search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISRO"

    • நிலவின் தென் துருவத்தின் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
    • விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவரும் வெற்றிகரமாக வெளியே வந்து ஆய்வில் ஈடுபட்டது.

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆராய்சி கழகத்தின் (இஸ்ரோ) சார்பில் நிலவை ஆராய்சி செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி சதீஷ்த வான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

    சுமார் 1 மாதத்திற்கு பிறகு ஆகஸ்டு 23-ந் தேதி மாலை 6.04 மணிக்கு திட்டமிட்ட இடத்தை சென்றடைந்தது.

    சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தென்துருவத்தில் தரை இறங்கி சாதனை புரிந்தது. மேலும் விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவரும் வெற்றிகரமாக வெளியே வந்து ஆய்வில் ஈடுபட்டது.

    இந்த திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தின் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்த வெற்றியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.


    பிரதமர் மோடி இஸ்ரோ மையத்திற்கு நேரில் சென்று விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரை இறங்கியதை குறிக்கும் வகையில் ஆகஸ்டு 23-ந் தேதியை தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.

    மேலும், நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு 'சிவசக்தி' என்று பிரதமர் மோடி பெயர் சூட்டினார். சிவம் மனித குல நன்மைகளுக்கான தீர்வை கொண்டு இருக்கிறது. சக்தி அந்த தீர்வுகளை செயல் படுத்துவதற்குரிய ஆற்றலை வழங்குகிறது. இதன் காரணமாக சிவசக்தி என பெயரிட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி சூட்டிய சிவசக்தி பெயருக்கு சர்வேதேச விண்வெளி யூனியனின் கிரக அமைப்புகளுக்கான பெயரிடும் பணிக்குழு அங்கீகாரம் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அந்த இடம் இனி சிவசக்தி என்றே விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் அடையாளப்படுத்தப்படும். இது இந்தியாவிற்கு மிகப் பெரிய அங்கீகாரம் என்று கருதப்படுகிறது.

    • விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சுமார் 4.5 கி.மீ உயரத்திற்கு ஏவுகணையை கொண்டு செல்லப்பட்டது.
    • ஆர்எல்வி-ன் மூன்றாவது தரையிறங்கும் மிஷனாகும்.

    இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஏவுகணையான புஷ்பக் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

    கர்நாடகாவின் சல்லகெரேவில் உள்ள ஏரோநாட்டிகல் சோதனை தளத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் இஸ்ரோவால் ராக்கெட் ஏவப்பட்டது.

    இது ஆர்எல்வி-ன் மூன்றாவது தரையிறங்கும் மிஷனாகும்.

    இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சுமார் 4.5 கி.மீ உயரத்திற்கு ஏவுகணையை கொண்டு செல்லப்பட்டு, முன்னரே தீர்மானிக்கப்பட்ட பெட்டி அளவுருக்களை அடைந்த பின்னர் விடுவிக்கப்பட்டது.

    இந்த சோதனை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதாக இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    • 'ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்' அக்னிபான் ராக்கெட்டை தயாரித்தது.
    • செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக ராக்கெட் ஏவப்பட இருந்தது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ஏவுதளங்கள் மூலம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகிறது.

    இந்த சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் சென்னையை சேர்ந்த விண்வெளி தொழில்முனைவோரால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மற்றொரு தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    அதில் இருந்து முதன் முறையாக சென்னையை தளமாக கொண்ட, 'ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்' தயாரித்த 'அக்னிபான்' ராக்கெட் நாளை காலை 9 மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், அக்னிபான் ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாளை விண்ணில் ஏவப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தொழில்நுட்ப கோளாறு சீரான பிறகு, விண்ணில் ஏவப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக இந்த ராக்கெட் ஏவப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக இந்த ராக்கெட் ஏவப்படுகிறது.
    • ராக்கெட்டில் ‘திரஸ்ட் வெக்டார் கன்ட்ரோல்ட், ஜிம்பல்டு மோட்டார்' உள்ளது.

