வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் சந்திப்பு

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.இரு நாடுகள் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் சந்திப்பு
Published on

புதுடெல்லி:

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் 5 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் உயர்மட்ட குழுவினரும் வந்துள்ளனர்.

பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுக்கு டெல்லி விமான நிலையத்தில் மத்திய மந்திரி சிங் பாகேல் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேரில் சந்தித்தார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்டோரைச் சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படும். இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் நோக்கில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com