என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • எம்.எஸ்.தோனி தலைமையில் திசாரா பெரேரா விளையாடியுள்ளார்.
    • ஐ.பி.எல். தொடரில் சென்னை மற்றும் புனே அணிகளுக்காக விளையாடினார்.

    கொழும்பு:

    ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பையையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் வென்றுள்ளார்.

    எம்.எஸ்.தோனி சி.எஸ்.கே. கேப்டனாக இருந்தபோது பல இளம் வீரர்களின் திறமைகளை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய வீரர்கள் மட்டுமின்றி ஐ.பி.எல். தொடர்களில் பல வெளிநாட்டு வீரர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    இந்நிலையில், இலங்கை முன்னாள் வீரர் திசாரா பெரேரா சமீபத்திய அளித்த பேட்டியில் பேசியதாவது:

    சில நேரங்களில் நான் தடுப்பாட்டம் விளையாடும்போது எம்.எஸ். தோனி என்னிடம் வந்து பெரேரா நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் நல்ல பவர் ஹிட்டர். எனவே இப்படி விளையாடாமல் ஒவ்வொரு பந்திலும் அதிரடி காட்டுங்கள் என்று சொல்வார். அது போன்ற வார்த்தைகள் இளம் வீரர்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை உருவாக்கும். அந்த சமயத்தில் எனக்கு 20 வயது மட்டுமே இருந்தது. அப்போது அவருடன் மகிழ்ச்சியாக வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

    நான் புனே அணிக்காக விளையாடிய போட்டியில் ஆரம்பத்திலேயே நாங்கள் 4 - 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினோம். அந்தச் சமயத்தில் களமிறங்கிய எனக்கு அதிரடியாக விளையாடலாமா அல்லது சிங்கிள் எடுக்கலாமா என்ற குழப்பம் இருந்தது.

    அப்போது என்னிடம் வந்த எம்எஸ், 'பெரேரா நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என கேட்டார். அதற்கு நாம் விக்கெட்டுகளை இழந்துள்ளோம் என்று சொன்னேன். அதைக் கேட்ட தோனி ஒவ்வொரு பந்திலும் அதிரடி காட்டுங்கள் என்று சொன்னார்.

    அதைப் பின்பற்றி விளையாடியதால் ஒரு கட்டத்தில் 60/5 என்ற நிலையில் இருந்த நாங்கள், கடைசியில் 190/7 என்ற ஸ்கோர் எடுத்தோம். நான் 40 ரன்கள் அடித்தேன். தோனி 80 முதல் 90 ரன்கள் அடித்தார்.

    தனிப்பட்ட முறையில் தோனி எனக்கு இந்த உலகின் மிகச்சிறந்த கேப்டன். அவரது தலைமையில் நான் சென்னை மற்றும் புனே அணிகளுக்காக விளையாடியுள்ளேன். என்னை எப்போதும் நம்பிய அவர் பவர் ஹிட்டராக உருவாக நிறைய தன்னம்பிக்கையை கொடுத்தார் என தெரிவித்தார்.

    • கோட்டூர்புரத்தில் 2 பேரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.
    • படுகொலை செய்யப்பட்ட சுரேஷ், காஞ்சிபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி.

    சென்னை:

    சென்னை, கோட்டூர்புரத்தில் அருண் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட சுரேஷ், காஞ்சிபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என தகவல் வெளியானது.

    கோட்டூர்புரத்தில் 2 பேரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக ஜெமெல்லி மருத்துவமனை தெரிவித்தது.
    • போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குழந்தைகள் பலர் மருத்துவமனைக்கு வந்தனர்,

    ரோம்:

    கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிப்ரவரி 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. போப் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என கடந்த வாரம் ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

    இந்நிலையில், போப் பிரான்சிஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவாது முதல் புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

    அதில் போப் பிரான்சிஸ் வழிபாட்டு உடைகளின் வழக்கமான ஊதா நிற ஸ்டோலை அணிந்து, மருத்துவமனை தேவாலயத்தின் பலிபீடத்திற்கு முன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது காட்டப்பட்டுள்ளது.

    ஜெமெல்லி மருத்துவமனையின் 10-வது மாடியில் உள்ள போப்பாண்டவர் குடியிருப்பில் மற்ற பாதிரியார்களுடன் திருப்பலி கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்றார் என வாடிகன் தெரிவித்துள்ளது.

    மேலும், போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குழந்தைகள் பலர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

    இதுதொடர்பாக போப் பிரான்சிஸ் கூறுகையில், எனக்காகப் பல குழந்தைகள் ஜெபிக்கிறார்கள் என்பது தெரியும். அவர்களில் சிலர் இன்று ஜெமெல்லிக்கு வந்தனர். அன்பான குழந்தைகளே நன்றி, போப் உங்களை நேசிக்கிறார், உங்களைச் சந்திக்க எப்போதும் காத்திருக்கிறார் என தெரிவித்தார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் பெலாரசைச் சேர்ந்தவரும், நம்பர் 1 வீராங்கனையுமான அரினா சபலென்கா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.

