என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • குல்தீப்புடன் பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
    • குல்தீப்புக்கும் எனக்கும் ஒரு சிறந்த பிணைப்பு உள்ளது

    இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கடைசியாக 2023 ஆகஸ்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அதன்பின்பு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதன்பின்பு அவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதனிடையே வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுப்பது குறித்து சாஹல் மனம் திறந்து பேசியுள்ளார்.

    இந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளுக்கு பேட்டி அளித்த சாஹல், " இந்திய அணி நான் கம்பேக் கொடுப்பது எனது கையில் இல்லை. குல்தீப் தான் தற்போது உலகின் சிறந்த ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது பந்துவீச்சைப் பார்த்தால் இது தெளிவாக தெரிகிறது. குல்தீப்புடன் பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எங்களுக்கு ஒரு சிறந்த பிணைப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.

    சாஹலும் குல்தீப்பும் ஒன்றாக 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 130 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஐபிஎல் 2025 சீசனில் குல்தீப் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடுகிறார். சாஹல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நாம் பட்ஜெட்டில் குறிப்பிட்ட ரூ என்பதை தமிழை பிடிக்காதவர்கள் பெரிய செய்தியாக்கிவிட்டனர்.
    • மத்திய நிதி அமைச்சரே பலமுறை ரூ என்ற குறியீட்டை பயன்படுத்தியுள்ளனர்.

    தமிழக பட்ஜெட்டில் ரூ என குறிப்பிடப்பட்டது பூதாகரமாக வெடித்தது ஏன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

    மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியுடன் உள்ளோம் என்பதை காட்டவே ரூ என்ற எழுத்தை பெரிதாக வைத்தோம்.

    நாம் பட்ஜெட்டில் குறிப்பிட்ட ரூ என்பதை தமிழை பிடிக்காதவர்கள் பெரிய செய்தியாக்கிவிட்டனர்.

    மத்திய நிதி அமைச்சரே பலமுறை ரூ என்ற குறியீட்டை பயன்படுத்தியுள்ளனர். கல்வி நிதி கேட்ட போதெல்லாம் பதில் பேசாத மத்திய நிதியமைச்சர் ரூ என்று மாற்றப்பட்டதை பற்றி பேசுகிறார்.

    ஆங்கிலத்தில் கூட Rs என்றே பயன்படுத்துகின்றனர். அதெல்லாம் பிரச்சனையாக தெரியாதவர்களுக்கு ரூ மட்டும் பிரச்சனையாக உள்ளது" என்றார்.

    தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து ஆங்கில நாளேடுகளில் வௌியான செய்திகளை சுட்டிக்காடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தோடு கூறினார்.

    அப்போது அவர்," தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை அனைத்து ஆங்கில நாளேடுகளும் பாராட்டியுள்ளன" என்றார்.

    • விஜய் சேதுபதி 51 திரைப்படமாக ACE திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    விஜய் சேதுபதியின் 50 - வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதியின் 51 திரைப்படமாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் முதல் பாடலான உருகுது உருகுது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரெயில்வே துறைக்கு அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
    • ரெயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதினார்.

    தெற்கு ரெயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக ரெயில்வே துறைக்கு அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதனிடைய தொடர்பாக ரெயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதினார்.

    இந்நிலையில், தமிழக தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கியது தொடர்பாக ரெயில்வே தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

    அதில், ரெயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான இரண்டாம் கட்டத் தேர்வு அனைவருக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் விண்ணப்பதாரர்களுக்கு முடிந்த அளவு சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சொந்த மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்க முடியாத சூழலில் அண்டை மாநிலங்களில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை; இது ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைதான். இட ஒதுக்கீட்டுப் பிரிவு தேர்வர்கள், ரெயிலில் இலவசமாக பயணிக்க பாஸ் தரப்படும்

    • இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'.
    • இந்தப் படம் வெளியாகி 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்துள்ளது.

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்தப் படம் வெளியாகி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் வெளியாகி 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்துள்ளது.

    திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தை தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டு அங்கும் வெற்றியை கண்டது.

    இன்றுடன் திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் நிறைவடைந்துள்ளது. திரைப்படம் திரையரங்கிள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 2025 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் இதுவரை அதிக வசூல் செய்த திரைப்படமாக டிராகன் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆடைக் கட்டுப்டுகளை பின்பற்றாத பெண்களைக் கண்காணித்து தண்டிக்க டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
    • இந்தப் பெண்கள் இந்தக் குற்றச்சாட்டிற்காக மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.

    உலகம் முழுவதும், மக்களுக்கான சேவைகளை வழங்க  ஏஐ மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஈரான் இந்த விஷயத்தில் மிகவும் வித்தியாசமானது. இங்கு ஹிஜாப் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

    இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து, எதிர்ப்பை அடக்குவதற்கு, செயற்கை நுண்ணறிவு மற்றும் வெகுஜன கண்காணிப்பை ஈரான் அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கிறது.

    ஈரான் பெண்கள், சிறுமிகள் ஹிஜாப் அணிந்திருப்பதை உறுதி செய்ய ட்ரோன்கள் மற்றும் face recognition போன்ற மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்று ஐநா அறிக்கை கூறுகிறது.

     

    ஐ.நா அறிக்கையின்படி, ஈரான் தனது கட்டாய ஹிஜாப் சட்டத்தை அமல்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. ஆடைக் கட்டுப்டுகளை பின்பற்றாத பெண்களைக் கண்காணித்து தண்டிக்க டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

    இதற்காக, நாசர் மொபைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. இது ஹிஜாப் சட்டங்களை மீறும் பெண்களைப் புகாரளிக்க காவல்துறை மற்றும் பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் உதவுகிறது. இந்த செயலி உதவியுடன் வாகனத்தில் ஹிஜாப் அணியாமல் இருக்கும் பெண்களுடைய வாகன நம்பர் பிளேட், இடம் மற்றும் விதிமீறல் நேரம் ஆகியவை அதிகாரிகளைச் சென்றடைகின்றன.

    மீண்டும் மீண்டும் விதிமீறல்கள் ஏற்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று வாகன உரிமையாளருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    செப்டம்பர் 2024 முதல், ஆம்புலன்ஸ்கள், டாக்சிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களும் இதன்மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த செயலியைத் தவிர, ஹிஜாப் விதிகளை கண்காணிக்க ஈரானிய அரசாங்கம் தெஹ்ரான் மற்றும் தெற்கு பிராந்தியங்களில் வான்வழியாக டிரோன்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

    ஹிஜாப் சட்டம் ஈரானின் பாதுகாப்புப் படைகளுக்கு விதிகளைச் செயல்படுத்த விரிவாக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கும். ஈரானின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 286 இன் கீழ், இந்தப் பெண்கள் இந்தக் குற்றச்சாட்டிற்காக மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.

    2022 ஆம் ஆண்டு அறநெறிப் போலீசாரின் காவலில் 22 வயதான மஹ்சா அமினி இறந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கின. அதைத் தொடர்ந்து நடந்த அடக்குமுறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக ஐநா சபை மதிப்பிட்டுள்ளது. 

    • திருச்செந்தூர் கோவிலில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது.
    • வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஓம் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

    கோவிலில், 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்ற காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் (50) என்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று திருச்செந்தூர் கோவிலில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதற்கிடையே, வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஓம் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

    மயங்கி விருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் கோவில் சுற்று வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
    • 76 வயதான நடிகை பிந்து கோஷ், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தார்.

    பிரபல நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

    1980-களில் ரஜினி, கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு என முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவையில் கலக்கியவர் நடிகை பிந்து கோஷ்.

    இவர் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. தொடர்ந்து, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

    76 வயதான நடிகை பிந்து கோஷ், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தார்.

    இந்நிலையில், நடிகை பிந்து கோஷ் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

    • ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST.
    • இந்தப் படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

    விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது. 

