேற்றைய வர்த்தகத்தில் 2789.91 கோடி ரூபாய் மமதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

    • ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வரை உழைத்து சமீபத்தில் ரூ. 7.8 கோடி சம்பளத்துடன் மூத்த மேலாளராகியுள்ளார்.
    • நான் வெறுமையாகவும் அலட்சியமாகவும் உணர்கிறேன்.

    ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்யும் ஒரு தொழில்நுட்ப ஊழியர், பதவி உயர்வுக்காக தனது திருமணம் எவ்வாறு முறிந்தது என்பது குறித்து பேசியுள்ளார்.

    சமூக ஊடகமான Blind தளத்தில் பெயர் குறிப்பிடாத அந்த நபர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் அந்த நபர் மூன்று ஆண்டுகளாக, மிகவும் கடினமாக உழைத்ததாகவும், சில நேரங்களில் ஒரு நாளைக்கு 14 மணிநேரம் கூட உழைத்து கடைசியாக சமீபத்தில் ரூ. 7.8 கோடி சம்பளத்துடன் மூத்த மேலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

    ஆனால் வேலையில் மும்முரமாக இருந்ததால் தான் தவறவிட்ட பல முக்கியமான குடும்ப நிகழ்வுகளை அவர் இத்தருணத்தில் நினைவு கூர்ந்தார். பதவி உயர்வு ஆசை, தனது தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு நெருக்கடியான நிலைக்கு கொண்டு வந்தன என்று பகிர்ந்துள்ளார். தற்போது தான் பெற்ற பதவி உயர்வு குறித்து வெறுமையாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.

    தனது பதிவில் அவர் கூறியதாவது,

    3 வருடங்களுக்கு முன்பு ஒரு வேலையில் சேர்ந்தேன். அங்கு பதவி உயர்வுக்காக அதிக எண்ணிக்கையிலான பணிகளை அங்கு செய்து வந்தேன். நிறுவனத்தின் ஐரோப்பா - ஆசியா குழுவை ஒருங்கிணைக்கும் அளவுக்கு உயர்ந்தேன். அதனால் என் மீட்டிங்- கள் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு முடிவடைகின்றன.

    என் மகள் பிறந்த நாளில், கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும் நான் மீட்டிங்ளில் இருந்தேன். என் மனைவிக்கு பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு இருக்கும்போது, மீட்டிங்கில் இருந்த பிரச்சனையால் அவளை உடன் இருந்து மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடியவில்லை. இதனால் அவள் விவாகரத்து கேட்டாள்.

    இன்று எனது பதவி உயர்வு அங்கீகரிக்கப்பட்டது என்ற நல்ல செய்தி எனக்குக் கிடைத்தது. ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. நான் வெறுமையாகவும் அலட்சியமாகவும் உணர்கிறேன்.

    என் வாழ்க்கையில் நான் என்ன செய்கிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்வதை நிறுத்த முடியவில்லை. இந்த குழப்பமான காலத்தில், என்னிடம் உள்ளதைப் பற்றி நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், இல்லையா? ஆனால் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது? என்று தெரிவித்துள்ளார். 

    • கார்த்தி நடிக்கும் 26-வது படமாக 'வா வாத்தியார்' உருவாக்கி இருக்கிறது.
    • இந்த படத்தின் மூலம் தமிழில் கீர்த்தி ஷெட்டி தமிழில் அறிமுகமாகி உள்ளார்.

    நடிகர் கார்த்தி இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் 'மெய்யழகன்' படத்தில் நடித்திருந்தார். தற்போது 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    இந்த படத்தின் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் வா வாத்தியார், எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். விரைவில் இப்படங்கள் வெளியாக உள்ளது.

    கார்த்தி நடிக்கும் 26-வது படமாக 'வா வாத்தியார்' உருவாக்கி இருக்கிறது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்த நிலையில், வா வாத்தியார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் "உயிர் பத்திக்காம" என்ற பாடல் வெளியாகி உள்ளது.