    ஆந்திரா:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ஏவுதளங்கள் மூலம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகிறது.

    இந்த சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் சென்னையை சேர்ந்த விண்வெளி தொழில்முனைவோரால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மற்றொரு தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    அதில் இருந்து முதன் முறையாக சென்னையை தளமாக கொண்ட, 'ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்' தயாரித்த 'அக்னிபான்' ராக்கெட் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

    செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறிய ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் முதல் ராக்கெட் இதுவாகும்.

    ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் பல்வேறு முதன்மை சிறப்புகளை கொண்டது. இந்த ராக்கெட் உலகின் முதல் '3டி பிரிண்டட்' வகையை சேர்ந்ததாகும். இந்தியாவின் முதல் அரை 'கிரையோஜெனிக்' எந்திரத்தை கொண்டுள்ளது. 18 மீட்டர் உயரமும், 1.3 மீட்டர் விட்டமும் கொண்ட இந்த ராக்கெட் 100 கிலோ எடையுள்ள செயற்கைகோள்களை 700 கிலோ மீட்டர் உயரத்திற்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

    செங்குத்தாக செல்லும் வகையை சேர்ந்த இந்த ராக்கெட் 10 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்த பிறகு ராக்கெட் அதன் இறங்குதலைத் தொடங்குகிறது. அது தொடங்கிய இடத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வங்காள விரிகுடாவில் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ராக்கெட்டில் 'திரஸ்ட் வெக்டார் கன்ட்ரோல்ட், ஜிம்பல்டு மோட்டார்' உள்ளது.

    அதாவது அதன் முனை வெவ்வேறு கோணங்களுக்கு நகர்த்தப்படலாம். இதனால் உந்துதல் பறக்கும் திசையில் மாறுபடும் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்டு பல கோணங்களில் சுழலும்.

    இந்த காரணிகள் தரை நிலையத்தில் இருந்து ராக்கெட்டை 'ஸ்டீரிங்' மூலம் வேண்டிய திசைக்கு திருப்ப உதவி செய்ய உதவுகின்றன.

    மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    இதற்கிடையே செலவை குறைக்கவும், சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காகவும் பெங்களூருவில் மறுபயன்பாட்டு ராக்கெட் தரையிறங்கும் பரிசோதனையை இந்த வாரம் சோதனை செய்ய இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

    • இன்சாட்-3டி.எஸ், வானிலை செயற்கைக்கோள், புவி இமேஜிங் செயல்பாடுகளைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
    • வானிலை முன்னறிவிப்பு, காலநிலை கண்காணிப்பு மற்றும் வளிமண்டல செயல்முறைகளைப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிநவீன கருவிகளுடன் பிரத்யேகமாக காலநிலை மற்றும் வானிலை தரவுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்காக 'இன்சாட் 3 டி.எஸ்' என்ற செயற்கைகோளை தயாரித்தது. அதனை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் கடந்த பிப்ரவரி 17-ந்தேதி விண்ணில் ஏவியது.

    இந்த செயற்கைகோளில், 6 சேனல் இமேஜர் மற்றும் 19 சேனல் சவுண்டர் கருவிகள் வானிலை ஆய்வுகளுக்காகவும், உயர்தர தரவுகளை சேகரிப்பதற்காகவும், செயற்கைகோள் உதவி, தேடல் மற்றும் மீட்பு டிரான்ஸ்பாண்டர் அனுப்பப்பட்டது. அத்துடன் இந்த செயற்கைகோளில் டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டர் (டி.ஆர்.பி.) போன்ற வித்தியாச தகவல் தரும் கருவிகளும் அதில் இடம்பெற்றிருந்தது. இந்த கருவி தானியங்கி தரவு சேகரிப்பு தளங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களிலிருந்து தரவுகளை அளிக்கும். அத்துடன் நிலம் மற்றும் கடல் பரப்புகளை கண்காணிக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

    இதுபற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    இன்சாட்-3டி.எஸ், வானிலை செயற்கைக்கோள், புவி இமேஜிங் செயல்பாடுகளைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. வானிலை பேலோடுகளின் முதல் தொகுப்பு படங்களை (6-சேனல் இமேஜர் மற்றும் 19-சேனல் சவுண்டர்) கடந்த 7-ந்தேதி எடுத்து அனுப்பியது. இந்த செயற்கைகோளில் உள்ள அனைத்து கருவிகளும் செயல்பட தொடங்கி உள்ளது.