    இந்தப் படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட டெஸ்ட் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் படத்தின் கதாப்பாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டு வருகிறது. சித்தார்த் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். நயன் தாரா , மாதவனின் மனைவி குமுதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மாதவனின் கதாப்பாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மாதவம் இப்படத்தில் சரவணன் என்ற கதாப்பாத்திரத்தில் ஒரு ரெசர்ச் செய்யும் நயராக நடித்துள்ளார். கதாப்பாத்திர வீடியோவை நடிகர் சூர்யா அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது " ஆயுத எழுத்து திரைப்படத்தில் இருந்து இப்படம் வரை மாதவன் எந்த படம் நடித்தாலும் அதில் அவரது சிறந்த நடிப்பை மட்டுமே வெளிப்படுத்துவார்" என குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக நடத்திய டிரோன் தாக்குதல் நடத்தியது.
    • இந்தோனேசிய மருத்துவமனைக்கு கயாமடைந்தவர்கள் கொண்டுசெல்லப்பட்டனர்.

    வடக்கு காசாவில் இஸ்ரேல் நேற்று மாலை நடத்திய டிரோன் தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    நேற்று மாலை வடக்கு காசாவில் பெய்ட் லாஹியாவில் பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக நடத்திய டிரோன் தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    அருகில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனைக்கு கயாமடைந்தவர்கள் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. நிவாரணப் பணியை மேற்கொண்டிருந்த அல்-கைர் அறக்கட்டளையைச் சேர்ந்த குழுவை டிரோன் குறிவைத்ததாகப் பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     

    இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தனது அறிக்கையில் பெய்ட் லாஹியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளது.

    இலக்கு வைக்கப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றும் டிரோன்களை இயக்க உபகரணங்களை சேகரித்து வந்தாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் 1 ஆம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது.

    • நாங்கள் இருவரும் கணவன், மனைவி என்ற பந்தத்தில் இருக்கிறோம்.
    • கடந்த 2 ஆண்டுகளாக எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.

    ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என தன்னை அழைக்க வேண்டாம் என ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர், " நாங்கள் இருவரும் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாங்கள் இருவரும் கணவன், மனைவி என்ற பந்தத்தில் இருக்கிறோம்.

    கடந்த 2 ஆண்டுகளாக எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.

    ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, எந்த வகையிலும் நான் அழுத்தம் தர விரும்பவில்லை.

    நாங்கள் பிரிந்திருந்தாலும் அவருக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்றார்.

    • 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஏமாந்ததை உணர்ந்த சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • கிறிஸ் கெயில் தான் தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரதாரர் என்று அவர் என்னிடம் கூறினார்.

    ஐதராபாத்தில் கிரிக்கெட் வீரர் க்றிஸ் கெயில் பெயரை வைத்து ரூ.2.8 கோடி மோசடி செய்ததாக சகோதரன் மீது சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார். 

    அவரது புகாரில், "2019-ல் காபி தூள் தயாரிக்கும் தொழிலை தொடங்கவுள்ளதாகவும், லாபத்தில் 4% பங்கு கொடுப்பதாகவும் சகோதரன் என்னிடம் உறுதியளித்தான். மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் தான் தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரதாரர் என்று அவர் என்னிடம் கூறினார்.

    சகோதரனின் பேச்சை நம்பி நானும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தேன். மேலும், தனது சுற்றுவட்டாரத்தில் இருந்தும் மொத்தம் ரூ.5.7 கோடி திரட்டிக் கொடுத்தேன்.

    ஆரம்பத்தில் எனக்கு லாபம் என பணம் கொடுத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதை சகோதரன் நிறுத்தியுள்ளான். பல நாட்கள் ஆகியும் பணம் வரவில்லையே என நான் சகோதரனிடம் கேட்டபோது, என்னை தகாத வார்த்தைகளில் அவன் திட்டினான். மொத்தமாக ரூ.5.7 கோடி கொடுத்ததில் ரூ.90 லட்சம் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு நன் ஆளாகியுள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    ×