    • கிஸ் படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • கிஸ் திரைப்படம் ஒரு ரோம் - காம் கதையம்சத்தில் உருவாகியுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ். இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார்.

    டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    படத்திற்கு கிஸ் என்ற தலைப்பை வைத்துள்ளனர். இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். படத்தின் இசையை ஜென் மார்டின் மேற்கொள்கிறார்.

    இத்திரைப்படம் ஒரு ரோம் - காம் கதையம்சத்தில் உருவாகியுள்ளது . கிஸ் படத்தின் டீசர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

    இந்நிலையில், கிஸ் படத்தின் டீசர் வெளியானது. அதில் காதல், முத்தத்தை எதிர்க்கும் கவின் தனது முதல் முத்த அனுபவத்தை பகிரும் வகையில் காட்சி இடம்பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உலகை உருவாக்கும் பேராயுதம் காதல் மட்டும்தான்.
    • அன்பால் எல்லாவற்றையும் கொடுக்க முடியும்.

    காதலர் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி கொண்டாடுகிறோம். காதலுக்கு வயது ஒரு தடையில்லை. எந்த வயதில் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் யாருக்கும் காதல் வரலாம். ஒருவர் மீது ஒருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதே காதல். அன்பினை வெளிப்படுத்தும் நாளே இந்த காதலர் தினம்.

    காதலர் தினத்துக்கு திரையுலகினரில் இருந்து அரசியல்வாதிகள் வரை தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் காதலர் தினம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட காதலர் தின வாழ்த்து மடல்:-

    உலகை அழிக்கும் ஆயுதம் ஆயிரம் உண்டு; ஆனால்

    உலகை உருவாக்கும் பேராயுதம் காதல் மட்டும்தான்!

    தன்னைப்போல் பிறரையும் நேசி

    என்றார் இறைமகன் ஏசு!

    அண்டை அயலானுக்கும் அன்புசெய் என்றார்

    இறை தூதர் நபிகள் நாயகம்!

    அன்பே சிவம் என்றார் திருமூலர்!

    எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றது!

    எல்லா மனிதர்களையும் அன்புதான் பாதிக்கின்றது!

    கடவுளை மறுக்கும் மனிதர்கள் கூட காதலை மறுப்பதில்லை!

    என்னால் எல்லாவற்றையும் கொடுக்க முடியாது;

    அன்பால் எல்லாவற்றையும் கொடுக்க முடியும்!

    காதலில் ஒன்றுமில்லை;

    ஆனால் காதல் இல்லாமல் உலகத்தில் ஒன்றுமில்லை;

    காதலுக்காக யாரும் சாகக் கூடாது;

    ஆனால் காதலிக்காமலும் யாரும்

    சாகக் கூடாது!

    ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!

    அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்.

    காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம்

    அதனாலே மரணம் பொய்யாம்.

    - பெரும்பாவலர் பாரதி

    நிலமிழந்து போனால்

    பலமிழந்து போகும்

    பலமிழந்து போனால்

    இனமழிந்து போகும்

    ஆதலால், மானுடனே

    தாய்நிலத்தைக் காதலிக்க கற்றுக்கொள்

    என சீமான் வாழ்த்து மடலில் தெரிவித்துள்ளார்.

    • கை, கால்கள் மரத்துப் போதல், நீடித்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை அறிகுறிகளாகும்
    • மும்பையில் GBS நோயால் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

    மகாராஷ்டிரா மாநிலம் புனே, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் குய்லின்-பாரே சிண்ட்ரோம்(GBS) என்ற நரம்பியல் கோளாறு கடந்த மாதம் முதல் பரவி வருகிறது. இந்த நோய் மனிதர்களின் மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்கும்.

