என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக நடத்திய டிரோன் தாக்குதல் நடத்தியது.
- இந்தோனேசிய மருத்துவமனைக்கு கயாமடைந்தவர்கள் கொண்டுசெல்லப்பட்டனர்.
வடக்கு காசாவில் இஸ்ரேல் நேற்று மாலை நடத்திய டிரோன் தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
நேற்று மாலை வடக்கு காசாவில் பெய்ட் லாஹியாவில் பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழியாக நடத்திய டிரோன் தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
அருகில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனைக்கு கயாமடைந்தவர்கள் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. நிவாரணப் பணியை மேற்கொண்டிருந்த அல்-கைர் அறக்கட்டளையைச் சேர்ந்த குழுவை டிரோன் குறிவைத்ததாகப் பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தனது அறிக்கையில் பெய்ட் லாஹியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளது.
இலக்கு வைக்கப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றும் டிரோன்களை இயக்க உபகரணங்களை சேகரித்து வந்தாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 1 ஆம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது.

- நாங்கள் இருவரும் கணவன், மனைவி என்ற பந்தத்தில் இருக்கிறோம்.
- கடந்த 2 ஆண்டுகளாக எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என தன்னை அழைக்க வேண்டாம் என ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர், " நாங்கள் இருவரும் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் இருவரும் கணவன், மனைவி என்ற பந்தத்தில் இருக்கிறோம்.
கடந்த 2 ஆண்டுகளாக எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, எந்த வகையிலும் நான் அழுத்தம் தர விரும்பவில்லை.
நாங்கள் பிரிந்திருந்தாலும் அவருக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்றார்.
- 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஏமாந்ததை உணர்ந்த சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
- கிறிஸ் கெயில் தான் தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரதாரர் என்று அவர் என்னிடம் கூறினார்.
ஐதராபாத்தில் கிரிக்கெட் வீரர் க்றிஸ் கெயில் பெயரை வைத்து ரூ.2.8 கோடி மோசடி செய்ததாக சகோதரன் மீது சகோதரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், "2019-ல் காபி தூள் தயாரிக்கும் தொழிலை தொடங்கவுள்ளதாகவும், லாபத்தில் 4% பங்கு கொடுப்பதாகவும் சகோதரன் என்னிடம் உறுதியளித்தான். மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் தான் தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரதாரர் என்று அவர் என்னிடம் கூறினார்.
சகோதரனின் பேச்சை நம்பி நானும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தேன். மேலும், தனது சுற்றுவட்டாரத்தில் இருந்தும் மொத்தம் ரூ.5.7 கோடி திரட்டிக் கொடுத்தேன்.
ஆரம்பத்தில் எனக்கு லாபம் என பணம் கொடுத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதை சகோதரன் நிறுத்தியுள்ளான். பல நாட்கள் ஆகியும் பணம் வரவில்லையே என நான் சகோதரனிடம் கேட்டபோது, என்னை தகாத வார்த்தைகளில் அவன் திட்டினான். மொத்தமாக ரூ.5.7 கோடி கொடுத்ததில் ரூ.90 லட்சம் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு நன் ஆளாகியுள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்.
- படத்திற்கு இரண்டு வானம் என தலைப்பு வைத்துள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் , அமலா பால், காளி வெங்கட், அம்மு அபிராமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ராம் குமார் இயக்கத்தில் வெளியானது ராட்சசன் திரைப்படம் . இப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.
இந்நிலையில் இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
இப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு நேற்று வெளியிட்டது. படத்திற்கு இரண்டு வானம் என தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் படத்தின் செக்ண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படம் ஒரு ஃபேண்டசி ராம் - காம் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் இசையை திபு நினன் தாமஸ் மேற்கொள்கிறார். படத்தை பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு இராமேஸ்வரம் ரயிலில் ஏறி சிவகங்கை சென்றுள்ளார்
- பல ஆண்டுகளாக கொத்தடிமையாக்கப்பட்ட இவரின் விபரம், தொழிலாளர் நலத்துறைக்கு தெரியவந்தது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே 20 ஆண்டுகளுக்கும் மேல் கொத்தடிமையாக ஆடு மேய்த்த முதியவர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளி அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு ரெயிலில் செல்கையில் டீ குடிக்க இறங்கியவர் தவறுதலாக இராமேஸ்வரம் ரயிலில் ஏறி, விபரம் அறியாமல் சிவகங்கை சென்றுள்ளார்
கடம்பங்குளம் பகுதியைச் சேர்ந்த மலைக்கண்ணு, அவரை கூட்டிச் சென்று ஆடு மேய்க்க வைத்துள்ளார். மலைக்கண்ணு இறந்துவிட, அதே ஊரைச் சேர்ந்த மற்றொருவரும் ஊதியம் இல்லாமல் உணவு மட்டும் கொடுத்து ஆடுமேய்க்க வைத்துள்ளார்.
