என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: இலக்குகளை நோக்கி... தடைகளை மீறி... சத்தமின்றி சாதித்த இஸ்ரோ
- இஸ்ரோ தனது 100-வது ராக்கெட்டை கடந்த ஜனவரி 29-ல் விண்ணில் ஏவி சாதனை படைத்தது.
- விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் நிலவை ஆய்வு செய்வதற்காக 'சந்திரயான்', செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 'மங்கல்யான்', சூரியனை ஆய்வு செய்வதற்காக 'ஆதித்யா' உள்ளிட்ட திட்டங்கள் மூலம் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதே சமயம், இஸ்ரோவின் கனவு திட்டங்களில் ஒன்றான விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வரும் 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 விண்ணில் ஏவப்படும். இது சந்திரனுக்கு சென்று திரும்பும்போது மண், பாறை மாதிரி எடுத்து வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ தனது 100-வது ராக்கெட்டை கடந்த ஜனவரி 29-ல் விண்ணில் ஏவி சாதனை படைத்தது.

2026 டிசம்பர் முதல் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பயன்பாட்டுக்கு வரும்.
2027-க்குள் இந்தியாவின் ககன்யான் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான திட்டம்.
இந்தியாவுக்காக 2035-ல் ஒரு விண்வெளி நிலையம் அமைக்கத் திட்டத்துக்காக முதல் கட்ட ஒப்புதல்.
இந்தியாவில் 5 ஆண்டுகளில் 50 ராக்கெட்களை ஏவுவதற்கு இலக்கு நிர்ணயம்.
அடுத்த 3 ஆண்டுகளில் 150 செயற்கைக் கோள்களாக உயர்த்த திட்டம்.
இஸ்ரோவின் திட்டங்கள் இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து, மக்களை காப்பாற்ற உதவுகின்றது.
அமெரிக்க அரசு விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்புகளை மீறி தாம் கொண்டுள்ள இலக்குகளை நோக்கி செயல்படும் விதமாக இந்திய அரசு இஸ்ரோவுக்கான நிதிகளை தாராளமாக ஒதுக்கி வருகிறது.
இஸ்ரோவில் பணியாற்றிய தமிழர்கள்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், விஞ்ஞானி மயில்சாமி, சிவன் உள்ளிட்ட பலர்.

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் கடந்த ஜனவரி முதல் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் இஸ்ரோவில் கிட்டத்தட்ட 4 தசாப்தங்களாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