    குறிப்பாக இதில் உள்ள 6-சேனல் இமேஜர் கருவி பல நிறமாலை சேனல்கள் அல்லது அலைநீளங்களில் பூமியின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தின் படங்களைப் எடுத்து அனுப்பி உள்ளது. மேகங்கள், ஏரோசல்கள், நில மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் நீராவி வினியோகம் போன்ற பல்வேறு வளிமண்டல மற்றும் மேற்பரப்பு நிகழ்வுகள் பற்றிய தகவல்களை சேகரித்து உள்ளது.

    19-சேனல் ஒலிப்பான் பூமியின் வளிமண்டலத்தால் வெளிப்படும் கதிர்வீச்சைக் கவனமாகப் பிடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட சேனல்கள் மூலம் வெவ்வேறு வளிமண்டலக் கூறுகள் மற்றும் நீராவி, ஓசோன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற வாயுக்கள் போன்ற பண்புகளால் வெளிப்படும் கதிர்வீச்சை படம் எடுத்து அனுப்பி உள்ளது. அந்த புகைப்படங்கள் நேற்று வெளியிடப்பட்டது.

    இதில் உள்ள கருவிகள் கடல் மேற்பரப்பு வெப்பநிலை, மழைப்பொழிவு, நில மேற்பரப்பு வெப்பநிலை, மூடுபனி தீவிரம், வெளிச்செல்லும் நீண்ட அலை கதிர்வீச்சு, மேல் வெப்பமண்டல காற்று, மேகக் காற்றழுத்தம், ஈரப்பதம் போன்ற 40-க்கும் மேற்பட்ட புவி இயற்பியல் தரவு தயாரிப்புகளை உருவாக்குகின்றன. சேகரிக்கப்பட்ட தரவு வளிமண்டலத்தின் செங்குத்து அமைப்பு பற்றிய தகவல்களை அளிக்கிறது. வானிலை முன்னறிவிப்பு, காலநிலை கண்காணிப்பு மற்றும் வளிமண்டல செயல்முறைகளைப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

    இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.

    • பட்டம் பெற்ற மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்.
    • நல்ல அறிவார்ந்த சமூகத்தை வளர்க்க வேண்டும்.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்கலைக் கழக துணைவேந்தர் (கூடுதல் பொறுப்பு) காமகோடி வரவேற்று பேசினார். பல்கலைக் கழக வேந்தர் அண்ணாமலை பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

    விழாவில் 2020-21, 2021-2022, 2022-2023 ஆகிய 3 ஆண்டுகளில் இப்பல்கலைக்கழகத்தில் பயின்ற இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பட்டங்கள் மற்றும் பட்டயம், சான்றிதழ் படித்து முடித்த 4230 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    ஆராய்ச்சி படிப்பான பி.எச்.டி. முடித்த 175 பேருக்கும் பல்வேறு பாடங்களில் முதலிடம் பிடித்த 172 பேருக்கு தங்க பதக்கத்தையும், கணித ஆராய்ச்சிப் பணியில் அளப்பரிய சாதனை புரிந்த பல்கலைக்கழக கணிதத்துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் உயரிய விருதையும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் வழங்கி பேசியதாவது:-

    60 ஆண்டுகளில் இந்தியா சிறிய ராக்கெட் தொடங்கி தற்போது சந்திரனில் கால் பதிக்கும் அளவிற்கு சாதித்துள்ளது. இந்தியாவிலேயே தயாரித்து விண்ணுக்கு அனுப்பும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

    சந்திராயன்-2-ல் ஏற்பட்ட தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில் தான், தற்போது சந்திராயன்-3ன் மூலம் வெற்றி பெற்றுள்ளோம். இதன் மூலம் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது.

