என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அமீர் குஸ்ராவை நினைவுகூரும் ஜஹான்-இ-குஸ்ராவின் 25வது எடிசனின் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
- இந்தியாவின் தத்துவம் மற்றும் கணித கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளன என்று மோடி தெரிவித்தார்.
பிரபல சூஃபி கவிஞரும் அறிஞருமான அமீர் குஸ்ராவை நினைவுகூரும் ஜஹான்-இ-குஸ்ராவின் 25வது எடிசனின் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அவ்விழாவில் பேசிய பிரதமர் மோடி, "சூஃபி பாரம்பரியம் இந்தியாவில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் பிறந்த குஸ்ரா, இந்தியா வேறு எந்த நாட்டையும் விட உயர்ந்தது என்றும், அதன் அறிஞர்கள் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்றும், சமஸ்கிருதம் உலகின் சிறந்த மொழி என்றும் பாராட்டினார், இந்தியாவின் தத்துவம் மற்றும் கணித கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளன" என்று தெரிவித்தார்.
மேலும், வரவிருக்கும் இஸ்லாமிய புனித மாதமான ரம்ஜானை ஒட்டி முஸ்லீம் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
- சென்னை மாநகராட்சியில் தற்போது 15 மண்டலங்கள் உள்ளன.
- மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 20ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் தற்போது, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்போக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்கள் உள்ளன.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றி அமைப்பதென அரசு முடிவு செய்துள்ள நிலையில் மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 20ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடையவும் முதலீட்டு சூழலை மேம்படுத்தவும் மண்டலங்கள் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இன்று முதல் மார்ச் மாதத்தின் 8, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வரும் 5 சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்.
- ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும்.
சென்னை:
மார்ச் மாத சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுபற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், நிதியாண்டின் இறுதி மாதம் என்பதாலும் மார்ச் 2025 மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆவண பதிவினை ஏற்பதற்கு ஏதுவாக அனைத்து பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் காலை 10.00 மணி முதல் ஆவண பதிவு முடியும்வரை செயல்படும்.
அதன்படி இன்று முதல் மார்ச் மாதத்தின் 8, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வரும் 5 சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடும் நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும்.
ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு எதற்கெல்லாம் பயன்படுத்தியுள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
- 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. தயார்ப்படுத்தி கொண்டிருக்கிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் நடந்த சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு இன்னும் வரையறுக்கப்படவில்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. தி.மு.க. தலைமையிலான தமிழக அரசால் தமிழ் மொழி வளர்க்கப்படவில்லை. மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை. தார் ஊற்றி அழித்தாலும் நாட்டில் 70 கோடி மக்கள் பேசும் இந்தி மொழியை அழிக்க முடியாது. பழமையான தமிழ் மொழியையும் யாராலும் அழிக்க முடியாது. மத்திய அரசு எந்தவொரு சிறந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் எதிர்ப்பது என்று தி.மு.க. எடுத்துக்கொள்கிறது. அது போல் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் எதிர்க்கிறது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை மறைக்க பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துகிறது. அதனை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு எதற்கெல்லாம் பயன்படுத்தியுள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. தயார்ப்படுத்தி கொண்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் மாநில தலைவரும், தேசிய தலைவர்களும் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவேன். பா.ஜ.க மாநில தலைவராக மீண்டும் அண்ணாமலை வரும்போது அவரை முதலமைச்சர் அரியணையில் அமர்த்துவது எனது கடமையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு காட்டுகின்ற பாதையே ஒவ்வொரு மாநிலமும் தன் தாய்மொழியை காப்பதற்கான பாதை.
- மாநில மொழிகளை அழிக்கும் பா.ஜ.க.வின் மறைமுக கொள்கையை நேரடியாக தோலுரித்துக்காட்டியது தமிழ்நாடு.
சென்னை:
ஆதிக்க மொழித் திணிப்பை தடுத்து அன்னைத் தமிழை காப்பேன் என தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
* இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று அன்னைத் தமிழே சூளுரைக்கிறேன். தமிழ்நாடு காட்டுகின்ற பாதையே ஒவ்வொரு மாநிலமும் தன் தாய்மொழியை காப்பதற்கான பாதை.
* இந்திய மொழிகளை ஒவ்வொரு முறையும் காத்து நிற்பது தமிழ்நாடும் தமிழர்களின் மொழியுணர்வும் தான்.
* மாநில மொழிகளை வளர்க்கவும் பரவச் செய்யவும் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்துவதாக பா.ஜ.க. சொல்கிறது.
* மத்திய பா.ஜ.க. அரசு சொல்வது பச்சைப்பொய் என்பதை பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன.
* இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்போம், மாநில மொழிகள் அனைத்தையும் வெறுப்போம் என்பதே பா.ஜ.க.வின் மொழிக்கொள்கை.
* பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்கள் தற்போது தாய்மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என உணர்ந்து உத்தரவிட்டுள்ளது.
* மாநில மொழிகளை அழிக்கும் பா.ஜ.க.வின் மறைமுக கொள்கையை நேரடியாக தோலுரித்துக்காட்டியது தமிழ்நாடு என்று கூறியுள்ளார்.
- ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளி டாக்கிங் செய்த 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றது.
- விண்வெளி டாக்கிங் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட செயற்கைக்கோள் தற்போது நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ளது.
புதுடெல்லி:
விண்வெளியில் இந்தியாவின் விண்வெளி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்த உள்ளது. அத்துடன் சந்திரயான்-4 உள்ளிட்ட திட்டங்களும் இஸ்ரோவின் பட்டியலில் இருக்கிறது.