    கை, கால்கள் மரத்துப் போதல், நீடித்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை அறிகுறிகளாகும். இந்த நோய் பாதிப்பு பாக்டீரியா, வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது. அறிகுறிகள் தெரிந்தவுடன் நரம்பியல் டாக்டரை அணுக அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில் நோய் பாதிப்பு 205 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது மேலும் இரண்டு பேருக்கு GBS நோய் கண்டறியப்ப்டுள்ளது என்றும் சந்தேகிக்கப்படும் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட GBS பாதிப்புகளின் எண்ணிக்கை 205 ஐ எட்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், மாநிலத்தில் GBS நோய் காரணமாக இதுவரை 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. சமீபத்தில் மும்பையில் GBS நோயால் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். GBS காரணமாக மும்பையில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும். எனவே மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

    • பாஜகவால் நியமிக்கப்பட்ட வெறுப்பு நிறைந்த ஏஜென்ட் மட்டுமே.
    • தமிழ்நாடு அரசின் அரசியல் எதிரியாக செயல்பட்டு ஆளுநர் மாளிகையை தவறாக பயன்படுத்தவில்லையா?

    தமிழ்நாட்டிற்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் இறையாண்மையை அவமதிக்காதீர்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆளுநரின் கருத்துகள் அரசியல் சட்ட வரம்புகளை ஒவ்வொரு நாளும் மீறி வருகின்றன. அவரது சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது உச்சநீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு நீதிமன்றத்தால் எழுப்பப்பட்ட அவதானிப்புகள் மற்றும் கேள்விகள் அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானது.

    மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநரின் நடத்தை குறித்து இந்து ஆங்கில நாளிதழின் இன்றைய கட்டுரையை முன்னிலைப்படுத்தியதில் என்ன தவறு உள்ளது.? முதலமைச்சர் தனது X தள ட்வீட் பதிவில் நீதிமன்ற நடவடிக்கைகள் எதையும் குறிப்பிடவில்லை.

    இருப்பினும் பதிலடி என்ற போர்வையில், பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், வேறு பதவியை பெற நினைக்கும் கவர்னர், டில்லியில் உள்ள உயரதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க, தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

    அவரது ட்வீட் ஆளுநராக அவரது கண்ணியம் இல்லாததை வெளிப்படுத்துகிறது மேலும் அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கிய பதவியை அரசியல்மயமாக்கிக் கொண்டுள்ளார் என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

    தி இந்து பத்திரிக்கையானது நன்மதிப்பை பெற்ற செய்தித்தாள். அதன் வரலாறு முழுக்க சுதந்திரமான மற்றும் அதீத நேர்மையை கடைபிடித்து ஒருமைப்பாட்டினை காக்கும் வகையில் இருந்துவருகிறது. சாவர்க்கரையும் கோட்சேவையும் பின்பற்றுபவர்களுக்கு நேர்மை என்பது அந்நியமானதாக இருந்தாலும், மாநில ஆளுநர் பத்திரிகைகளை அவமதிக்க கூடாது என்பதைத்தான் பொதுமக்கள் எதிர்பார்ப்பர்.

    கவர்னர் தனது ட்வீட்டில் எந்த ட்விட்டர் கணக்குகளை குறிப்பிட்டு இணைந்துள்ளார் என்பதை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. ஒருவேளை அவர் அந்த தனிநபர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறாரா.? அவர் தமிழ்நாடு அரசின் அரசியல் எதிரியாக செயல்பட்டு ஆளுநர் மாளிகையை தவறாக பயன்படுத்தவில்லையா?

    அரசியல் பாதுகாப்பின்மை மற்றும் தமிழ்நாட்டு மக்களைப் புரிந்துகொள்வதை பற்றி ஆளுநர் பேசுகிறார். அரசியல் பற்றி வகுப்பெடுக்க இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில் தேர்தலில் போட்டியிட்டுள்ளாரா ஆளுநர்.? அவர் பாஜகவால் நியமிக்கப்பட்ட வெறுப்பு நிறைந்த ஏஜென்ட் மட்டுமே.

