என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் கலந்து கொண்டது எனக்கு எப்போது மகிழ்ச்சியாக இருந்தது.
- ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தற்போது 100 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது.
பிரபல எழுத்தாளரும், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளருமான லெக்ஸ் ப்ரீட்மேனுக்கு பிரதமர் மோடி பேட்டி கொடுத்துள்ளார்.இந்த பேட்டியில் பல்வேறு முக்கிய தகவல்களை மோடி பகிர்ந்துள்ளார்.
அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "ஆர்.எஸ்.எஸ். போன்ற புனிதமான அமைப்பின் மூலமாக நான் வாழ்க்கையின் நோக்கத்தையும் விழுமியங்களையும் கற்றுக்கொண்டதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.
என்னுடைய குழந்தை பருவத்தில் ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் கலந்து கொண்டது எனக்கு எப்போது மகிழ்ச்சியாக இருந்தது. நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்பதை தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எனக்கு கற்றுக்கொடுத்தது. நாடுதான் அனைத்துக்கும் மேலானது. மக்களுக்குச் செய்யும் சேவை கடவுளுக்குச் செய்வதைப் போன்றது என்பதை ஆர்.எஸ்.எஸ். எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது. அத்தகைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தற்போது 100 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் துறவிகளுடன் நேரத்தைச் செலவிட்டதை நான் எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். துறவிகளின் வழிகாட்டுதலால் எனது ஆன்மீகத் தேடல் விரிவடைந்தது.
எனது வாழ்க்கையை ஒழுங்குபடுத்தியதில் ராமகிருஷ்ணா மிஷன், சுவாமி விவேகானந்தர், ஆர்.எஸ்.எஸ். இன் சேவை மனப்பான்மை ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன" என்று தெரிவித்தார்.
- .டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் சமந்தா
- படத்தின் கதையை வசந்த் எழுத பிரவீன் இயக்கியுள்ளார்.
நடிகை சமந்தா சமீபத்தில் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார்.டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சுபம் என்ற திரைப்படத்தை தயாரித்து முடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக சமந்தா போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். சுபம் திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது.
படத்தின் கதையை வசந்த் மரிகாண்டி எழுத பிரவீன் இயக்கியுள்ளார். இவர்கள் இதற்கு முன் சினிமா பண்டி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஹர்ஷித், ஷிரியா, சரண், ஷாலினி, கவிரெடி ஸ்ரீனிவாஸ் மற்றும் ஷ்ராவனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் போஸ் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைப்பெற்று வருகிறது விரைவில் திரையில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எனது அப்பா தினமும் அதிகாலை 4:30 மணியளவில் டீ கடைக்கு செல்வார்.
- டீ கடையில் கற்ற அனுபவங்களை எனது பொது வாழ்க்கையில் பயன்படுத்தினேன்
பிரபல எழுத்தாளரும், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளருமான லெக்ஸ் ப்ரீட்மேனுக்கு பிரதமர் மோடி பேட்டி கொடுத்துள்ளார்.இந்த பேட்டியில் பல்வேறு முக்கிய தகவல்களை மோடி பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில், தனது குழந்தை பருவம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "நான் என் தந்தையின் தேநீர் கடையில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்தவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அந்தக் கற்றல்களை எனது பொது வாழ்க்கையில் பயன்படுத்தினேன்
எனது அப்பா தினமும் அதிகாலை 4:30 மணியளவில் வீட்டை விட்டு கிளம்பி, பல கோயில்களுக்குச் சென்று, பின்னர் தான் டீ கடைக்கு செல்வார். கிராமத்தில் உள்ள மக்கள் எனது அப்பாவின் காலடிச் சத்தத்தை கேட்டாலே அந்த நேரத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு அவர் ஒழுக்கமாக இருந்தார்.
என் குழந்தைப்பருவம் பெரும் வறுமையிலேயே கழிந்தது. என் வெள்ளை ஷூ-வை பாலிஷ் போட சாக்பீஸ் சேகரித்துக் கொண்டிருப்பேன்" என்று தெரிவித்தார்.
- ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ. 1,100 கோடியை கடந்து அசத்தியது.
- இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இவர் கடைசியாக இயக்கிய 'ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ. 1,100 கோடியை கடந்து அசத்தியது. இந்த நிலையில், இயக்குநர் அட்லி அடுத்து இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதை உறுதி செய்துள்ளார்.
அட்லி மற்றும் அல்லு அர்ஜூன் இணையும் படத்தில் இளம் இசையமைப்பாளர் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அல்லு அர்ஜுன் கடைசியாக நடித்து வெளியான புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதேப்போல் அட்லீயுடன் இணைந்து நடிக்கும் இந்த படமும் பெரும் வசூலை பெற்று வெற்றி படமாக இருக்கும் என மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஷாருக்கான் நடிக்கும் பதான் 2 திரைப்படத்தில் வில்லனாக அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நான் பேசிய கருத்தை இட்டுக்கட்டி திரித்து பரப்புகின்றனர்
- காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, இஸ்லாமியர்கள் குறித்து இழிவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.