    சந்திராயன்-3 விண்கலத்தின் வரலாற்று வெற்றி சமூகத்தில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. அதன் வெற்றியால் ஏராளமானோர், குறிப்பாக எண்ணற்ற குழந்தைகள் உத்வேகம் அடைந்துள்ளனர் என்பதைக் காண முடிந்தது. இந்தியாவும் இந்தியர்களும் இவ்வளவு பெரிய செயல்களைச் செய்ய முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.

    இந்தியாவிலேயே முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகம் காந்திகிராம பல்கலைக்கழகம் இது கிராமங்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கிராமங்களுக்கு கொண்டு செல்லும் பணியை செய்து வருகிறது. புதிய கண்டுபிடிப்புகளால் தான் வளர்ச்சியை எட்ட முடியும்.

    பட்டம் பெற்ற மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும். நல்ல அறிவார்ந்த சமூகத்தை வளர்க்க வேண்டும். கடுமையாக உழைப்பது மூலம் நாட்டிற்கு நம்மை அர்ப்பணிப்பு உள்ளவர்களாக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பதிவாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி அறிவித்தார்.
    • ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜித் கிருஷ்ணனும் ஒருவர்

    ககன்யான் திட்டப் பணிகளை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் ஆய்வு மையத்தில் ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். ஆளுநர் முகமது ஆரிப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இருந்தனர்.

    இதையடுத்து, ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்ல உள்ளனர். இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக விண்வெளி செல்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

    ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜித் கிருஷ்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னையில் பிறந்த இவர், உதகையில் உள்ள வெல்லிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் படித்துள்ளார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் தேர்ச்சி பெற்று 2003-ல் இந்திய விமானப் படையில் சேர்ந்த இவர், சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

    • ககன்யான் திட்ட வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.
    • இந்தியாவின் விண்வெளித்துறை வளர்வதோடு பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

    திருவனந்தபுரம்:

    ககன்யான் திட்டப் பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கேரளா வந்துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் ஆய்வு மையத்தில் ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். ஆளுநர் முகமது ஆரிப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இருந்தனர்.

    இதையடுத்து, ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    நிலவில் சந்திரயான் தரையிறங்கிய சிவசக்தி பாய்ண்ட் இந்தியாவின் திறமைகளை உலகிற்கு பறைசாற்றுகிறது. விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்கள் தனிநபர்கள் அல்ல. 140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை விண்வெளிக்கு கொண்டு செல்பவர்கள். அவர்கள் இந்தியாவின் நம்பிக்கை, பலம் மற்றும் பெருமை. அவர்கள் 4 பேருக்கும் தேசத்தின் ஆசீர்வாதம் துணை இருக்கும்.

    ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி செல்லும் வீரர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டுங்கள். விண்வெளி வீரர்களின் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    விண்வெளி வீரர்களின் கடும் பயிற்சியில் யோவாவும் முக்கிய பங்காற்ற உள்ளது. ஒரே எண்ணத்துடன் தவம்போல் பயிற்சி செய்ய உள்ள விண்வெளி வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்.

    இந்தியாவின் விண்வெளித்துறை வளர்வதோடு பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ககன்யான் திட்டத்தில் பயன்படும் கருவிகள் பெரும்பாலும் இந்தியாவில் தயாரானவை என தெரிவித்தார்.

    • மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் திட்டத்திற்கு லான்ச் வெஹிக்கிள் மார்க்-2 என்ற கனரக ராக்கெட் தேர்வு செய்யப்பட்டது.
    • கிரையோஜெனிக் என்ஜின் சோதனை 7-வது முறையாக நடத்தப்பட்டது.