    தமிழ்நாட்டு மக்களையும் திமுகவினையும் உண்மையிலேயே ஆளுநர் புரிந்து கொள்ள விரும்பினால் அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து அவரே தேர்ந்தெடுக்கும் ஏதாவதொரு சட்டமன்ற தொகுதியில் நின்று தேர்தலில் போட்டியிடுமாறு அழைக்கிறோம். நோட்டாவிற்கு கீழ் வாக்குகள் வாங்குவதையாவது தவிர்ப்பாரா என்று பார்ப்போம்.

    கவர்னர் அவர்களே, ஆட்சியைப் பற்றி உங்களிடமிருந்து எங்களுக்கு எந்த விரிவுரைகளும் தேவையில்லை. இந்த மாநிலம் கல்வியில் #1 இடத்தில் உள்ளது.

    தொழில், வேலைவாய்ப்பு மற்றும் பிற நல்லாட்சி குறியீடுகளில் முன்னணியில் உள்ளது. நீங்கள் வருவதற்கு முன்பே நாங்கள் ஒரு செழிப்பான நிலையை அடைந்துள்ளோம்.

    தமிழ்நாட்டிற்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். அதற்கு பதிலாக அரசியலமைப்பு மற்றும் அதன் விழுமியங்களுக்கு மதிப்பளியுங்கள்.

    மாறாக தமிழ்நாட்டு மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் இறையாண்மையையும் அவமதிக்காதீர்கள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
    • புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கு தற்போது z பாதுகாப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்தியாவில் அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைத்துறை விஐபிகள் வரை வெவ்வேறு நிலை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 1960களில் நக்சல் பிரச்சனை ஏற்பட்டபோது இந்த பாதுகாப்பு முறைகள் தொடங்கப்பட்டன.

    புலனாய்வுத்துறை ஒருவரின் பாதுகாப்பு அச்சுறுத்தலை மதிப்பிட்டு, அதுபற்றிய அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

    அச்சுறுத்தலின் தன்மைக்கு ஏற்ப X, Y, Y+, Z, Z+ மற்றும் சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) என 6 வகையான பாதுகாப்பு வழங்கப்படுகின்றன.

    SPG:

    பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஒரு சிறப்பு பாதுகாப்புப் பிரிவாக SPG உள்ளது. 1985 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்த அமைப்பு உருவானது. பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் திறமை வாய்ந்த சுமார் 3,000 பயிற்சி பெற்ற காவலர்கள் SPG கொண்டுள்ளது.

    Z-பிளஸ் மற்றும் Z பிரிவு:

    அதிக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நபர்களுக்கு Z-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதில் CRPF கமாண்டோக்கள் மற்றும் தேவைப்பட்டால், தேசிய பாதுகாப்பு காவலர் (NSG) கமாண்டோக்கள் உட்பட குறைந்தது 55 காவலர்கள் ஈடுபடுத்தப்படுவர். Z-பிளஸ் பாதுகாப்பில் பயணத்தின்போது குண்டு துளைக்காத வாகனம் மற்றும் ஆயுதம் தாங்கிய எஸ்கார்ட் பாதுகாப்பு வானங்களும் அடங்கும்.

    Z-பிளஸை விட சற்று குறைவான பாதுகாப்பை வழங்குவது Z-பிரிவு. கமாண்டோக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை இணைத்து 22 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர். பாபா ராம்தேவ் மற்றும் நடிகர் அமீர் கான் போன்ற நபர்களுக்கு இந்த பாதுகாப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கு தற்போது z பாதுகாப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

     

    Y-பிளஸ் மற்றும் Y பிரிவு

    Y பிளஸ் பிரிவு பொதுவாக மிதமான ஆபத்தில் உள்ளதாகக் கருதப்படும் நபர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. பாலிவுட் நட்சத்திரம் மற்றும் மக்களவை எம்பி கங்கனா ரனாவத் போன்ற நபர்கள் நபர்கள் Y-பிளஸ் பாதுகாப்பைப் பெற்றுள்ளனர். இதில் ஐந்து காலவர்கள், CRPF வீரர் ஒருவர் மற்றும்ந நான்கு கான்ஸ்டபிள்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர். 6 தனி பாதுகாப்பு அதிகாரிகள் மூன்று ஷிப்பில் சுழற்சி முறையில் காவல் இருப்பார்கள்.