த.வெ.க. தலைவர் விஜய் அண்மையில் ரம்ஜான் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தொடர்பாக திமுக கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, "இஸ்லாமியர்கள் குறித்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மன்னிப்பு தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "நான் பேசிய கருத்தை வேறுவிதமாக சிலர் இட்டுக்கட்டி திரித்து பரப்புகின்றனர். இஸ்லாமியர்கள் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சியோ வெறுப்போ இல்லை; என் பேச்சில் வார்த்தை தடுமாறி இருந்தால் அதற்காக என் வருத்ததை பதிவு செய்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- கூட்ட நெரிசலைத் தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததே இன்றைய உயிரிழப்புக்கு காரணம்.
- உயிரிழந்த ஓம்குமாரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்காக , 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்று காத்திருந்த காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் (50) என்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
இந்நிலையில், "பக்தர் ஓம்குமாரின் உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசும், அறநிலையத்துறை அமைச்சருமே முழு பொறுப்பு" என இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்ய 100 ரூபாய் கட்டண வரிசையில் காத்திருந்த காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவர் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் திருச்செந்தூர் கோயிலுக்கு திமுக அரசின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு
சென்றிருந்த போதே, கோயிலில் கட்டண வரிசை உட்பட அனைத்து தரிசன வழிகளிலும் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படுவதை மக்கள் முறையிட்ட போது, "திருப்பதிக்கு போறான், 24 மணி நேரம் நிப்பான்" என்று பக்தர்களின் உணர்வுகளையும் முறையிடலையும் உதாசீனப்படுத்தி பேசியதோடு அல்லாமல், கூட்ட நெரிசலைத் தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததே இன்றைய உயிரிழப்புக்கு காரணம்.
எனவே, பக்தர் ஓம்குமாரின் உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசும், அறநிலையத்துறை அமைச்சருமே முழு பொறுப்பு!
திருப்பணி என்பது பக்தியுடன் செய்யப்பட வேண்டியது. ஆனால், பகல்வேஷம் போடும் இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில் அதுவும் வெறும் விளம்பர நோக்கத்தில் மட்டும் தான் செய்யப்பட்டு வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்யவேண்டும் என்ற எண்ணம். இந்த அரசுக்கு துளியும் இல்லை. இது கடும் கண்டனத்திற்குரியது.
உயிரிழந்த ஓம்குமாரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், இனியேனும் இந்த விளம்பர நாடகங்களை எல்லாம் விட்டுவிட்டு, அறநிலையத்துறையை அதற்குரிய அறத்துடன் வழிநடத்த வேண்டுமென மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தீயை அணைக்கும் பணியில் விருகம்பாக்கம் உள்பட 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
- தீ விபத்தால் ராமாபுரம் சுற்றுவட்டாரம் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ராமாபுரம் அரசமரம் ஜங்ஷனில் அமைந்துள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீயை அணைக்கும் பணியில் விருகம்பாக்கம் உள்பட 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
தீ விபத்தால் ராமாபுரம் சுற்றுவட்டாரம் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் குடோன், கார் மெக்கானிக் கடை என அடுத்தடுத்து மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தீ பரவியதால் கொளுந்துவிட்டு எரிகிறது.
- ரஷிய அதிபர் புதினிடம் 'இது போருக்கான நேரம் கிடையாது' என்று என்னால் பேச முடியும்.
- பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவும், உக்ரைனும் உடன்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
பிரபல எழுத்தாளரும், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளருமான லெக்ஸ் ப்ரீட்மேனுக்கு பிரதமர் மோடி பேட்டி கொடுத்துள்ளார்.இந்த பேட்டியில் பல்வேறு முக்கிய தகவல்களை மோடி பகிர்ந்துள்ளார்.
அதில், உக்ரைன் - ரஷியா போர் குறித்து ப்ரீட்மேன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "ரஷியா மற்றும் உக்ரைனுடன் இந்தியா நல்ல நட்புறவை கொண்டுள்ளது. ரஷிய அதிபர் புதினிடம் 'இது போருக்கான நேரம் கிடையாது' என்று என்னால் பேச முடியும்.
அதேபோல உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் உங்களுக்காக உலகில் எத்தனையோ மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். போரில் நம்மால் ஒருபோதும் நல்ல முடிவை எட்ட முடியாது' என்று எடுத்துக்கூற முடியும்.
உக்ரைன் - ரஷியா போர் தொடங்கிய நேரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் சவாலானதாக இருந்தது. ஆனால், தற்போது சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்கிற நம்பிக்கை உருவாகியுள்ளது.
பேச்சுவார்த்தை மூலமாக இந்த போரை நிறுத்த முடியும். பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவும், உக்ரைனும் உடன்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
இந்தப் போரில் இந்தியா யாருக்கும் ஆதரவாக இல்லை. ஆனால், அமைதியின் பக்கமும் சமாதானத்தின் பக்கமும் இந்தியா நிற்கிறது. இந்தப் போரினால் உலக நாடுகளே பாதிப்பு அடைந்துள்ளது.
இந்த போரினால் உணவு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, அமைதியை ஏற்படுத்துவதற்கு உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். நான் நடுநிலையானவன் கிடையாது. நான் எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறேன்'' என்று தெரிவித்தார்.
- கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது.
- திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் அடுத்ததாக பெருசு என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். படத்தின் இசையை அருண் ராஜ் மெற்கொண்டுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தில் வைபவ், சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை, இறந்த பிறகு அவரால் ஏற்படும் பிரச்சனை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் சிக்கலை சுற்றி கதைக்களம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் இளம் நடிகரான ஜீவா பாலச்சந்திரன். இவரது கதாப்பாத்திரம் மக்களிடையே பெரும் பாராட்டை பெற்று வருகிறது.
இவர் இதற்கு முன் சமுத்திரகனி நடிப்பில் வெளியான சித்திரை செவ்வானம் திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பு திறமையை தமிழ் திரையுலகம் சீக்கிரம் கவனித்து அவருக்கான கதாப்பாத்திரங்களை வழங்கி பலரின் கவனத்தையும் அன்பையும் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வைரமுத்துவை பாராட்ட பல்வேறு நாட்டு அறிஞர்கள் வந்தது பெருமைக்குரியது.
- பல்வேறு நாடுகளின் அறிஞர்கள், பேராசியிர்கள் உள்ளிட்ட 22 பேர் வைரமுத்தியம் விழாவுக்கு வந்துள்ளனர்.
சென்னை எம்ஆர்சி நகரில் வைரமுத்தியம் என்ற பெயரிலான கவிஞர் வைரமுத்துவின் படைப்பிலக்கிய பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
அங்கு வைரமுத்துவின் படைப்பிலக்கியம் பன்னாட்டு கருத்தரங்கத்தில் கட்டுரை நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனை எம்பி ஜெகத்ரட்சகன் பெற்றுக் கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பொன்மாலை பொழுதில் தன் திரையிசை வாழ்வை தொடங்கிய வைரமுத்துவுக்கு இது உண்மையிலேயே பொன்னான நாள்.
இப்படி ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன்.
தமிழின் புகழை உலகெல்லாம் கொண்டு சேர்த்த வைரமுத்துவை பாராட்ட பல்வேறு நாட்டு அறிஞர்கள் வந்தது பெருமைக்குரியது.
பல்வேறு நாடுகளின் அறிஞர்கள், பேராசியிர்கள் உள்ளிட்ட 22 பேர் வைரமுத்தியம் விழாவுக்கு வந்துள்ளனர்.
உலக கவியாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டார் வைரமுத்து என்றே எண்ணத் தோன்றுகிறது.
கலைஞரின் இலக்கிய மகன் வைரமுத்து. வைரமுத்துவின் 17 படைப்புகளை கலைஞர் வெளியிட்டிருக்கிறார். வைரமுத்துவுக்கு கவிப்பேரரசர் என பெயரிட்டு அழைத்தவர் கலைஞர்.
இலக்கியத்தின் எல்லா பக்கங்களிலும் நுழைந்து வெற்றியை சாதித்து காட்டியவர் வைரமுத்து.
நமது ஜெகத்ரட்சகன் எம்பி வஞ்சனையில்லாமல் அனைவரையும் பாராட்டக் கூடியவர்.
இவ்வாறு கூறினார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
- 100வது டெஸ்ட் போட்டிக்கு நினைவு பரிசு வழங்க தோனியை அழைத்தேன், அவரால் வரமுடியவில்லை
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களாக அஷ்வின், ஸ்ரீகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய அஷ்வின், "என்னுடைய 100வது டெஸ்ட் போட்டிக்கு நினைவு பரிசு வழங்க தோனியை அழைத்தேன், அவரால் வரமுடியவில்லை. ஆனால், மீண்டும் என்னை சிஎஸ்கேவுக்கு அழைத்து மறக்க முடியாத பரிசை தோனி கொடுத்து விட்டார்" என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
முன்னதாக பேசிய ஸ்ரீகாந்த், "வெங்கட்ராமனுக்குப் பிறகு தமிழகத்திலிருந்து இந்தியாவுக்காக உச்சம் தொட்ட ஸ்பின்னர் அஷ்வின்தான். அஷ்வினை தோனி நன்றாகப் பயன்படுத்தி மெருகேற்றினார். பஞ்சாப், ராஜஸ்தான் என ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு அஷ்வின் மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.
- குல்தீப்புடன் பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
- குல்தீப்புக்கும் எனக்கும் ஒரு சிறந்த பிணைப்பு உள்ளது
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கடைசியாக 2023 ஆகஸ்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அதன்பின்பு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதன்பின்பு அவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுப்பது குறித்து சாஹல் மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளுக்கு பேட்டி அளித்த சாஹல், " இந்திய அணி நான் கம்பேக் கொடுப்பது எனது கையில் இல்லை. குல்தீப் தான் தற்போது உலகின் சிறந்த ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது பந்துவீச்சைப் பார்த்தால் இது தெளிவாக தெரிகிறது. குல்தீப்புடன் பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எங்களுக்கு ஒரு சிறந்த பிணைப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.
சாஹலும் குல்தீப்பும் ஒன்றாக 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 130 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஐபிஎல் 2025 சீசனில் குல்தீப் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடுகிறார். சாஹல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