    இதில் சபலென்கா முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட மிர்ரா ஆண்ட்ரீவா அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    சமீபத்தில் நடைபெற்ற துபாய் ஓபன் டென்னிஸ் தொடரிலும் மிர்ரா ஆண்ட்ரீவா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவை சூறாவளி தாக்கிய சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • பலத்த காற்றால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு 2 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மத்திய, தென் மாகாணங்களை சூறாவளி கடுமையாக தாக்கியது. அந்நாட்டின் மிசோரி, மிசிசிபி, அலபாமா உள்ளிட்ட மாகாணங்களை சூறாவளி தாக்கியது.

    பலத்த காற்றுடன் சூறாவளி வீசியதால் மரங்கள் வேரோடு சரிந்தன. வீடுகள், வணிக வளாகங்கள் உள்பட பல்வேறு கட்டிடங்களின் மேற்கூரை சூறாவளியில் தூக்கி வீசப்பட்டது. சூறாவளியால் பல வீடுகள் முழுமையாக சேதமடைந்தன.

    இந்நிலையில், அமெரிக்காவை தாக்கிய சூறாவளியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். சூறாவளியால் அதிக பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    டெக்சாஸ், ஒக்லஹோமா, அர்கான்சாஸ், மிசவுரி, இல்லினாய்ஸ், இன்டியானா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் பலத்த காற்றால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு 2 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டன.

    ஏற்கனவே, அமெரிக்காவில் காட்டுத்தீ பரவல், புழுதி புயல் மற்றும் பனி பாதிப்புகளும் மக்களை இன்னலில் தள்ளியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
    • இரு நாடுகள் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் 5 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் உயர்மட்ட குழுவினரும் வந்துள்ளனர்.

    பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுக்கு டெல்லி விமான நிலையத்தில் மத்திய மந்திரி சிங் பாகேல் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேரில் சந்தித்தார்.

    மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்டோரைச் சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படும். இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் நோக்கில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ராய்ப்பூர்:

    முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.

    மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இந்நிலையில், ராய்ப்பூரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.

    தொடக்க ஆட்டக்காரர் டுவைன் சுமித் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ஓரளவு நிலைத்து விளையாடி அரை சதம் கடந்த சிம்மன்ஸ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் வினய் குமார் 3 விக்கெட்டும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 50 பந்தில் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார். சச்சின் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆட்ட நாயகன் விருது அம்பதி ராயுடுவுக்கு வழங்கப்பட்டது.

    • இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 2,713 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
    • கோவில்களுக்குச் சொந்தமான ரூ.7,197 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.

    சென்னை:

    வடபழனி முருகன் திருக்கோவிலில் 4 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருமணம் நடத்தி வைத்து சீரிவரிசைப் பொருட்களை வழங்கினார். அதன்பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு முதலாம் ஆண்டு 500 ஜோடிகள், இரண்டாம் ஆண்டு 600 ஜோடிகள், மூன்றாம் ஆண்டு 700 ஜோடிகளுக்கு கட்டணமில்லா திருமணம் நடத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டன.

    இன்று வடபழனியில் நடைபெற்ற 4 ஜோடிகளுக்கான திருமணத்துடன் சேர்த்து இதுவரை திருக்கோவில்கள் சார்பில் 1,786 ஜோடிகளுக்கு 4 கிராம் தங்கத் தாலியுடன் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களுடன் திருமணங்களை நடத்தி வைத்துள்ளோம்.

    இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 2,713 திருக்கோவில்களுக்கு இதுவரை குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கோவில்களுக்கு சொந்தமான ரூ.7,197 கோடி மதிப்பிலான 7,436.70 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

    ஒளிவு மறைவற்ற வகையில், எந்தெந்த பணிகளுக்கு உபயதாரர்கள் நிதியளிக்கின்றார்களோ அதனை முறையாக பயன்படுத்துகின்ற ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது.

    தினந்தோறும் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த ஒரு மாநில கட்சிக்கு தலைவர் இருப்பாரென்றால், அவர் அண்ணாமலை ஒருவராகத்தான் இருக்க முடியும்.

    காமாலை நோய் பிடித்தவருக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல், எதை எடுத்தாலும் குறை சொல்லியே பழக்கப்பட்ட அண்ணாமலை நிதிநிலை அறிக்கை குறித்து நிறைவாக கூறுவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

    எங்களை வசை பாடியவர்களும் இன்றைக்கு வாழ்த்து சொல்கிற அளவிற்கு நிதிநிலை அறிக்கையை உலக அரங்கிலே தூக்கி பிடித்த, மதிநுட்பம் நிறைந்த அரசியல் தீர்க்கதரிசியாக முதலமைச்சர் திகழ்கின்றார்.