    Y பிளஸ்- ஐ விட சற்று குறைந்த அச்சுறுத்தல்களுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. Y பிரிவில் 9 மிமீ பிஸ்டலுடன் ஒருவர், ஸ்டென் துப்பாக்கியுடன் ஒருவரும் என 2 பாதுகாப்பு அதிகாரிகள் இருப்பார்கள். மொத்தம் 11 பேர், ஷிப்ட் முறையில் பாதுகாப்பில் ஈடுபடுவர். இரவு நேரங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.

    X பிரிவு

    X பிரிவு மிகக் குறைந்த பாதுகாப்பை வழங்குகிறது. இதில் இரண்டு ஆயுதமேந்திய போலீஸ்காரர்கள் மட்டுமே உள்ளனர். கமாண்டோக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கிடையாது. இது பொதுவாக குறைந்தபட்ச ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படும் நபர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

    இவ்வகை பாதுகாப்புகளின்படி, மத்திய அமைச்சர்கள், VVIPகள் , முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கான பாதுகாப்பில் தேசிய பாதுகாப்பு படை (NSG ), இந்திய-திபெத்திய எல்லை காவல் படை (ITBP ) மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF ), மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    • இந்தியாவில் அமைதி, வெளிநாட்டில் தனிப்பட்ட விசயம்.
    • அமெரிக்காவில் கூட அதானியின் ஊழலை மறைத்தார் என ராகுல் காந்தி விமர்சனம்.

    இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து இருநாட்டு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது 26/11 பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்த ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு விசயங்கள் இடம் பிடித்தன.

    உங்களுக்கும் டொனால்டு டிரம்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் அதானி ஊழல் தொடர்பான பிரச்சினை இடம் பெற்றதா? என்ற கேள்விக்கு, வாஷிங்டனில் டிரம்புடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசியபோது பிரதமர் மோடி கூறியதாவது:-

    இந்தியா ஒரு ஜனநாயக நாடு, நமது கலாச்சாரம் உலகம் ஒரே குடும்பம் (Vasudhaiva Kutumbakam- வசுதைவ குடும்பகம்). உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக நாங்கள் கருதுகிறோம். ஒவ்வொரு இந்தியரும் என்னுடையவர் என்று நான் நம்புகிறேன். இரண்டு நாடுகளின் இரண்டு முக்கிய தலைவர்கள் இதுபோன்ற தனிப்பட்ட பிரச்சினைகளைப் பற்றி ஒருபோதும் விவாதிப்பதில்லை.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்க பதிவில் "நீங்கள் இந்தியாவில் வைத்து கேள்வி கேட்டால், அங்கே மவுனம்தான். நீங்கள் வெளிநாட்டில் கேள்வி கேட்டால், அது தனிபட்ட விசயம்! அமெரிக்காவில் கூட மோடி அதானியின் ஊழலை மறைத்தார்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பாஜக-வின் தேசிய செய்தி தொடர்பான ஷேசாத் பூனவல்லா பதில் கொடுத்துள்ளார். ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த பூனவல்லா "26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ராணாவை இந்தியா கொண்டு வரப்படுகிறார். இதற்காக அமெரிக்காவை சம்மதிக்க வைத்துள்ளார் பிரதமர் மோடி. இது இந்தியாவிற்கான மிகப்பெரிய ராஜாங்க ரீதியிலான வெற்றி.

    தாக்கத்தை ஏற்படுத்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம், இந்தியா- அமெரிக்க உறவுகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுப்படுத்தியது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தோடு குற்றம் கண்டுபிடிப்பது காங்கிரசின் பழக்கமாகிவிட்டது" என்றார்.

    ×