என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகுபலி ராக்கெட்"

    • இந்தியாவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவுதல் திறனை வலுப்படுத்துகிறது
    • உலகளாவிய ராக்கெட் ஏவுதல் சந்தையில் நமது வளர்ந்து வரும் பங்கை உறுதிப்படுத்துகிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்களை பொறுத்தி விண்ணில் ஏவி வருகிறது. இந்தநிலையில், அதிக எடை கொண்ட அதாவது 6 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை முதன் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவியது.

    இதுபோன்ற செயற்கைக்கோள்களை இதற்கு முன்பு பிரெஞ்சு கயானாவிலிருந்து தான் ஏவப்பட்டு வந்தது. தற்போது அதிக எடையை தாங்கி செல்லும் ராக்கெட்டுகளை இஸ்ரோ வடிவமைப்பதால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்கள் இந்திய மண்ணில் இருந்து ஏவப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.55 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 யை விண்ணில் பாய்ந்தது. இதில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.1 டன் எடை கொண்ட 'புளுபேர்ட்-6' என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், பாகுபலி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எஸ்கே பதிவில், "இந்தியாவின் விண்வெளித் துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் கனமான செயற்கைக்கோளான, அமெரிக்காவின் ப்ளூபேர்ட் பிளாக்-2 விண்கலத்தை அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய LVM3-M6 ஏவுதல், இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

    இது இந்தியாவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவுதல் திறனை வலுப்படுத்துகிறது மற்றும் உலகளாவிய ராக்கெட் ஏவுதல் சந்தையில் நமது வளர்ந்து வரும் பங்கை உறுதிப்படுத்துகிறது.

    இது தற்சார்பு இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது. இதற்காக கடினமாக உழைத்த விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்.விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து மேலும் உயரப் பறக்கிறது!" என்று பதிவிட்டுள்ளார்.

    • ராக்கெட்டுக்கான இறுதிக்கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.
    • இம்மாதம் 15 மற்றும் 21-ம் தேதிகளில் புளூபேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்களை பொறுத்தி விண்ணில் ஏவி வருகிறது. இந்தநிலையில், அதிக எடை கொண்ட அதாவது 6 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை முதன் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதுபோன்ற செயற்கைக்கோள்களை இதற்கு முன்பு பிரெஞ்சு கயானாவிலிருந்து தான் ஏவப்பட்டு வந்தது. தற்போது அதிக எடையை தாங்கி செல்லும் ராக்கெட்டுகளை இஸ்ரோ வடிவமைப்பதால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்கள் இந்திய மண்ணில் இருந்து ஏவப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.55 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 யை விண்ணில் பாய்ந்தது. இதில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.1 டன் எடை கொண்ட 'புளுபேர்ட்-6' என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது.

    ராக்கெட்டுக்கான இறுதிக்கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.

    இம்மாதம் 15 மற்றும் 21-ம் தேதிகளில் புளூபேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    • ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது.
    • ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 யை விண்ணில் ஏவுகிறது. இதில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.5 டன் எடை கொண்ட'புளுபேர்ட்-6' என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது.

    இந்த ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் ராக்கெட்டுக்கான இறுதி கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.

    விண்வெளி நிறுவனத்தின் நீண்டகால பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக ராக்கெட் ஏவுவதற்கு முன்பாக திருப்பதி திருமலை வெங்கடேசுவர சாமி கோவிலில் பிரார்த்தனை செய்வது வழக்கம். அந்தவகையில், ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுடன் திருமலைக்கு நேற்று சென்று கோவில் சடங்குகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • ராக்கெட் முழுமையாக ஒன்று சேர்க்கப்பட்டு செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
    • ஏவுதளத்திற்கு முந்தைய நடவடிக்கைகளாக ராக்கெட் கடந்த 26-ந்தேதி ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டு உள்ளது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 2-ந்தேதி பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்படும் 'எல்.வி.எம்-3' ராக்கெட் மூலம் 4 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட 'ஜிசாட்-7 ஆர்' என்று அழைக்கப்படும் 'சி.எம்.எஸ்-03' என்ற ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.

    இந்த ராக்கெட் முழுமையாக ஒன்று சேர்க்கப்பட்டு செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, ஏவுதளத்திற்கு முந்தைய நடவடிக்கைகளாக ராக்கெட் கடந்த 26-ந்தேதி ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான இறுதிகட்டப்பணியான 'கவுண்ட்டவுன்' வருகிற 1-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    ×