    நிதிநிலை அறிக்கையானது ஒன்றியம் கடந்து உலக நாடுகள் பாராட்டுகின்ற அளவிற்கு இருக்கின்ற போது மக்களுடைய ஆதரவைப் பெறாத அண்ணாமலை போன்றவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

    வேளாண்மை நிதிநிலை அறிக்கையை உண்மையான விவசாய குடிமக்கள் வரவேற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்தார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.

    இன்று நடந்த முதல் அரையிறுதியில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனேவிடம் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    இந்நிலையில், இரண்டாவது அரையிறுதியில் தரவரிசையில் நம்பர் 2 வீரரும், ஸ்பெயினைச் சேர்ந்தவருமான கார்லோஸ் அல்காரஸ், பிரிட்டிஷ் வீரர் ஜாக் டிராபர் உடன் மோதினார்.

    இதில் டிராபர் முதல் செட்டை 6-1 என எளிதில் வென்றார். அடுத்த செட்டை அல்காரஸ் 6-0 என கைப்பற்றினார். வெற்றியாளரை

    நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை டிராபர் 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் அல்காரஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    ஏற்கனவே, முன்னணி வீரர்களான ஜோகோவிச், மெத்வதேவ், சிட்சிபாஸ் உள்ளிட்டோரும் தொடரில் இருந்து வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாளை அதிகாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜாக் டிராபர், ஹோல்ஜர் ரூனேவுடன் மோதுகிறார்.

    • சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.
    • படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கிறார்.

    சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

    படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது ஐதராபாத் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது

    படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் படத்தில் ஸ்வசிகா , மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி,அனகா மாயா ரவி நடிக்கவுள்ளனர்.

    படத்தின் இசையமைப்பு வேலைகள் தொடங்கியுள்ளது. இசையமைப்பாளர் சாய் அபியங்கரும் ஆர்.ஜே பாலாஜியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் கலந்து கொண்டது எனக்கு எப்போது மகிழ்ச்சியாக இருந்தது.
    • ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தற்போது 100 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது.

    பிரபல எழுத்தாளரும், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளருமான லெக்ஸ் ப்ரீட்மேனுக்கு பிரதமர் மோடி பேட்டி கொடுத்துள்ளார்.இந்த பேட்டியில் பல்வேறு முக்கிய தகவல்களை மோடி பகிர்ந்துள்ளார்.

    அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "ஆர்.எஸ்.எஸ். போன்ற புனிதமான அமைப்பின் மூலமாக நான் வாழ்க்கையின் நோக்கத்தையும் விழுமியங்களையும் கற்றுக்கொண்டதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

    என்னுடைய குழந்தை பருவத்தில் ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் கலந்து கொண்டது எனக்கு எப்போது மகிழ்ச்சியாக இருந்தது. நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்பதை தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எனக்கு கற்றுக்கொடுத்தது. நாடுதான் அனைத்துக்கும் மேலானது. மக்களுக்குச் செய்யும் சேவை கடவுளுக்குச் செய்வதைப் போன்றது என்பதை ஆர்.எஸ்.எஸ். எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது. அத்தகைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தற்போது 100 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் துறவிகளுடன் நேரத்தைச் செலவிட்டதை நான் எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். துறவிகளின் வழிகாட்டுதலால் எனது ஆன்மீகத் தேடல் விரிவடைந்தது.

    எனது வாழ்க்கையை ஒழுங்குபடுத்தியதில் ராமகிருஷ்ணா மிஷன், சுவாமி விவேகானந்தர், ஆர்.எஸ்.எஸ். இன் சேவை மனப்பான்மை ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன" என்று தெரிவித்தார். 

    • .டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் சமந்தா
    • படத்தின் கதையை வசந்த் எழுத பிரவீன் இயக்கியுள்ளார்.

    நடிகை சமந்தா சமீபத்தில் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார்.டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சுபம் என்ற திரைப்படத்தை தயாரித்து முடித்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக சமந்தா போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். சுபம் திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது.

    படத்தின் கதையை வசந்த் மரிகாண்டி எழுத பிரவீன் இயக்கியுள்ளார். இவர்கள் இதற்கு முன் சினிமா பண்டி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஹர்ஷித், ஷிரியா, சரண், ஷாலினி, கவிரெடி ஸ்ரீனிவாஸ் மற்றும் ஷ்ராவனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் போஸ் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைப்பெற்று வருகிறது விரைவில் திரையில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×