சொந்த ஊருக்கும் செல்ல அனுமதிக்கப்படாமல் பல ஆண்டுகளாக கொத்தடிமையாக்கப்பட்ட இவரின் விபரம், தொழிலாளர் நலத்துறைக்கு தெரியவந்து விசாரணை நடத்தி குடும்பத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.
அப்பாராவின் மனைவி சீத்தாம்மா இறந்து விட்டதாகவும் மகளுக்கு திருமணமான தகவலும் தெரியவந்துள்ளது. மகள் மற்றும் மருமகனை அதிகாரிகள் வரவழைத்து அப்பாராவை ஒப்படைத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- இந்த போட்டி உலகில் பின்தங்கிவிடுவார்கள் என்றும் தொடர்ந்து பயந்ததாகக் கூறப்படுகிறது.
- கணவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தைகள் மயக்கமடைந்த நிலையிலும் இருப்பதைக் கண்டார்.
ஆந்திரப் பிரதேசத்தில் மகன்கள் சரியாக படிக்காததால் அவர்களை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ONGC) ஊழியராக இருந்தவர் 37 வயதான சந்திர கிஷோர். இவருக்கு ஏழு மற்றும் ஆறு வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் அவர்களை தண்ணீர் நிறைந்த வாளியில் மூழ்கடித்து கொன்றார்.
இதன் பின்னர் அவர் படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்ற அவரது மனைவி அறைக்கதவை திறந்தபோது, கணவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தைகள் மயக்கமடைந்த நிலையிலும் இருப்பதைக் கண்டார்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்திர கிஷோர் தனது மகன்கள் படிப்பில் சிறந்து விளங்கவில்லை என்றால், எதிர்காலத்தில் அவர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும் என்றும், இந்த போட்டி உலகில் பின்தங்கிவிடுவார்கள் என்றும் தொடர்ந்து பயந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மன அழுத்தத்தால், அவர் இவ்வளவு இறுதியில் இந்த முடிவை எடுத்துள்ளார். இதற்கிடையே சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 2024-ஆம் ஆண்டின் 4-ம் காலாண்டில் இந்தியாவும், சீனாவும் வலுவான வா்த்தக விரி வாக்கத்தை பெற்றுள்ளன.
- அமெரிக்காவில் இறக்குமதி வளா்ச்சி நோ்மறையான போக்கில் பதிவாகியுள்ளது.
ஐ.நா. வா்த்தகம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் சா்வதேச வா்த்தக தரவுகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2024-ம் ஆண்டில் உலக அளவிலான வா்த்தகம் ரூ. 104 லட்சம் கோடி அளவுக்கு விரிவடைந்து சுமாா் ரூ. 2,869 லட்சம் கோடி என்ற அளவை எட்டியுள்ளது. அதன்படி சேவைத் துறை வா்த்தகம் 9 சதவீத அளவுக்கும், சரக்கு வா்த்தகம் 2 சதவீதம் அளவுக்கும் சா்வதேச அளவில் விரி வடைந்துள்ளது.
பல வளா்ந்த நாடுகள் வா்த்தகத்தில் சற்று சரிவைச் சந்தித்து வரும் சூழலில், வளரும் நாடுகள் குறிப்பாக இந்தியா மற்றும் சீனா சராசரியை விட சிறந்த வா்த்தக விரிவாக்கத்தைப் பதிவு செய்துள்ளன. 2024-ஆம் ஆண்டின் 4-ம் காலாண்டில் இந்தியாவும், சீனாவும் வலுவான வா்த்தக விரி வாக்கத்தை பெற்றுள்ளன.
இந்தியாவிலும், சீனா விலும் வா்த்தகம் அதிகரித் துள்ளது. குறிப்பாக ஏற்று மதி சராசரியைவிட அதி கரித்து காணப்பட்டது. தென் கொரியாவில் ஏற்று மதி வளா்ச்சி சரிந்திருந்த போதும் வருடாந்திர அடிப்படையில் வளா்ந்த நாடுகளில் வா்த்தக விரிவாக்கத்தில் முன்னிலை வகித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி வளா்ச்சி நோ்மறையான போக்கில் பதிவாகியுள்ளது. ஆனால் ஏற்றுமதி எதிா்மறை வளா்ச்சியை சந்தித்துள்ளது.
இந்தியாவில் சரக்கு வா்த்தகத்தில் இறக்குமதி 8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 6 சதவீதமாக இருந்தது. அதுபோல, சரக்கு வா்த்தகத்தில் ஏற்றுமதி வளா்ச்சி 7 சதவீத வளா்ச்சி யையும், வருடாந்திர அடிப்படையில் 2 சதவீத வளா்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
உலக வா்த்தகம் 2025-ஆம் ஆண்டின் தொடக் கத்தில் நிலையானதாக இருக்கும்.
ஆனால் அதிகரித்து வரும் புவிசாா் பொருளா தார பதற்றங்கள், உலக நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகள், உள்ளிட்ட வற்றால் வரும் காலாண்டு களில் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதை காட்டுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எம்.காம் பட்டதாரியான மகேஸ் பாண்டியன், சீனாவில் பணியில் உள்ளார்.
- பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர், இன்று மாடுமுட்டி உயிரிழந்தார்.
சீனாவில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இளைஞர், மதுரை அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாடு முட்டியதில் உயிரிழந்த மகேஸ் பாண்டியன் (22), எம்.காம் படித்து விட்டு சீனாவில் வேலையில் இருந்துள்ளார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் ஏறுதழுவுதல் அரங்கில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளார்.
அப்போது மாடு முட்டியதில் நுரையீரலில் பலத்த காயமடைந்த மகேஸ் பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
- ஒரு பாப் இசைக் குழுவின் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.
- சம்பவம் நடந்தபோது கிளப்பில் 1,500 பேர் இருந்தனர்.
தெற்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஒரு நைட் கிளப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. மேலும் 100 பேர் வரை காயமடைந்தனர்.
அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் அறிக்கைப்படி, தலைநகர் ஸ்கோப்ஜிக்கு கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோகானி நகரில் உள்ள 'பல்ஸ்' என்ற நைட் கிளப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
ஒரு பாப் இசைக் குழுவின் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது சில இளைஞர்கள் வாணவேடிக்கை சாதனங்களைப் பயன்படுத்தியதால் மேற்கூரை தீப்பிடித்து விபத்தானது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நிகழ்ச்சிக்காக அங்கு கூடியிருந்த ஏராளமனோர் விபத்தில் சிக்கினர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சிகளில் கிளப் கட்டிடம் தீப்பிழம்புகளால் சூழப்பட்டதையும், இரவு வானத்தில் புகை எழுவதும் காணப்படுகிறது. சம்பவம் நடந்தபோது கிளப்பில் 1,500 பேர் இருந்ததாக அறிக்கை கூறுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
- இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
- இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
கார் பந்தயத்தில் மிகவும் பிரபலமானது 'பார்முலா 1' பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான 'பார்முலா 1' கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
'பார்முலா 1' கார் பந்தயத்தின் முதல் சுற்றான ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது.
இதில் மெக்லரன் அணியை சேர்ந்த இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 42.06 நிமிடங்களில் கடந்தார்.
நெதர்லாந்தை சேர்ந்த வெர்ஸ்டாப்பர்ன் (ரெட்புல்) 2-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் ரஸ்சல் (மெர்சிடஸ்) 3-வது இடத் தையும் பிடித்தார்.
பார்முலா 1' கார் பந்தயத்தின் 2-வது சுற்று சீனா கிராண்ட் பிரீ வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
- காவலரை நடனமாடுமாறு முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் வற்புறுத்தியுள்ளார்.
- நடனம் ஆட காவலர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மார்ச் 14 அன்று இந்தியாவில் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக பீகாரில் ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்டியது.
பீகாரில் முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் தனது வீட்டில் தொண்டர்களுடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலரை நடனமாடுமாறு தேஜ் பிரதாப் வற்புறுத்தியுள்ளார்.
நடனம் ஆட காவலர் மறுக்கவே, நடனம் ஆடுகிறாயா? இல்லை உன்னை சஸ்பெண்ட் செய்யவா? என அமைச்சர் மிரட்ட, வேறு வழியில்லாமல் காவலர் நடனம் ஆடியுள்ளார்.
அமைச்சரின் வற்புறுத்தலால் காவலர் நடனம் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சீருடையில் நடனமாடிய காவலர் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக வேறொரு காவலர் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார் என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏ.ஆர். ரகுமானுக்கு நீர்ச்சத்து குறைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
- நோன்பு காலம் என்பதால் ஏ.ஆர்.ரகுமானும் நோன்பு கடைபிடித்து வருகிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று காலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக அவரை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். உடனடியாக அவரை டாக்டர்கள் பரிசோதித்தார்கள்.
அப்போது அவருக்கு நீர்ச்சத்து குறைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் வீடு திரும்பினார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்பட பல்வேறு இந்திய மொழிகளிலும், உலக அளவிலும் இசை அமைத்து வருவதால் ஐதரா பாத், மும்பை, லண்டன் என்று சுற்றிக் கொண்டி ருப்பார்.
அந்த வகையில் லண்டனில் இருந்து நேற்று இரவுதான் மும்பை வழியாக சென்னை திரும்பினார். இன்று காலையில் தூங்கி எழுந்து அமர்ந்திருந்த போதுதான் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
தற்போது நோன்பு காலம் என்பதால் ஏ.ஆர்.ரகுமானும் நோன்பு கடைபிடித்து வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமானுடன் அவரது மகன் அமீன், மகள் இஸ்ரத், சகோதரி ரஹானா ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் உடல் நிலை குறித்து அவரது மகன் அமீன் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
எங்களது ரசிகர்கள், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய அன்பு பிரார்த்தனை ஆதரவு எல்லாவற்றிற்கும் ரொம்ப நன்றி. என் அப்பா நலமுடன் இருக்கிறார் என்பதை உங்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