    நெல்லை:

    ககன்யான் திட்டத்தின் மூலம் வருகிற 2025-ம் ஆண்டில், 3 இந்திய விண்வெளி ஆய்வாளர்கள், விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளனர். இவர்கள் செல்லும் ராக்கெட் ஏவும் வாகனம் மார்க்-3 (எல், வி.எம்-3) வகையை சேர்ந்தது. இந்திய விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள்.

    இந்த ராக்கெட்டுக்கான சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. அந்தவகையில் இதில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை, நெல்லை மாவட்டம் மகேந்திரிகிரியில் இஸ்ரோ வளாகத்தில் நேற்று நடந்தது.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் திட்டத்திற்கு லான்ச் வெஹிக்கிள் மார்க்-2 (எல்.வி.எம்.3) என்ற கனரக ராக்கெட் தேர்வு செய்யப்பட்டது. இது கிரையோஜெனிக் என்ஜின் மூலம் விண்வெளிக்கு இயக்கப்படுகிறது.

    இந்த கிரையோஜெனிக் என்ஜின் சோதனை 7-வது முறையாக நடத்தப்பட்டது. என்ஜின் சகிப்புத்தன்மை சோதனைகள், செயல்திறன் மதிப்பீடு, கலவை விகிதம் மற்றும் உந்து சக்தி தொட்டி அழுத்தம் ஆகிய சோதனைகள் செய்யப்பட்டன.

    தற்போது, மனித மதிப்பீடுகளின் தரநிலைகளுக்கு சிஇ-20 என்ஜின் தகுதி பெற, 4 என்ஜின்கள் வெவ்வேறு இயக்க நிலைமைகளின் கீழ் 8 ஆயிரத்து 810 வினாடிகளுக்கு 39 முறை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. குறைந்தபட்ச மனித மதிப்பீடு தகுதித் தேவையான 6 ஆயிரத்து 350 வினாடிகள் நடந்தது. இதன் மூலம் தரைத் தகுதிச்சோதனைகள் நிறைவடைந்துள்ளன.

    ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோல் சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது. ககன்யான் பணியின் வளர்ச்சியை நோக்கிய ஒரு பெரிய நகர்வில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் கிரையோஜெனிக் என்ஜின் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது பெருமிதம் அளிக்கிறது என்றனர்.

    • மாணவர்களின் இருப்பிடங்களின் அடிப்படையில் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • கடந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்தனர்.

    அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து பள்ளி செல்லும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இளம் உள்ளங்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்காக "இளம் விஞ்ஞானிகள் திட்டம்" (யுவ விஞ்ஞானி கார்யக்ரம்) என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முறையே 111, 153 மற்றும் 337 மாணவர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாணவர்களின் இருப்பிடங்களின் அடிப்படையில் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. நடப்பாண்டு, இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற மார்ச் 20-ந்தேதி வரை https://jigyasa.iirs.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    இந்த திட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்தனர். இதனால் இஸ்ரோவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவை, விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகளுக்கு ஏற்ப இளம் மாணவர்களுக்கு வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

    குறிப்பாக, நாட்டின் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளித்து இளம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதற்காக இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டது.

    2 வார கால வகுப்பறை பயிற்சி, பரிசோதனைகளின் செயல்முறை விளக்கம், போட்டிகள், ரோபோடிக் கிட், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாதிரி ராக்கெட் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும்.

    வகுப்பறை விரிவுரைகள், ரோபாட்டிக்ஸ் சவால், ராக்கெட், செயற்கைகோள்களின் வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதி வருகைகள் மற்றும் விண்வெளி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் ஆகியவை இந்தப் பாடத்திட்டத்தில் அடங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • இஸ்ரோ இன்சாட்-3டிஎஸ் என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது.
    • எப்-14 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவியது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, இன்சாட்-3டிஎஸ் என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் 17.2 24 அன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்தது. இதற்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் செலுத்துவதற்கான 27.5 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் தொடங்கியது.

    எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இஸ்ரோ அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி.எப்-14 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது.
    • எப்-14 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.35 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது.

    இதனை, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.35 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

     


    இதற்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப் பணியாக 27.5 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது.

    எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    ×