மிகப்பெரிய இந்த திட்டங்களுக்காக விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் (ஸ்பேடெக்ஸ்) நவீன தொழில்நுட்ப ஆய்வு அதாவது 'விண்வெளி டாக்கிங் பரிசோதனை'க்காக இஸ்ரோ 'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) என்ற இரண்டு செயற்கைக்கோள்களை கடந்த டிசம்பர் 30-ந்தேதி விண்ணில் செலுத்தியது.
பின்னர் பல கட்ட முயற்சிகளுக்குப்பின் கடந்த ஜனவரி 16-ந்தேதி விண்ணில் வைத்தே இந்த 2 செயற்கைக்கோள்களையும் ஒன்றாக இணைத்தது. இதன் மூலம் ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளி டாக்கிங் செய்த 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றது.
இந்த நிலையில் விண்வெளியில் ஒன்றாக இணைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள்களை தனித்தனியாக பிரித்து ஒன்றிணைக்கும் பணிகளை செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்த பணி வருகிற 15-ந்தேதி தொடங்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த இந்திய அறிவியல் கொண்டாட்டத்தில் பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விண்வெளி டாக்கிங் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட செயற்கைக்கோள் தற்போது நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ளது. எனவே 2 மாதங்களுக்கு ஒருமுறை நமக்கு 10 முதல் 15 நாட்கள் இடைவெளி கிடைக்கும்.
எனவே மார்ச் 15-ந்தேதியில் இருந்து செயற்கைக்கோள் இணைப்புக்கான வாய்ப்பு நமக்கு கிடைக்கும் தற்போது செயற்கைக்கோள்களைப் பிரித்து மீண்டும் இணைப்பதற்கான உருவகப்படுத்துதல் (சிமுலேஷன்) பரிசோதனைகளை நாங்கள் செய்து வருகிறோம். பின்னர் 15-ந்தேதி முதல் ஸ்பேடெக்ஸ் பரிசோதனைகளை தொடங்குவோம்.
இந்த விவகாரத்தில் பல்வேறு பரிசோதனைகளை செய்ய விரும்புகிறோம். செயற்கைக்கோள்களில் அதிகமான உந்துவிசை இருக்கிறது. எனவே 2 மாதங்களுக்குப் பிறகு கிடைக்கும் மூன்றாவது பகுதிக்கான சோதனைகளையும் நாங்கள் வரிசையாகக் கொண்டுள்ளோம்,
சந்திரயான்-4 மற்றும் இந்திய விண்வெளி நிலையம் நிறுவுதல் போன்ற ஏராளமான எதிர்கால திட்டங்களுக்கு இந்த ஸ்பேடெக்ஸ் திட்டம் ஒரு முன்னணி பரிசோதனை ஆகும்.
இவ்வாறு இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
- இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
- இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் வெவ்வேறு திசைகளில் வந்த 3 பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
போஜ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வந்த ஒருவர் தடுப்பின் மீது ஏறி சாலையை கடக்க முயன்றார். அப்போது அவர் மீது எதிர்த் திசையில் வந்த பைக்கும் சரியான பாதையில் சென்ற மற்றொரு பைக்கும் மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
- புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
- மாதத்திற்கு இரண்டு முறை எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.
- வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.5.50 காசுகள் உயர்ந்து ரூ.1,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது.
- சீமான் தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜாரானார்.
- வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.
நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடபழனி விடுதியில் இருந்து தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜாரானார். அவருடன் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வந்தனர்.
வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். காவல்நிலையம் முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
சீமானின் கார் செல்ல மட்டுமே போலீசார் அனுமதி வழங்கிய நிலையில், தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நா.த.க. தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சீமானுடன் தன்னையும் காவல் நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று வீரப்பன் மகள் வித்யா ராணி கண்ணீருடன் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "எங்கள் தலைவர் பிரச்சனையில் இருந்தால் கூட நிற்பது என்னுடைய கடமை. ஒரு பெண்ணின் விஷயத்தை வைத்து அரசியல் செய்கிறீர்கள். நாம் தமிழர் கட்சியை ஒழிக்க பார்க்கிறார்கள். நான் என்ன வெடிகுண்டா துப்பாக்கியா வைத்துள்ளேன், என்னை ஏன் தடுக்கிறீர்கள். இந்த உடம்பில் உயிர் உள்ளவரை மக்களுக்காக நிற்பான். வீரப்பன் மக்களுக்காக உண்மையாக இருந்தார்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
- மீன்பிடி படகில் அதிகாலை 3 முதல் 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.
- இதனால் படகில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் நகரில் ஆக்சி கடற்கரை பகுதியில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் மீன்பிடி படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.
நேற்று அதிகாலை 3 முதல் 4 மணியளவில் அந்தப் படகு திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதனால் படகில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர்.
தகவலறிந்து இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் படகில் இருந்த 18 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனை ராய்காட் மாவட்ட எஸ்.பி. உறுதிப்படுத்தினார்.
சம்பவத்தின்போது, அந்த வழியே சென்ற இந்திய கடலோர காவல் படையைச் சேர்ந்த சாவித்ரிபாய் புலே என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்த மீன்பிடி கப்பல் தீப்பிடித்து எரிந்தபோது அதனை ரோந்து கப்பலில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். உடனே நிலைமையை உணர்ந்து மீனவர்கள் அனைவரையும் மீட்கும் பணியை மேற்கொண்டனர். இதில் 18 மீனவர்களும் மீட்கப்பட்டு மற்றொரு மீன்பிடி படகில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-பிரிட்டனின் ஜேமி முர்ரே உடன் மோதியது.
இதில் முதல் செட்டை யூகி பாம்ப்ரி ஜோடி 6-2 என கைப்பற்றியது. 2வது செட்டை 6-4 என யூகி பாம்ப்ரி ஜோடி இழந்தது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டை யூகி பாம்ப்ரி ஜோடி 10-7 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.






