தமிழில் களமிறங்கிய கீர்த்தி ஷெட்டி- வா வாத்தியார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடு

கார்த்தி நடிக்கும் 26-வது படமாக 'வா வாத்தியார்' உருவாக்கி இருக்கிறது. இந்த படத்தின் மூலம் தமிழில் கீர்த்தி ஷெட்டி தமிழில் அறிமுகமாகி உள்ளார்.
தமிழில் களமிறங்கிய கீர்த்தி ஷெட்டி- வா வாத்தியார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடு
Published on

நடிகர் கார்த்தி இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் 'மெய்யழகன்' படத்தில் நடித்திருந்தார். தற்போது 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் வா வாத்தியார், எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். விரைவில் இப்படங்கள் வெளியாக உள்ளது.

கார்த்தி நடிக்கும் 26-வது படமாக 'வா வாத்தியார்' உருவாக்கி இருக்கிறது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், வா வாத்தியார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் "உயிர் பத்திக்காம" என்ற பாடல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com